Sri Pasupatheeswarar Temple - Avoor

Sri Pasupatheeswarar Temple – Avoor

ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயில் – ஆவூர்

Sri Pasupatheeswarar Temple - Avoor

இறைவன் : பசுபதீஸ்வரர் , அஸ்வத்தநாதர், ஆவூருடையார்.

இறைவி : மங்களாம்பிகை , பங்கஜவல்லி

தல விருட்சம் : அரசு

தல தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் , காமதேனு தீர்த்தம்

ஊர் : ஆவூர்

மாவட்டம் : தஞ்சாவூர்  , தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார் திங்கள்

கண்ணியர் என்றென்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊராம்

விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகழல் சோலை சுலாவி எங்கும்

பண்ணியல் பாடல்அ றாத ஆவூர்ப் பசுபதி ஈச்சரம் பாடுநாவே

– திருஞானசம்பந்தர்

இக்கோயிலானது தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 21 வது தலமாகும் . பஞ்சபைரவர்கள் உள்ள கோயில் என்பதால் பஞ்சாபைரவ தலம் என்று அழைக்கப்படுகிறது . பித்ருதோஷம் போக்கும் தலம் .கோச்செங்குட்சோழன் கட்டிய யானை புக முடியாத  72 மாட கோயில்களில் இக்கோயிலும் ஒன்று .

கோயிலமைப்பு :

அழகிய சிறிய கிராமத்தில் கிழக்கு நோக்கி ஐந்து அடுக்கு இராஜகோபுரத்துடன் இக்கோயில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது . தற்போது கோயில் புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டுருக்கிறது . கோயிலின் உள் நுழைந்தால் நாம் முதலில் தரிசிப்பது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். பின்பு நாம் மாடக்கோயிலை பார்க்கலாம் ,  இறைவன் சந்நிதி 30 அடி உயரத்தில்  ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள 24  படிகள் மூலம் ஏறி இறைவன் குடிகொண்டுள்ள கட்டுமலையை அடையலாம். கட்டுமலை ஏறி உள்ளே நுழைந்தால் மகாமண்டபம், அர்த்த மண்டபம், அதையடுத்து கருவறையில் மூலவர் பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் மங்களாம்பிகை இங்குள்ள  குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இவருக்கு நெற்றிகண்  உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும் . பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. சம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் 3-வது பாடலில் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே என்று குறிப்பிட்டிருந்தாலும், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சந்நிதி மங்களாம்பிகை அம்பாள் சந்நிதியே.

பஞ்ச பைரவ தலம் :

இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக சிவனை நோக்கி இருப்பதாய் நாம் தரிசிக்கலாம் .இந்த பைரவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் எனப்படுவர். இவர்களை தசரதர் வந்து வணங்கி தன்னுடைய பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டுளார் .

தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வணங்கினால் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வனையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும் .

 தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை உட்பிரகாரத்தில் நாம் காணலாம். இவ் தலத்திற்கு வந்து தசரதர் இவ் சிவபெருமானை வணங்கியுளார் . சப்த மாதர்களின் திருஉருவங்களும் உட்பிரகாரத்திலுள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்குள்ளது.

அப்படியே நாம் கீழிறங்கி  வந்து கோயிலின் உள் பிரகாரத்தை  வலம் வந்தால் தெற்கில் தட்சணாமூர்த்தியும் , மேற்கில் நிருதி கணபதியும் , வில்லுடன் கூடிய முருகர் மற்றும் கஜலக்ஷ்மி உள்ளார் . இந்த முருகன், வேட்டையாடும் வடிவில், கைகளில் வில் மற்றும் அம்புகளுடன், வழக்கமான வேலுக்கு  மாறாக காட்சியளிக்கிறார்.வடக்கே வில்வமரமும் அதன் கீழே நாகமும் உள்ளது .

தல வரலாறு:

 ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.

வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது. காமதேனு இவ்வுலகிற்கு முதலில் வந்தடைந்த கோவிந்தகுடி என்ற இடம் அருகிலுள்ளது. ஆலயத்தின் கொடிமரத்தில் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது.

கல்வெட்டு :

கோச்செங்க சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த மேற்கட்டுமானம் முதலில் 9 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது, பின்னர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் நாயக்கர்களால் விரிவுபடுத்தப்பட்டது. கோவிலுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் பற்றிய கல்வெட்டுகள் III இராஜேந்திர சோழனின் 3 வது ஆட்சி ஆண்டு காலத்திலிருந்தே உள்ளன.

கல்வெட்டுச் செய்தியில் “நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் ” என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2025/06/sri-pasupatheeswarar-temple-avoor.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தொலைபேசி எண் : 9159009614 , 04374 – 267175

செல்லும் வழி :

கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கோவிந்தகுடி, மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் கோவிந்தகுடியை அடுத்து ஆவூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

அருகில் உள்ள தலங்கள்:

1 .  கர்ப்பரக்ஷம்பிகை சமேத  முல்லைவனநாதர் கோயில் – திருக்கருகாவூர்

2 . தேனுபுரீஸ்வரர் கோயில் – பட்டீஸ்வரம்

3 . சாட்சிநாதசாமி  கோயில் – அவளிவணநல்லூர்

History in English

The temple is the 21st head of the Cauvery Tenkarai heads of the 276 Shiva places of Devara. It is called the Punjabiravara since the Temple of the Panchabiravas. One of the 72 -storey temples that the elephant built by Kochengutzholan was built.

Temple:

The temple is a huge look at the beautiful small village with a five -tier Rajagopuram to the east. The temple is currently undergoing work. When the temple enters, we first see the flag, altar and nandi hall in the East. Then we can see the Madakkoil, the Lord is located on a hill at a height of 30 feet. The Lord can climb through 24 steps in the southern outer space and reach the drunken Katumalai. If you enter the Katumalai, the Mahamandapam, Artha Mandapam, then in the sanctum sanctorum, Pasupadeeswarar Swayambu Lingam Thirumeni will be seen to the east. There are two Ambal Sabhas, Mangalampigai and Pankajavalli on the south side of the Mahamandapam. It is consecrated from the pond here. He has a forehead and is a special feature. Pankajavalli Amman is very ancient. Although Sambandar refers to the 3rd song in his Devarabadam, Avurp Pasupathiyacharam is the one who wants to play the role, but the specialist in this place is Mangalampigai Ambal.

Pancha Bhairavar sthalam:

This site is a Pancha Bhairava sthalam. In the Mahamandapam, we can see that the western view of the western 4 Bhairava murthy and a bhirava murthy to the north are towards Lord Shiva. Dasaratha came and worshiped them and was free from his curse.

If you worship Bhairav ​​on the teapot Ashtami, you will get rid of all the disorders caused by Billy, Sunil, Eval and Doing. Fear of death, the risk of vehicle accident, and the unity of the family.

 In the interior of the sculpture of worshiping Dasaratha Eesan. Dasaratha came to this head and worshiped Lord Shiva. The scriptures are also in the interior. Here is the Navagraha.

If we come down and come down the innermost state of the temple, Dakshinamurthy in the south, Niruti Ganapathi in the west, Murukar and Kajalakshmi with the bow. This Murugan looks contrary to the usual Vella, with the bow and arrows in the hands of the hunting, the archery tree and the bottom of it.

History:

 At one time, the competition arose in Adi Sadan and the gas. Vayudevan tried to shake the mountain and threw strong winds to shook the mountain. The gods feared the competition of these two. At the request of the Devas, Adi Sedan relaxed the Tanpidi. The Talapuranam states that this is the right time, the gas transplants in two peaks and released one of the South in Avur and the other in the nearby Thirunallur.

Kamadhenu, who was cursed by Vashishtha, came to the world on the advice of Brahma and worshiped the Lord in this place. This place is known as Avur because of the worship of A (cow). Govindagudi is the first to come to Kamadhenu in this world. On the flag of the temple is a sculpture of milk on the Shiva lingam.

Inscription:

This is one of the temples built by Kochenga Chola. The West was originally built in the Chola period in the 9th century, and then expanded by the Thanjavur Nayaks about 500 years ago. Inscriptions on subsidies given to the temple have been from the year of the III Rajendra Chola’s 3rd reign.

In the inscription message, the Lord refers to “Pasupatheeswaramudar of the Avurk of the Nithyavinoda Valanga”.

Open time:

Open from 6 am to 11 pm and 4 pm to 8-30 pm.

Telephone Number: 9159009614, 04374 – 267175

The way to go:

About 12 km from Kumbakonam. Avoor is next to Govindagudi on the road leading to Thanjavur via Govindagudi and Melatur. There are city bus facilities from Kumbakonam.

Location:

திருச்சிற்றம்பலம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply