Sri Vadaranyeswarar Temple- Tiruvalangadu

ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோயில் – திருவாலங்காடு

Sri Vadaranyeswarar Temple- Tiruvalangadu

இறைவன் : வடாரண்யேஸ்வரர்

தாயார் : வண்டார் குழலி

தல விருச்சகம் : ஆலமரம்

தீர்த்தம் : முக்தி தீர்த்தம்

ஊர் : திருவாலங்காடு

புராண பெயர் : பழையனூர் , ஆலங்காடு

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் ,காரைக்கால் அம்மையார்

 • தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 248 வது தலமாகும் . தொண்டை மண்டல பாடல் பெற்ற தலத்தில் 15 வது தலமாகும் .
 • பரணி நட்சத்திரத்திரர்களுக்கு உரிய கோயிலாகும்
 • சிவபெருமான் நித்தமும் நடனமாடும் பஞ்ச சபைகளில் இது இரத்தின சபையாகும் .
 • அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடமாகும் .
 • இக்கோயில் சோழர்கள் மற்றும் பல்லவர்கள் அகியோர்களால் கட்டப்பட்டு விரிவாக்க செய்யப்பட்டது . முதலாம் பராந்தக சோழன் காலத்து கோயிலாக இருக்கும் என்று இக்கோயிலில் உள்ள கற்களின் வாயிலாக தெரிகிறது .
 • இக்கோயில் சனி பகவானின் மகன் மாந்தீஸ்வரர் இறைவனை நோக்கி தவம் புரிந்து தோஷத்திலிருந்து விடுபட்டார் ஆதலால் இக்கோயிலில் மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்தால் அனைத்து விதமான சனி தோஷங்களிலும் இருந்து விடுபடலாம் .
 • 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் தலைகீழாக காரைக்காலிலிருந்து இக்கோயில் வரை நடந்தே வந்து இறைவனின் ஆடலை காண வந்தார் ,சிவபெருமானே அவரை அம்மையாரே என்று தான் அழைப்பார் . இக்கோயிலில் அவர் மூத்த திருப்பதிகம் எழுதினார் . இக்கோவிலில் இறைவனின் திருஅடியிலேயே மோக்ஷத்தை அடைந்தார் .ஜீவ சமாதி நடராஜர் அரங்கத்தில் உள்ளது .
 • வரலாறு : சும்பன் ,நிசும்பன் என்ற இரு அசுரர்கள் இக்காட்டில் தங்கி இங்கு வாழ்ந்த வந்த மனிதர்களையும் ,தேவர்களையும் துன்புறுத்திவந்தான் ,அவர்களின் அட்டகாசத்தை தாங்கமுடியாமல் அவர்கள் பார்வதி அம்மையாரிடம் முறையிட்டனர் அவர் தன பார்வையால் காளியை உருவாக்கினார் ,காளி இந்த அலங்காட்டுக்கு வந்து அசுரர்களை அழித்து இங்கயே தங்கிவிட்டார் ,அசுரர்களின் ரத்தத்தை உண்டதால் அவள் பல கோர செயல்களை செய்தால் , இதனால் கார்கோடக முனிவர் சிவபெருமானிடம் முறையிட்டார் ,அதனால் சிவபெருமான் கோர வடிவம் பூண்டு ஆலங்காட்டை அடைந்தார் .இவரை கண்ட காளி ‘நீ என்னுடன் நடனமாடி வெற்றி பெற்றால் தான் இவ்விடத்தை விட்டு சென்றுவிடுவதாக ‘ கூறினார் .

இறைவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார் ,அப்போது தன் காதில் உள்ள மணியை கிழே போட்டு தன் இடது கால் பெருவிரலால் எடுத்து தன் காதில் திரும்பவும் தன் காதில் பொருத்தினார் . இதை தன்னால் செய்யமுடியாது என்று காளி கூறி தன் தோல்வியை ஒப்புக்கொண்டார் . அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி ‘என்னையன்றி உனக்கு சமமானவர் யாரும் கிடையாது’ எனவே இத்தலத்தில் வந்து என்னை வந்து வணங்குபவர்கள் முதலில் உன்னை வழிபாடு செய்துவிட்டு என்னை வண்ணங்கினால்தான் முழு பலனை அடையமுடியும் என்று கூறி மறைந்தார் , எனவே இக்கோயிலுக்கு போகும் பொது இக்கோயில் பின்புறத்தில் உள்ள காளி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பின்பே சிவபெருமானை வழிபாடு செய்யவேண்டும்.

 • இக்கோயில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன , மற்றும் மிக பெரிய கோயிலாகவும் உள்ளது.
 • அம்மாவாசை தர்ப்பணம் செய்ய சிறப்புமிக்க கோயில்களில் இக்கோயிலும் ஒன்று .
 • இக்கோயிலில் மார்கழி திருவாதிரை நாளென்று மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
 • இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார் .
 • நடராஜருக்கு 100 கால் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெறும் . ஸ்படிகம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டிலும் ஆன லிங்கங்கள் இங்கு உள்ளன .
 • அருணகிரிநாதர் இக்கோவில் உள்ள முருகனை பற்றி திருப்புகழில் பாடியுள்ளார் . மற்றும் பட்டினத்தார் இக்கோயில் இறைவனை பற்றி பாடியுள்ளார் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-vadranyeswarar-tempe-tiruvalangadu.html

செல்லும் வழி:
திருவள்ளுவர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களிருந்து 17 km தொலைவில் உள்ளது . திருப்பதிக்கு மகிழ் ஊர்ந்தில் செல்லும் போது இக்கோயிலுக்கு சென்று வரலாம் . சென்னை அரக்கோணம் மின்சார ரயிலில் சென்றால் இக்கோயிலுக்கு செல்லலாம் .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 – 12 .00 மாலை 4 . 00 -8 .00 வரை

Location

Leave a Reply