Sri Soleeswarar Temple – Perambakkam

ஸ்ரீ சோழீஸ்வரர் கோயில் – பேரம்பாக்கம்

இறைவன் : சோழீஸ்வரர்

இறைவி : காமாட்சி அம்மன்

தல விருட்சம் : வில்வம்

தல தீர்த்தம் : கூவம் ஆறு

ஊர் : பேரம்பாக்கம்

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

கூவம் நதிக்கரையில் நிறைய புராண கோயில்கள் உள்ளது , அதில் இந்த கோயிலும் ஒன்று . நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு பரிகார தலமாக இக்கோயில் விளங்குகிறது .

கோயில் அமைப்பு :

வடக்கு நோக்கிய சிறிய நுழைவு வாயிலை கடந்து நாம் உள்ளே சென்றால் இடது புறத்தில் சக்தி விநாயகர் சன்னதி மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதியை தரிசிக்கலாம்.

வடக்கு நுழைவு வாயிலை கொண்ட இறைவனின் கருவறை உள்ளது . இறைவன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . இறைவனின் சன்னதிக்கு அருகில் தாயார் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது , அவள் கருணையும் அன்பையும் அள்ளிதரும் இன்முகத்தோடு நம்மை அருள்பாலிக்கிறாள் .

மேற்கு பகுதியில் முருகன் வள்ளி தெய்வானையோடு தனி சன்னதியில் உள்ளார் .அதுமட்டும் அல்லாமல் கோயிலுனுள் சுவாமி ஐயப்பன்,நவகிரக சன்னதி , காலபைரவர் சன்னதி உள்ளது .

நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு பரிகார தலம்:

இக்கோயிலானது நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு பரிகார தலமாக விளங்குகிறது . இவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவர் நரம்பு நோயால் பாதிப்படைந்தார். இந்த நோயை குணப்படுத்த நிறைய செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இவர் இக்கோயில் இறைவன் சோழீஸ்வரரை பிராத்தனை செய்தார் . சோழீஸ்வரர் அவரின் பிராத்தனைக்கு செவிமடுத்து அவரை குணப்படுத்தினார் , அந்த பெரியவர் நோய் குணப்படுத்த வைத்திருந்த பணத்தில் இக்கோயிலுக்கு கொடிக்கம்பத்தை நிறுவினார் . அதிலிருந்து இக்கோயிலுக்கு  நரம்பு சம்பந்தமான நோய்களில் பாதித்தவர்கள் வந்து பிராத்தனை செய்து வருகின்றனர் அவர்களின் நம்பிக்கைகள் வீண்போகாதவண்ணம் இறைவன் அவர்களை  நோய்களில் இருந்து விடுபட செய்கிறார். ஒவ்வொரு திங்கள் கிழமையும் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர் .

கல்வெட்டுகள் :

இக்கோயிலில்  இந்திய கல்வெட்டு துறை ஆய்வின் மூலம் இவ்வூரில் 14 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இக்கோயிலானது   முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுவாமியின் அன்றைய திருப்பெயர் குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர். நாளடைவில் சோழீஸ்வரர் ஆகசுருங்கிவிட்டது.  கல்வெட்டுகளில்  கோயில் பூஜைக்கு தீபம் ஏற்ற, நன்கொடை அளித்தது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/05/sri-soleeswarar-temple-perambakkam.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 மணி முதல் நண்பகல் 12 .00 மணி வரையும், மாலை 5 .30 மணியில் இருந்து இரவு 7 .30 மணி வரையும் .

Cotact details :  94431 08707 / 94451 27892 / 94430 67204

செல்லும் வழி :

சென்னையில் இருந்து 60 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னை இருந்து பூந்தமல்லி ,தண்டலம் கூட்ரோடு வழியாக மப்பேடு வழியாக பேரம்பாக்கம் செல்லவேண்டும் .

Location :

திருசிற்றம்பலம்

Leave a Reply