Sri Adi Keshava perumal Temple – Korattur

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள்  கோயில் / ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில் – கொரட்டூர்

சென்னையில் உள்ள கொரட்டூரில் பழமையான கோயில்கள் உள்ளது என அறிந்த நான் கடந்த சனிக்கிழமை அந்த கோயில்களை தரிசிக்க விரும்பி சென்றேன் . தற்போது மிகவும் வளர்ச்சி அடைந்துள்ள கொரட்டூர் ஊரின் உள் சென்றால் இன்றும் பழமை மாறாத இடத்தில் அழகிய  குளமும் அதனை சுற்றி அம்மன் கோயில் ,விநாயகர் கோயில் , இந்த பெருமாள் கோயில் மற்றும் சிவன் கோயில் உள்ளது .

பெருமாள் கோயிலை சுற்றி மதில்சுவர் உள்ளது அதில்  சிறிய நுழைவு வாயில் அமைத்துள்ளார்கள், அதன் வழியே உள்ளே சென்றால் அழகிய புல்தரையுடன் கூடிய விசாலமான இடம் உள்ளது . நேர் எதிரே அழகான இரண்டு பெருமாள் கோயில்கள் தனி தனியாக நமக்கு காட்சி தருகிறார் .

முதலில் நாம் இடது புறம் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலை தரிசிப்போம் . நாராயணர் சுகந்தலக்ஷ்மி தாயாரை தன் மடியில் வைத்தபடி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . இக்கோயிலானது கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளது . இந்த சந்நிதியில் ஸ்ரீ ஆலிலை கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளார். தென்மேற்கு மூலையில் காளியநர்த்தன கிருஷ்ணர் மூலமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

அப்படியே நாம் கோயிலை வலம் வந்தால் வடக்கு பக்கத்தில் ஆதி கேசவ பெருமாள் தனி கோயிலாக உள்ளார் . இறைவன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி , பூதேவியுடன் சேவை தருகிறார் . தாயார் அமிர்தவல்லி பெருமாளின் மார்பில் இருந்து நமக்கு சேவை தருகிறார் . இக்கோயிலும் கிழக்கு திசையை நோக்கியே உள்ளது . பெருமாளின் எதிரே கருட சன்னதியும் உள்ளது .  

கி .பி  1340 ஆண்டு ராஜநாராயணன் என்ற மன்னனால் இந்தக் கோயில்கள் சிறியதாக கருவறை அர்த்தமண்டபத்துடன் மட்டும் எழுப்பப்பட்டன என சொல்லப்படுகிறது . இப்பகுதி மக்கள் இக்கோயிலை லட்சுமி நரசிம்மர் கோயில் என்றே அழைக்கின்றனர் .

Photos :

https://alayamtrails.blogspot.com/2022/10/sri-adi-keshava-perumal-temple-korattur.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 முதல் காலை 10 .30 மணி வரை , மாலை 5 .30 முதல் இரவு 8 .30 மணி வரை / விசேஷ நாட்களில் இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டது .

செல்லும் வழி :
கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக சென்று பாடி சரவணா ஸ்டார் தாண்டி கொரட்டூர் செல்லும் சிக்னல் வரும் அதை தாண்டி சென்று வலதுபுறம் சென்றால் இக்கோயிலை அடையலாம் .

அருகில் உள்ள கோயில் :
1 . ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் – கொரட்டூர்

2 . திருவாலீஸ்வரர் கோயில் – பாடி 

Location :

Leave a Reply