Pancharama Kshetras

பஞ்சாராம ஷேத்திரங்கள்

Pancharama Kshetras
Source from Google Thanks

தாரகாசுரன்  என்ற அரக்கன் தனக்கு ஒரு பையனால் மட்டுமே இறப்பு ஏற்படவேண்டும் என்ற வரத்தை பெற்றான் அதனால் அவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான் ,அவனின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தாரகாசுரனை அழிக்க சிவனிடம் வேண்டியபோது அவர் தன்னுடைய பக்தர் என்று கூறி மறுத்துவிட்டார் ,அவர்கள் மகா விஷ்ணுவை நாடியபோது அவர் முருகப்பெருமானை நாடுமாறு கூறினார் .தாரகாசுரன் தன் கழுத்தில் வைத்திருந்தான் .முருக பெருமான் தாரகாசுரனை அழித்தவுடன் அந்த ஆத்மலிங்கம் ஐந்து பாகங்களாக உடைந்தது அவற்றை இந்திரன் ,சுப்பிரமணியர் ,சந்திரன் ,ஸ்ரீராமர், சூரியன் அகியோர்களால் ஐந்து இடங்களில்  பிரதிஷ்டை செய்யப்பட்டது  .இதில் அமராபுரம்,குமாராராம் ஆகிய ஊர்களில் உள்ள பானங்கள் உயரமானவை ஆதலால் இவைகள் இரண்டு மாடி அமைப்பு கோயில்கள் .

கோயில்களின் விவரங்கள்

1 . அமராவதி – பால சாமுண்டேஸ்வரி சமேத அமரேஸ்வரர் – அகோர முகம் – சாந்தி ஸ்வரூபம் – இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

2 . திராஷாராம் -மாணிக்காம்பாள் சமேத  பீமேஸ்வரர்  – தத்புருஷ முகம் -ஆத்ம ஸ்வரூபம் –சூரியனால் பிரிதிஷ்டை செய்யப்பட்டது

3 . சாமல்கோட் – பால திரிபுர சுந்தரி சமேத குமாரராம பீமேஸ்வரர் -வாமதேவர் முகம் -சத்திய சுந்தர ஸ்வரூபம் -சுப்ரமணியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

4 . பீமாவரம்- பார்வதி ,அன்னபூரணி சமேத சோமேஸ்வரர் -சத்யோஜ்ஜாதர்  முகம் -என்றும் புதியவர் ஸ்வரூபம் -சந்திரன் பிரதிஷ்டை செய்தார் .

5 . பால கொல்ல – பார்வதி சமேத ராமலிங்கேஸ்வரர் -ஈசான முகம் -உலகமெல்லாம் தான் ஆனவர் ஸ்வரூபம் -ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

இக்கோயில்கள் ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் ,கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய  மூன்று மாவட்டத்தில் அமைந்துள்ளது.  

இக்கோயில்களை பற்றி நாம் விவரமாக காண்போம்.

Pancharama temples details:

  1. Amaravathi- Amirthalingeswarar,Bala samundeswari-Indra worshipped
  2. Draksharama-Bhimeswara,Manikyambal-Surya worshipped
  3. Bhimavaram-Someswarar,Rajarajaeswari-Chandra worshipped
  4. Palakollu-Ksheera Ramalingeswarar,Parvathi-Vishnu Worshipped
  5. Samalkota-Kumara Bhimeswarar,Bala Tiripurasundari-Murugan Worshipped

Those places available in Andra pradesh state and covered three district of East Godavari ,West Godavari and Guntur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *