Sri Thyagarajar Temple- Thiruvarur

ஸ்ரீ தியாகராஜர் கோயில் – திருவாரூர்

இறைவன் : தியாகராஜர் , வன்மீகநாதர், புற்றீடங்கொண்டார்

இறைவி : கமலாம்பிகை ,அல்லியங்கோதை ,நீலோத் பாலாம்பாள்

தல விருச்சம் : பாதிரிமரம்

தல தீர்த்தம் : கமலாயம்,சங்குதீர்த்தம் ,வாணி தீர்த்தம்

ஊர் : திருவாரூர்

மாவட்டம் : திருவாரூர் ,தமிழ்நாடு

பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 87 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்களில் 276 இல் 150 வது தலமாகும் .அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடம் ஆகும் .சப்த விடங்களில் ஒன்று .

தமிழகத்தில் உள்ள மிகவும் புகழபெற்ற சிவத்தலங்களில் இக்கோயிலும் ஒன்று .இக்கோயில் அதிக சன்னதிகள் கொண்ட மிகவும் பிரமாண்டமான பெரிய கோயிலாகும் .பிறக்க முக்தி திருவாரூர் என்று புகழப்படும் தலம்.

இக்கோயில் 9 ராஜகோபுரங்கள் ,80 விமானங்கள் ,12 பெரிய மதில்கள் ,13 பெரிய மண்டபங்கள் ,15 தீர்த்த கிணறுகள் ,3 நந்தவனங்கள் ,3 பெரிய பிரகாரங்கள் உள்ளன .ஆலயத்தின் பரப்பளவு 5 வேலி,அதே போல் கமலாயத்தின் பரப்பளவும் 5 வேலி .

மூன்றாம் சுற்றில் தேவாகிரிய மண்டபம் உள்ளது .இதை வணங்கிவிட்டு கோயிலுக்கு செல்வதே மரபாகும் .7 கோபுரங்கள் ,வீதி பிரகாரங்களை சேர்த்து 5 பிரகாரங்களை கொண்டது .

தியாகேசர் எழுந்தருளும் 7 விடங்க தலங்களில் ஒன்று .சப்த விடங்கத் தலங்களில் இத்தலம் ‘மூலாதாரத் தலம் ‘. தியாககேசப் பெருமான் ராஜாதிராஜர் என்பதால் அவர் தனியாக எழுந்தருள்வதில்லை . அவருடன்  1 . அருள்பாடியார் , 2 . உரிமையில் தொழுவார் .3 .உருத்திரப் பால்கணத்தார் ,4 .விரிசடை மாலிரதிகள், 5 .கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார் .

இக்கோயில் தேர், திருவிழா ,திருக்கோயில் ,திருக்குளம் ஆகியன மிகவும் புகழ் பெற்றவை .திருவாரூர் தேர் மிகவும் பெயர் பெற்றது .மற்றும் அத்தேர் ஆடி ஆடி தெருக்களில் வருவது கொள்ளை அழகு .

தண்டியடிகள் ,கழற்சிங்கர் ,செருத்துணையார்,விறன்மிண்டர் ,நமிநந்தி அடிகள் ஆகிய நாயன்மார்கள் திருத்தொண்டு செய்த இடம் .பரவை நாச்சியார் வாழ்ந்த இடம் .தண்டியடிகள் நாயனார் ,இசைஞானியார் நாயன்மார் ஆகியோர் அவதரித்த தலம் .

தெருவினிற் பொலியுந் திருவாரூர் ரம்மானே ‘ இம் மணிமுத்தாற்றில் இப் பொன்னை இட்டு ,ஆரூர் கமலாயத் திருக்குளத்தில் எடுத்து கொள்‘ என்று விருத்தாச்சலம் முதுகுன்றத்தீசரால் சுந்தரரை பணிக்கப்பட்டு ,அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்ட தலம் . சுந்தரர் வேண்டி கொண்டதன் பேரில் ,அவருக்காக இத்தல ஈசன் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற  பெருமையுடைய திருத்தலம் . சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற தலம் . முசுகுந்த சோழன் ,மனு நீதி சோழன் ஆகியோர் ஆட்சி செய்த தலம்

கருவரையில் வன்மீகநாதர் சுயம்புவாக வீற்றியிருக்கிறார் .ஈசனுக்கு வலப்புறமாக சற்றே பின்னால் ஒரு பெட்டியில் மரகத்தாலான வீதிவிடங்கள் எழுந்தருளியிருக்கிறார் . வன்மீகநாதர் சன்னதிக்கு வலப்புறம் தியாகசாகர் இரத்தின சிம்மாசனத்தில் முன்புறம் இருவாள் படையும் ,ஒரு கையில் பூச்செண்டும் கொண்டு திருத்தோற்றம் அளிக்கிறார் .சபாபதி மண்டபத்தில் பின்பக்கத்தில் அம்மன் கமலாம்பிகை ,பாதுகா குடிகாசனத்தில் அமர்ந்தபடி அதிசிய திருக்கோலத்தில் குடிகொண்டுள்ளாள் . தாயார் ஈசனை போல் சிரசில் கங்கையும் ,பிறையையும் சூடியுள்ளான் .

வெளிப்பிரகாரத்தில் 6 சீடர்களுடன் தக்ஷிணாமூர்த்தி அருள்புரிகிறார் . இல் தலத்தில் நவகிரகங்கள் தன் திசைகளை நோக்காமல் வரிசையாக நின்ற கோலத்தில் தியாகராஜரையும், கமலாம்பிகையும் தரிசித்து கொண்டிருக்கிறார்கள் .

தல வரலாறு :

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவன் தீயாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார் .திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவன் நடனமாடினார் .பின் இம் மூர்த்தத்தை இந்திரன் வரமாக பெற்று பூசித்தார் . அதன் பிறகு முசுகுந்த சக்கரவத்திக்கு இந்திரன் வழங்கினார் .இதுபோல் ஆறு விடங்கர்களையும்  இந்திரன் சக்கரவத்திக்கு கொடுத்தார் .மூல லிங்கம் பிரிதிஷ்டை செய்த இடம் ஆரூர் . மற்ற விடங்கர்களை திருநள்ளாறு ,திருமறைக்காடு ,திருவாய்மூர் ,திருக்காரைவாசல் ,திருக்கோளிலி ,நாகப்பட்டினம் போன்ற இடங்களில் பிரிதிஷ்டை செய்தார் .விடங்கள் என்றால் உளியால் செதுக்கப்படாதது என்று பொருள் .இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து ஈசனை பூசிப்பதாக ஐதீகம் .

இந்தீரன் தியாகேசரை இந்திர லோகம் விரும்பி அழைத்தார் ,அதர்க்கு இறைவன் இந்திரனை ‘கிழக்கு வாசலிலேயே இரு தான் அந்த வழியாக வரும்போது அழைத்து கொண்டு போ‘ என்றார் .இறைவனுக்கு திருவாரூரே பிடித்து போயிருந்தால் அவர் கிழக்கு வாசல் வழியே வருவதும் ,போவதும் கிடையாது .

திருவாரூரில் திருமாலை மணக்க சிவனை நோக்கி திருமகள் தவம் செய்த இடமே கமலாலயம் .இதன் பெயரே புஷ்கரனியின் திருநாமமாக விளங்கியது .

சோழனது நீதியை உலகுக்கு காட்டிய கல் தேர் ,தேர்க்காலில் கன்றுக்குட்டி ,மணியடிக்கும் தாய்ப்பசு ,மனுநீதி சோழன் ,அரச கட்டளையை  கேட்டு திகைப்புறும் அமைச்சர் றன்று ஒரு சிற்ப வரலாற்றினை இஷ்டி வாசல் கோபுரத்தின் எதிரில் காணலாம் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 முதல் இரவு 8 .00 மணி வரை திறந்திருக்கும் .

தொலைபேசி எண்: 04366 -242343

செல்லும் வழி:

திருவாரூரின் நகரில் அமைந்துள்ளது .மயிலாடுதுறை ,கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன .

இக்கோயிலின் உள்ளேயே திருவாரூர் அறநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது .மற்றும் இவ் நகரின் கிழக்கு ரத வீதியில் ஆரூர் பறவையுண்மண்டனி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவத்தலம் உள்ளது .

Thiruvarur is the biggest massive temple that i have ever seen. The temple complex covers about 33 acres, and is one of the largest in India.

The temple is huge in size and importance, with 9 Rajagopuras, 80 Vimanas, 12 tall walls, 13 mandaps, 15 wells of Theertha importance, 3 gardens, 3 prakaras, 365 Shiva Lingas representing the days of the year, shrines numbering above 100, 86 Vinayaka idols and temples within the temple numbering above 24. All the Navagraha planets are on straight line facing the Lord. The Rath of Tiruvarur is biggest in size and beautiful.

Location:

1 Comment

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *