ஸ்ரீ சௌந்தர்யேஸ்வரர் கோயில் -பொள்ளா பிள்ளையார் கோயில் – திருநாரையூர்

இறைவன் : சௌந்தர்யேஸ்வரர்,பொள்ளா பிள்ளையார்
இறைவி : திரிபுர சுந்தரி
தல விருச்சகம் : புன்னை
தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்
ஊர் : திருநாரையூர்
மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற வடகரை தேவார தளங்களில் 33 வது தலம்.274 வது தேவார பாடல் பெற்ற தளங்களில் 33 வது தலமாகும் . பொள்ளா பிள்ளையாரே இங்கே மிகவும் பிரசித்துபெற்றவர். பொள்ளா பிள்ளையார் கோயில் என்றால்தான் இக்கோயிலை பற்றி எல்லோருக்கும் தெரியும் .

- விநாயகரின் 6 படை வீடுகளில் இத்தலம் முதல் படையாகும் .மற்றவை திருவண்ணாமலை ,திருக்கடையூர் ,மதுரை மற்றும் காசி ஆகும் .

- வரலாறு : கந்தர்வன் ஒருவன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்துகொண்டிருந்த துர்வாச முனிவரின் மீது தான் சாப்பிட பழத்தின் கொட்டையை அவர் மீது அறியாமல் போட்டான்.கோப முற்ற துர்வாச முனிவர் அவரை நாரையாக மாறுமாறு சாபமிட்டார்.கந்தர்வன் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்,அவர் மறுத்துவிட்டார் ,எனவே அவன் இத்தல சிவனிடம் முறையிட்டு அழுதான்.இறைவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்திற்கு தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் சாப விமோசனம் பெறலாம் என்றார் .அதன்படி நாரை தினமும் இறைவனுக்கு பூஜை செய்ய தன் அலகில் காசியில் இருந்து நீரை கொண்டுவந்து அபிஷேகம் செய்து தன் சுயரூபம் பெற்றான் .நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் “திருநாரையூர்” எனப் பெயர் பெற்றது .

- இவ்வாறு இறைவனுக்கு பூஜை செய்ய தீர்த்தத்தை எடுத்து வரும்போது ஒருநாள் இறைவனின் திருவிளையாட்டால் சூறாவளி காற்றில் நாரையின் சிறகுகள் ஒடிந்து விழுந்த இடம் “சிறகிழந்தநல்லூர் ” என்று பெயர் பெற்றது .இந்த ஊர் ஒரு தேவார வைப்பு தலமாகும் .இக்கோயிலின் பெயர் ஞானபுரீஸ்வரர் ஆவார் . அதன் வாயில் இருந்த தீர்த்த துளிகள் சிதறி பூமியில் விழுந்து குளம் போல் ஆனது.அக்குலமே “காருண்ய குளம் ” என்று பெயர் பெற்று சௌந்தரேஸ்வரர் கோயிலின் முன் உள்ளது.

பொள்ளா பிள்ளையார்
- இத்தலத்தில் உள்ள பொல்லாப்பு பிள்ளையார் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தவர் ஆவர் .சுயம்புவாக தோன்றிய பிள்ளையார் .உளி முதலியவற்றால் செய்யப்படாதது .பொள்ளார் என்றால் உளியால் செதுக்கப்படாத என்ற பொருள் .

- அனந்தேசர் என்ற அந்தணர் பொள்ளா பிள்ளையாருக்கு பூஜைகள் செய்து வந்தார் ,இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியங்களை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்கு வருவது வழக்கம் .வீட்டில் இருக்கும் அவரது மகன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி அவர்கள் கேட்கும் போது விநாயகர் சாப்பிட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார் .ஒருநாள் அவர் ஒரு வேலை நிமித்தம் காரணமாக தன் மகன் நம்பியாண்டார் நம்பியிடம் கோயிலுக்கு செல்லுமாறு கூறிவிட்டு சென்றார் ,நம்பியாண்டார் நம்பி கோயிலுக்கு சென்று பிள்ளையாருக்கு பூஜைகள் செய்துவிட்டு விநாயகருக்கு நைவேத்தியம் படைத்தது சாப்பிட சொன்னார் .விநாயகர் வந்து சாப்பிடாததை கண்டு மனம் வருந்தி சுவாமியின் மீது முட்டி நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினார் ,விநாயகர் அவருக்கு காட்சி கொடுத்து நைவேத்தியத்தை எடுத்துக்கொண்டார் .இப்படி தன் மீது நிஜபக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை ஏற்று அருள்பவராக இத்தல விநாயகர் அருள்பாலிக்கிறார்

- தேவார பாடல்களை தொடுக்க ராஜராஜ சோழன் முயற்சி செய்யும்போது ,அவனுக்கு பாடல்கள் இருக்கும் இடம் தெரியவில்லை ,அப்போது நம்பியாண்டார் நம்பி பற்றியும் அவரின் பெருமைகளை பற்றியும் அறிந்த மன்னன் இங்கு வந்து தனக்கு உதவும் மாறு நம்பியிடம் கேட்டான் .நம்பியாண்டார் நம்பி பொள்ளாப்பிள்ளையாரிடம் முறையிட்டார் .அப்போது ஒரு அசீரிரி ஒளி கேட்டது .சிதம்பரம் நடராஜர் கோயிலின் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடுகள் இருப்பதாக கூறியது .இவ்வாறு திருமுறைகள் கிடைக்க காரணமாக இருந்ததால் பொள்ளாப்பிள்ளையாருக்கு “திருமுறை காட்டிய விநாயகர் ” என்ற பெயரும் ஏற்பட்டது .

- இந்த கோயிலின் பிள்ளையார் சன்னதியின் எதிரில் ராஜராஜ சோழருக்கும் ,நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது .இவ் கோவில் வேலை நடைபெறுவதால் இச்சிலைகள் பிள்ளையார் கோயிலின் உள்ளே உள்ளது .

- இறைவன் சன்னதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசத்துடன் காணப்படுகிறது இவ்வகை விமான தரிசனம் தரிசிப்பது என்பது மிகவும் அபூர்வமாகும் .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -11 .30 வரை ,மாலை 5 .00 -7 .30 வரை
செல்லும் வழி:
சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில் சுமார் 17 km தொலைவில் உள்ளது . சாலையில் இருந்து 1 km நடந்தால் இவ்வூரை அடையலாம் .நிறைய பேருந்து வசதிகள் சிதம்பரத்தில் இருந்து உள்ளது .
