Sri Ramar Slokam

ஸ்ரீராமர் மந்திரம்

Sri Ramar Slokam

ஸ்ரீ ராம மஹா மந்திரம்:

“ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே’

நன்மையுஞ் செல்வமு
நாறு நல்குமே,
தின்மையும் பாவமுஞ்
சிதைந்து தேயுமே,
சென்மமு மரணமு
•ன்றித் தீருமே,
இம்மையே இராமா
வென்றிரண்டு எழுத்தினால்”

ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.

  1. பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்!
    ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்!!
  2. ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாசகம்!
    ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்!!
  3. நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்!
    ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராம மத்வயம்!!
  4. ஸ ப்ரபஞ்சகல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்!
    நிராக்ருதிம் நிராமயம் பஜேஹராம மத்வயம்!!
  5. நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்!
    சிதேகரூப ஸந்தகம் பஜேஹராம மத்வயம்!!
  6. பவாப்திபோத்ரூபகம் ஹ்யசேஷ தேஹகல்பிதம்!
    குணாகரம் க்ருபாகரம் பஜேஹராம மத்வயம்!!
  7. மஹாவாக்ய போதகைர்விராஜமானவாக்பதை:!
    பரம்ப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்!!
  8. சிவப்தரம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்!
    விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்!!
  9. ராமாஷ்டகம்படதி யஸ்ஸுகரம் ஸுபுண்யம்
    வ்யாஸேன பாஷிதமிதம் ச்ருணுதே மனுஷ்ய:
    வித்யாம்ச்ரியம் விபுலலௌக்யமனந்த கீர்த்திம்
    ஸம்ப்ராப்யதேஹ விலயே லபதே சமோக்ஷம்!!
    இதி ஸ்ரீ வியாஸ மஹரிஷி விரசிதம்
    ஸ்ரீராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்.

விளக்கம்

மிகுந்த அழகு வாய்ந்தவரும், பாவங்களை போக்குகிறவரும், பக்தர்களின் மனதை மகிழச் செய்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாமுடி தரித்தவரும், எல்லா பாவங்களையும் நாசம் செய்கிறவரும், பயத்தை போக்குகிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கின்றேன்.

ஆத்மஸ்வரூபத்தை உபதேசிப்பவரும், கருணைக்கடலும், ஜனன மரண பயம் போக்குகிறவரும், எங்கும் பரவியிருப்பவரும், மங்களத்தை செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

உலகங்களின் இருப்பிடமாய் இருப்பவரும், நாம ரூபமற்றவரும், எப்பொழுதும் உள்ளவரும், உருவமற்றவரும்,
அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பணிகிறேன்.

உலக சம்பந்தமற்றவரும், நிர்குணமானவரும், பாவமற்றவரும், அழிவற்றவரும், தேஜோரூபியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை கொண்டாடுகிறேன்.

சம்சார சமுத்திரத்துக்கு படகு போன்றவரும், எல்லா சரீரங்களிலும் வியாபித்தவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணாமூர்த்தியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

மகாவாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரபிரம்மமாயும், வியாபகமாயும் திகழ்பவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

மங்களத்தைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், பிறவி பயத்தை போக்குகிறவரும், அஞ்ஞானத்தை அழிக்கிறவரும், குருவும், இணையற்ற வருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

வியாசரால் சொல்லப்பட்டதும், சுலபமானதும், புண்ணியத்தை தருவதுமான இந்த ராமாஷ்டகத்தை படிக்கிறவரும், கேட்கிறவரும், கல்வி, செல்வம், அளவற்ற சுகம், எங்கும் பரவு புகழை அடைந்து முடிவில் மோட்சத்தையும் அடைவார்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம்||

பொருள் : எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர்ஹனுமான். ‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல்-ஆஞ்சநேயர்-கண்ணீர் மல்க நின்று கேட்பார். அரக்கர்களுக்கு எமனாக விளங்கும் ஆஞ்சநேயரை வணங்குகிறேன்.

சமூக வலைத்தளங்கள் மூலம் தரவப்பட்டது . தொகுத்தவர்களுக்கு நன்றி !

ஸ்ரீ ராமஜெயம்

Leave a Reply