Sri Sathya Murthy Perumal – Thirumayam

ஸ்ரீ சத்யமூர்த்தி பெருமாள்-திருமயம்

Sri Sathya Murthy Perumal - Thirumayam

இறைவன் : சத்தியகிரிநாதன், சத்தியமூர்த்தி

தாயார் : உய்யவந்த நாச்சியார் ,உஜ்ஜீவன தாயார்

விமானம் : சத்யகிரி விமானம்

தீர்த்தம் : கதம்ப புஷிகர்ணி ,சத்ய தீர்த்தம்

ஊர் : திருமெய்யம்

மாவட்டம் : புதுக்கோட்டை ,தமிழ்நாடு

மங்களாசனம் : திருமங்கையாழ்வார்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 97 வது திவ்ய தேசமாகும் .பாண்டியநாட்டில் அமைந்துள்ள 18 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று.

இந்த ஊரை நாம் நெருங்கும்போதே அழகான அந்த மலை கோட்டையை நாம் காணலாம் , இந்த மலைக்கோட்டையின் மலைச்சரிவில் மிக அருகருகே இரண்டு கோயில்களை நாம் காணலாம் . ஒன்று ஈசன் கோயிலும் மற்றொன்று திவ்ய தேசங்களில் ஒன்றான சத்யமுர்த்தி கோயிலையும் காணலாம்.

 கிழக்குப்புறம் அகழப்பட்டுள்ள குடைவரையில் திருமெய்யர் என்ற பள்ளிக்கூட பெருமாள் கிடந்த நிலையில் காட்சி தருகிறார். பிற்காலத்தில் இக்குடைவரையை முத்தரைய வம்சத்தைச் சேர்ந்த பெருந்தேவி என்ற அரசி விரிவுபடுத்தி மண்டபம் கட்டியுள்ளார்.இக்குடைவரைக் கோவில் பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள் ஆகிய அரச வம்சத்தவர்களால் விரிவுபடுத்தப்பட்டு கருவறைகளும், மண்டபங்களும் கட்டப்பட்டன. இவ் குடவரை மற்றும் திருமெய்யம் கோட்டை ஆகியவைப்பற்றி நான் இன்னொரு பதிவில் விரிவாக ஒரு புதிய தலைப்பில் தருகிறேன் .

இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலை விட மிகவும் பழ மையானது. இதன் காரணமாக இதற்கு ‘ஆதிரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.

ஏழு சத்தியப் பெருமைகளான சத்தியமூர்த்தி, சத்யகிரி விமானம், சத்திய ஷேத்திரம், சத்தியபுரம், சத்யகிரி, சத்தியதீர்த்தம், சத்தியவனம் ஆகிய சிறப்புகளைக்கொண்டது இவ்வூர். வடமொழியில் சத்யஷேத்ராம் என்றும் தமிழில் திருமெய்யம் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் மெய்யர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். திருமெய்யம் என்ற சொல் மருவி திருமயம் ஆயிற்று.

சத்யகிரீஸ்வரர் கோவிலுக்கும் திருமெய்யர் – சத்தியமூர்த்திக் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரித்தார்கள் ,ஆதலால் கோயிலை வலம் வர இயலாது .

கோயில் அமைப்பு :

தெற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் பாண்டியர்களின் கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக  இருக்கலாம். இராஜகோபுரவாயிலுக்கும் இரண்டாம் வாயிலுக்கும் இடையில் நீளமான மண்டபம் அமைந்துள்ளது. இது நாயக்கர் காலத்த்தில் (16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டிருக்கலாம். இம்மண்டபத்தின் மேற்குப்புறத்தில் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர் ஆகியோருக்குக் கிழக்கு நோக்கிய சன்னதிகள் உள்ளன. மண்டபத் தூண்களில் மதுரைவீரன் பொம்மியைக் கடத்திச் செல்லும் சிற்பத் தொகுப்பு, குறவன், குறத்தி, நாயக்க வீரன், நடனமாடும் மங்கையர் ஆகிய சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.

தாயார்  உஜ்ஜிவனித் தாயார்

இரண்டாம் வாயில் வழியாகப் பிரகாரத்துக்குள் நுழைந்ததும் மேற்கில் உய்ய வந்த தாயார் சன்னதியைக் காணலாம். கிழக்கு நோக்கியுள்ள இச்சன்னதி முகமண்டபம், முன்று தளத்துடன் கூடிய விமானத்துடன் கூடியது. கருவறையில் உய்யவந்த நாச்சியார் என்ற உஜ்ஜிவனித் தாயார்  அர்த்தபத்மாசனத்தில் காட்சி தருகிறார்.இத்தாயாரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறு பவர்கள் நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடன டியாக பலனளிக்கும் பரிகாரத்தலம். இவர் படி தாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. கோவிலுக்கு சென்றால் மட்டுமே இவரை தரிசனம் செய்ய முடியும்.

பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி :

Sri Sathya Murthy Perumal - Thirumayam

இங்குப் பள்ளி கொண்ட பெருமாள் என்ற யோகசயன மூர்த்தி அனந்தசயனநிலையில் காட்சி தருகிறார். ஆதிசேஷன் என்ற பாம்பணையில் மேற்கில்தலைவைத்துக் கிழக்கில் காலை நீட்டியபடி தெற்கு நோக்கி அரிதுயில் கொள்ளும் பெருமாளின் உருவம் சுமார் 30 அடி அல்லது 9 மீட்டர் நீளத்தில் குகை முழுதும் வியாபித்துள்ளது.

பெருமாள் ஆதிசேடன் மீது சயனம் கொண்டு கருடன் சித்திர குப்தன், மார்க்கண்டேயன், பிரமன், தேவர்கள், முனிவர்கள், கின்னாரர்கள் விளங்க, மதுகைடபர் அசுரர்கள், காலடியில் பூமிதேவி திருமார்பில் சீதேவி விளங்கக்காட்சி தருகிறார். இது திருவரங்கம் அரங்கநாதரை விடப் பெரிய திருமேனியாகும்.மற்றும் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர், லட்சுமி, நரசிம்மர் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.ஆதிசேஷன் இத்தலத்தைக் காத்துக் கொண்டுள்ளதாக ஐதீகம்.

சத்யகிரிநாதர் சன்னதி :

மூலவர் சத்யகிரிநாதர் , நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.இங்கு சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும், மற் றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக் கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்திய மாக துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்திய மூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.

பரிகாரம் :

ராகு கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கொடியவர்களால் அன்றாடம் துன்பப்படுகிறவர்கள் விஷ வியாதிகளால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள். போட்டி, பொறாமை போன்ற துஷ்டத்தால் நொந்து போய் கொண்டிருக்கிறவர்கள் அனைவரும் இந்த சத்தியகிரி நாதப் பெருமாளையும் ஆதிசேஷனையும் வழிபட்டு செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் பரிகாரங்களைச் செய்தால் எல்லா பிரச்சனைகளும் நீங்கி மகிழ்வோடு இருக்கலாம் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

செல்லும் வழி:

மதுரையிலிருந்து 89 கி.மீ தொலைவிலும் ,புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ.தொலைவு; திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 70 கி.மீ தொலைவு; சென்னையிலிருந்து 399 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது .

Location Map:

English :  The Perumal who explains about “Sathyam” or truth can be the example for the universal slogam. “Sathya meva Jayathey”. To explain and be an example for this, he stands in this sthalam as “Sathya giri Nathan”.This sthalam is also called as “Aadhi Ragam” and the perumal is older and big than that of the perumal found in Sri Rangam. After entering through the Raja Gopuram, we can find a big Mandapam where lots of stone carved pillars are found with beautiful paintings. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *