Sri Munkudumeeswarar Temple- Pon Vilaintha Kalathur

ஸ்ரீ முன்குடுமீஸ்வரர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்

Sri Munkudeeswarar Temple- Ponvilaintha kalathur
Tks Google(tks Tamilnadu tourism)

இறைவன் : முன்குடுமீஸ்வரர்

தாயார் : காமாட்சி

தீர்த்தம் : வில்வ தீர்த்தம்

தலவிருச்சகம் : வில்வம்

ஊர் : பொன்விளைந்த களத்தூர்

மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு

  • இக்கோயில் ராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது ,1300 வருடங்கள் பழமையான கோயில் .
  • இவ் கோயிலின் இறைவன் தலையில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது.இது ஒரு அபூர்வ அமைப்பாகும் .
  • இக்கோயின் பங்குனி பிரமோசத்தின் போது சண்டீகேஸ்வரருக்கு பதிலாக கூற்றுவநாயனார் புறப்படுகிறரர் .
  • இக்கோயில் ஸ்வாமியை தரிசிக்க வந்த மன்னன் அவ்வேளையில் அர்ச்சகர் பூஜைகள் முடித்து இறைவனுக்கு சூடிய மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார் ,மன்னர் வருகையை அறிந்த அவர் தன மனைவி சூடிய மாலையை எடுத்து வந்து மன்னருக்கு போட்டார் அப்போது அதில் முடி இருப்பதாய் கண்டு மன்னர் அர்ச்சகரிடம் கோபமாக இது என்ன முடி என்று வினவினார் அதர்க்கு அவர் இது இறைவனின் சடை முடியே என்று கூறினார் ,மன்னன் இறைவனின் தலையில் உள்ள முடியை காட்டுமாறு கேட்டார் அதர்க்கு நாளை காட்டுவதாக கூறினார் ,மன்னன் நாளை காட்டவில்லை என்றால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்து கிளம்பினார் , அர்ச்சகர் கலங்கியபடி அன்று இரவு முழுவதும் இறைவனை மனம் உருகி வேண்டினார் , மறுநாள் மன்னர் வந்தார் அர்ச்சகர் இறைவனுக்கு தீபாராதனை காட்டினார் அப்போது இறைவனின் பாணலிங்கத்தின் முன் கொத்தாக முடி இருப்பதை கண்டார் மன்னர் அவர் மகிழ்ந்தார் . அர்ச்சகருக்கு குடுமியுடன் காட்சி தந்ததால் முன்குடுமீஸ்வரர் என்ற பெயர் பெற்றார் .
  • கூற்றுவநாயனார் சிவக்கோயில்கள் பலவற்றிற்கு திருப்பணி செய்து தொண்டுகள் பல செய்தார் அவர் அவ்வாறு திருப்பணி செய்த கோயில்களில் இக்கோவிலுக்கு ஒன்று . இவர் சிவனால் மணிமகுடம் சூட்டப்பட்டவர் ,இவருக்கு மரியாதை செய்யும் விதமாக பங்குனி மாதத்தில் நடக்கும் பிரமோசவத்தில் சண்டீகஸ்வருக்கு பதிலாக இவர் ஊர்வலம் வருவார் . இவருடைய சிற்பம் மண்டபத்தின் முன் பகுதியில் உள்ளது .
  • தஞ்சாவூர் அரண்மனையில் அரசவை புலவராக இருந்த புகழேந்தி பிறந்த ஊர் இதுவாகும் .

செல்லும் வழி:
செங்கல்பட்டிலிருந்து 10 km தொலைவில் உள்ளது , செங்கல்பட்டிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன,

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 -10 .30 மாலை 5 .00 – 8 .30

அருகில் உள்ள கோயில்கள் :
1 . லட்சுமி நரசிம்மர் கோயில்

2 . கோதண்டராமர் கோயில்

Location Map

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *