Sri Panangatteswarar Temple – Panayapuram

ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர்  கோயில் – பனையபுரம்

Sri Panangatteswarar Temple - Panayapuram

இறைவன் –   பனங்காட்டீஸ்வரர்

இறைவி – மெய்யம்மை

தலவிருச்சம் – பனைமரம்

தல தீர்த்தம் – பத்மதீர்த்தம்

ஊர் – பனையபுரம்

மாவட்டம் – விழுப்புரம்

பாடியவர்கள் – திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 231 வது தலம். நடுநாட்டு தேவார தலங்களில் 20 வது தலம் .

இக்கோயிலின் கருவறை சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழனின் காலத்தை சேர்ந்தது .சிங்கமுக தூண்கள் விஜயநகர காலத்தை சேர்ந்தது .கொடிமரம் அருகில் இருக்கும் கற்பலகை விநாயகர் பல்லவர் காலத்தை சேர்ந்தது .

இத்தலத்தில் மூன்று கல்வெட்டுகள். முதலாம் குலோத்துங்க சோழன் ,கோனேரின்மை கொண்டான் ,பரகேசரி ஆதிராஜேந்திரன் தேவன் ஆகிய அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன .

Video

தல புராணம் :

சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்த தக்கன் , அந்த யாகம் தோல்வியுற்றதால் அதனால் ஏற்பட்ட பழி பாவங்கள் நீங்க பல சிவத்தலங்களை சென்று வழிபட்டான் தக்கன் . அவன் வழிபட்ட சிவத்தலங்களில் ஒன்றுதான் இந்த பனையபுரம் சிவத்தலம் .இதற்க்கு சான்றாக ராஜகோபுரத்தில் நுழைவாயிலின் இடது பக்கத்தில் வடக்கு முகமாக ஆட்டுத்தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்பு சிற்பமாக உள்ளது .

தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரிய பகவான் , வீரபத்திரரால் தாக்கப்பட்டு பற்களையும் ,தன் ஒளியையும் இழந்தார் . அந்த சாபம் நீங்க இந்த தலத்தின் ஈசனை வணங்கி தன் சாபத்தில் இருந்து விடுபட்டார் .இதனை உறுதிப்படுத்தும் விதமாக  ஆண்டு தோறும் சித்திரையில் 7 நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது . இந்த 7 நாட்கள் இறைவன் மற்றும் இறைவி மீது சூரிய ஒளி விழும் . இத்தல இறைவனுக்கு நேத்ரோதார சுவாமி என்ற பெயரும் உண்டு . அதாவது ‘ கண் கொடுத்த கடவுள் ‘ என்ற பொருளாகும் . கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டி கொண்டால் அவர்கள் குறை நிவர்த்தி ஆகும் .

இத்தலத்தின் தலவிருச்சமாக பனைமரம் விளங்குகிறது . இதில் ஆண் மரம் உயரமாகவும் பெண் மரம் குள்ளமாகவும் காலம் காலமாக உள்ளது இது ஒரு வியப்பான விஷயமாகும் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .30 – 11 .00 , மாலை 5 .30 – 8 .30 வரை

அமைவிடம்:

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி டோல் கேட் தாண்டியவுடன் பண்ருட்டி ,தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 1 km தொலைவில் சென்றால் சாலையின் அருகிலேயே இக்கோயிலை காணலாம் .

Location Map

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *