Sri Thuravu Melazhagar Temple- Salupai

துறவு மேல் அழகர் கோயில் -சலுப்பை

Elephant Statue

நமது நாடு அதிகமான கிராமங்களால் ஆனது ,நமது கலாச்சாரங்களும் பண்பாடுகளையும் கிராம மக்களால் ,மட்டுமே நம்மால் அதிகமாக அறியமுடிகிறது ,அவர்கள் தன குடும்பத்திற்காகவும் தன ஊரை காக்கவும் கடவுளுக்கு கோயில்களை கட்டி வணங்கிவந்தனர் ,அவைகள் இன்று குலா கோயிலாகவும் ,ஊர் காவல் தெய்வங்களாகவும் இருக்கின்றன .இக்கோயிலுக்கு பற்பல ஆண்டுகளாக விசேஷ நாட்கள் மற்றும் காது குத்துதல் ,மொட்டை அடித்தல் போன்ற விஷயங்களுக்கும் இவ் கோயில்களுக்கு தன குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்று பொங்கல் இட்டு ,பலிகளை இட்டு கொண்டாடி மகிழ்வார்கள் .அவ்வாறு சிறப்பு மிக்க மற்றும் அதிக வருடங்கள் கண்டா கிராம கடவுள்களையும் ,கோயில்களையும் இவ் பகுதியில் நாம் காணலாம்

Sri Thuravu Melazhagar Temple- Salupai
  • சாளுக்கிய படைகளை சோழ படையினர் தோற்கடித்து வெற்றி கண்டதன் நினைவாக “சாளுக்கிய குலா நாசினி “ என்று இக் கிராமத்திற்கு பெயர் சூட்டப்பட்டது ,அதுவே காலப்போக்கில் மருவி ‘சலுப்பை ‘ என்று இப்போது அழைக்கப்படுகிறது . இவ்வூரில் தான் “துறவு மேல் அழகர் ” ஜீவ சமாதி உள்ளது. துறவு என்றால் கிணறு ,கிணற்றின் மீது உட்காந்திருந்து தவமிருந்த முனிவரை அரூபமாக வழிபடுவதால் ‘துறவு மேல் அழகர் கோயில் ” என்று அழைக்கப்படுகிறது .
Sri Thuravu Melazhagar Temple- Salupai
  • 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலாகும் ,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முனிவர் கேரளாவில் இருந்து தான் பூஜை செய்த கலசத்துடன் இவ்வழியாக சென்றார் ,அப்போது அவருக்கு ஒரு பெருமாள் கோயில் தென்பட்டது ,அக்கோயிலுக்கு சென்று ஸ்வாமியை வழிபட எண்ணினார் ,தான் வைத்திருந்த கலசத்தை தரையில் வைக்கக்கூடாது என்பதால் பெருமாள் கோயிலுக்கு அருகில் இருந்த அக்ராஹாரத்து  கிணற்றில் இறக்கி தண்ணீரில் மிதக்கும்படி வைத்துவிட்டு கோயிலுக்கு சென்று ஸ்வாமியை தரிசித்துவிட்டு தவம் செய்ய தொடங்கிவிட்டார் . அப்போது அக்ராஹாரத்தில் இருந்து இரண்டு பெண்கள் கிணற்றில் நீர் இறைப்பதற்காக குடத்தை கிணற்றுக்குள் விட்டனர் அப்போது குடம் எதோ பொருளின் மீது பட்டு சத்தம் வருவதை கேட்டு அவர்கள் கிணற்றில் எட்டி பார்த்தனர் .இதனை ஞான திருஷ்டியால் கண்டுகொண்ட முனிவர் கோபமுற்று அவர்கள் மறைந்து போக சாபம் விட்டார் அடுத்த கணமே இருவரும் மறைந்து போனார்கள் .இனிமேல் யாரும் இவ் கிணற்றுக்குள் வந்து கலசத்தை எடுக்க முயலக்கூடாது என்பதற்காக அவர் அந்த கிணற்றின் மீதே தவம் செய்ய தொடங்கினார் ,அவ்வாறே அவர் ஜீவ சமாதியும் அடைந்துவிட்டார்.
Sri Thuravu Melazhagar Temple- Salupai

அந்த சமாதியை இப்போது நாம் இவ்விடத்தில் பார்க்கிறோம் ,அவரின் சமாதியின் கிழே இப்போதும் தண்ணீர் ஊற்றாக வந்துகொண்டிருக்கிறது .சமாதியின் மேல் கருங்கல்லால் ஸ்தம்பத்தை அமைத்து முனிவரை அரூபமாக வழிபட்டு கொண்டிருக்கிறார்கள் .

இக்கோயிலின் கருவறைக்குள் இன்றும் பெண்களை அனுமதிப்பதில்லை ,வயதான பெண்களையும் மற்றும் குழந்தைகளையும் மட்டுமே அனுமதிக்கிறார்கள் ஏனென்றால் அவர் துறவு பூண்ட முனிவரின் சமாதி என்பதால் பெண்கள் கருவறை வரை அனுமதிப்பதில்லை .கருவறை முன் உள்ள மண்டபம் வரை பெண்களை அனுமதிக்கிறார்கள் .தற்போது அங்கு ஒரு தொலைக்காட்சி வழியாக தரிசிக்க வழிசெய்துள்ளார்கள்.

Sri Thuravu Melazhagar Temple- Salupai

துறவு மேல் அழகர் முன் நந்திகேஸ்வரரை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.இதனால் இவரை சிவபெருமானின் வடிவமாக வழிபடுகிறார்கள் என்று தெரிகிறது .

இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் திருமண பாக்யம் ,குழந்தை பாக்யம் ஆகியவற்றிகளுக்காக வேண்டிக்கொள்கிறார்கள் .

இக்கோயிலில் வீரபத்திரன் ,முனியன் ,மதுரை வீரன் ஆகியோர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன .

இக்கோயிலில் உள்ள துர்க்கை சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட வெற்றி சின்னமாகும் .

Sri Thuravu Melazhagar Temple- Salupai- Elephant Statue

இக்கோயிலில் மிகவும் பிரபலமான சிற்பமான யானை சிற்பம் கோயிலின் வெளிய அமைந்துள்ளது .இவ் யானை 60 அடி உயரமும்,33 அடி நீளமும் ,12 அகலமும் கொண்ட மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது .அதன் தும்பிக்கையில் பலா பழத்துடன் இருக்கும் ஒரு மனிதன் ஒருவன் இருக்கின்றான்.அருகில் ஒரு நாய் சிற்பமும் உள்ளது. இவ் யானை சிற்பம் தெற்கு ஆசியாவிலேயே பெரியது ஆகும்

யானை சிற்பத்தின் முன் இரண்டு பெரிய குதிரை சிற்பமும் உள்ளது .

Sri Thuravu Melazhagar Temple- Salupai- Elephant Statue

திறந்திருக்கும் நேரம்

பெரும்பாலும் கோயில் திறந்தே இருக்கும் . பகல் நேரங்களில் சென்று பார்ப்பது சிறந்தது

அமைவிடம்

ஜயகொண்டத்தில் இருந்து 14 km தொலைவிலும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் எதிரே உள்ள சாலையில் சென்றால் சுமார் 8 km தொலைவில் உள்ளது

Location:

Leave a Reply