Sri Thiripuranthakeswarar Temple- Thiruvirkolam(koovam)

ஸ்ரீ திரிபுராந்தகசாமி கோயில் – கூவம் (திருவிற்கோலம்)

Sri Thiripuranthakeswarar temple- Thiruveerkolam(koovam)

இறைவன் : திரிபுராந்தகசாமி ,திருவிற்கோலநாதர்

தாயார் : திரிபுரசுந்தரி

தல விருச்சகம் : வில்வம்

தல தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஊர் : கூவம் ,திருவிற்கோலம்

மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு

 • தொண்டை மண்டலத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலங்களில் 14 ஆம் தலமாகும் ,
 • திருஞானசம்பந்தர் மற்றும் துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஆகியோர்கள் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார்கள் .
 • இத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூசை செய்வதில்லை.இத் திருமேனியை தீண்டாத திருமேனி என்று அழைப்பர் .
 • தீண்டாத்திருமேனி : மழை மிகுதியாக பொழியும் என்பதை தனது மென்மையான திருமேனி மூலமாகவும் ,மழை குறைவு என்பதை தனது செம்மையான திருமேனி மூலமாகவும் முன்னரே உணர்த்த செய்கிறார் என்பதை கண்கூடாக பார்த்து வருகின்றனர் .இதனை திருஞானசம்பந்தர் இத் திருக்கோயிலின் தல பதிகத்தில் ‘ஐயன் நல்ல திசயன்’ என்னும் பாடல் வழியாக உணர்த்தியுள்ளார் .
 • திரிபுரம் எரித்த வரலாறு : தாருகாட்சன் ,கமலாட்சன் ,வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் பொன்,வெள்ளி ,இரும்பாலான கோட்டைகளை கட்டி தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் துன்பங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள் அவர்களை அழிக்க சிவபெருமானிடம் முறையிட்டனர் ,இறைவன் அசுரர்களை அழித்து அந்த மூன்று நகரங்களையும் (திரி -மூன்றுபுரம் -நகரம் ) அழித்த காரணத்தால் திரிபுராந்தகர் என பெயர் பெற்றார் .போருக்கு செல்லும் போது வில்லேந்திய கோலத்துடன் சென்றதால் திருவிற்கோல நாதர் எனவும் பெயர்பெற்றார் .
 • இக்கோயிலில் இருந்து 7 km தூரத்தில் உள்ள பிஞ்சவாக்கம் கிராம வேளாண் பெருமக்கள் உச்சிகால அபிஷேதற்க்கு தேவையான பாலும் ,பூவும் நீண்ட நெடுங்காலமாக கொடுத்துக்கொண்டு வருகின்றனர் .
 • திருமஞ்சன நீர் : இக்கோயிலுக்கு வடக்கே 2 km தொலைவில் கோயிலுக்கு சொந்தமான ‘திருமஞ்சன குழி‘ கொண்டுவரப்பட்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது .
 • அச்சிறுத்த விநாயகரும் அச்சிறுத்த கேணியும் : திருக்கோயிலின் உட் பிரகாரத்தில் உள்ள உட் சுவற்றில் இருந்து அருள்பாலிக்கும் விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர் . திரிபுரங்களை எரிக்க இறைவன் தேரில் சென்ற போது உடனிருந்த தேவர்கள் விநாயகரை வணங்க மறந்ததால் தேரின் அச்சினை உடைத்த காரணத்தால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது .தேர் நிலை கொள்ளாது விழுந்த இடம் அதாவது குளம் அச்சிறுத்த கேணி என்று வழங்கி வருகிறது . இக்குளத்தில் தவளைகள் இருப்பதில்லை மற்றும் வற்றியதும் இல்லை .
 • கல்வெட்டுகள் : இக்கோயில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாகவும் ,கிபி 1055 ல் கற்றளி கோயிலாகவும் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பெற்ற கோயிலாகவும் விளங்குகிறது என இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .இரண்டாம் ராஜேந்திரன் ,ராஜராஜ சோழன் ,மூன்றாம் ராஜராஜ சோழன் ,வீரக்கண்ட கோபாலன் ,விஜயகண்டகோபாலன் ,முதலாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாக செலவிற்காக நிலங்களையும் காசுகளையும் தானமாக அளித்துள்ளார்கள் என்று இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .
 • சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இத்தலம் அக்னி தலமாகும் .
 • இங்குள்ள விமானம் கஜபிருஷ்டம் கட்டட அமைப்பை சார்ந்ததாகும் .அம்பாள் தனி சன்னதியில் ஸ்வாமியின் வலது புறத்தில் வீற்றியிருக்கிறார் .இது திருமண கோலமாகும் ஆதலால் திருமண தடை உள்ளவர்கள் வணங்க வேண்டிய கோயிலாகும் . அம்பாளின் முன் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
 • ராஜகோபுரத்திற்கு எதிரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிசன்னதியில் உள்ளார் . அருகில் உள்ள திருவாலங்காட்டில் நடராஜருடன் தோல்வியுற்ற காளி கோபமாக இருந்தார் அவரை இக்கோயிலில் காத்தல் தாண்டவ நடனம் ஆடி சாந்தமாக்கினார். இங்கு அவர் ‘தர்க்க மாதா ‘ என்ற பெயரில் தனியாக உள்ளார்

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/thiripuranthakeswarar-temple-koovam.html

அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம் :

சென்னையில் இருந்து சுமார் 25 km தொலைவில் பேரம்பாக்கம் வழியாக திருவள்ளூர் செல்லும் வழியில் உள்ளது. மற்றும் திருவலூரில் இருந்து 20 km தொலைவும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இருந்து 18 தொலைவிலும் உள்ளது . அருகில் நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது .

காலை 6 .00 AM -12 .00 PM வரை ,மாலை 5 .00 -8 .00 வரை

Location :

நான் இக்கோயிலை தரிசித்த தேதி 28 .04 .2019
ஓம் நமசிவாய

Leave a Reply