ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில் – நாராயனவனம்
இறைவன் : கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி
இறைவி : பத்மாவதி தாயார்
ஊர் : நாராயணவனம்
மாவட்டம் : சித்தூர் , ஆந்திர பிரதேசம்
இந்த நாராயவனம் என்ற ஊர் ஒரு காலத்தில் கார்வெட்டிநகர் சூரியவம்ச ராஜாவின் தலைநகராக இருந்தது . இந்த இடத்தில் தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் பெருமாள் பத்மாவதி தாயாரை திருமணம் செய்தார் .இப்பகுதியை ஆண்ட ஆகாசராஜாவுக்கு மகளாக தாயார் பிறந்தார் . அவர் பெருமாளின் அழகில் மயங்கி அவரையே திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்கு பின் பத்மாவதி தாயாரின் சகோதரர் இந்த கோயிலை கட்டினார். இக்கோயிலில் இன்றும் பத்மாவதி தாயார் தன் திருமணத்திற்காக மாவு அரைத்த இயந்திர கல் இன்றும் உள்ளது .
இக்கோயிலில் திருப்பதி பெருமாள் கோயிலில் நடைபெறுவது போல் பெருமாளின் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது , இக்கோயிலானது திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது .
கோயில் அமைந்துள்ள நாராயணவனம் ஒரு சிறிய கிராமம் ஆகும் . இக்கோயில் மிகவும் நன்றாக பராமரிக்கப்படுகிறது .கோயில் கோபுரம் 7 அடுக்கு உயரம் கொண்டது . இக்கோயிலுனுள் ஆண்டாள் நாச்சியார் , சீதா லக்ஷ்மணனோடு ராமர் சன்னதி மற்றும் ரெங்கநாதர் சன்னதி உள்ளது .
இவ்ஊரில் மற்றொரு சுற்றுலாத்தலமாக கொனா அருவி அமைந்துள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-kalyana-venkateswara-swamy-temple.html
திறந்திருக்கும் நேரம் :
இக்கோயில் காலை 6 – 1 மணி வரை , மாலை 3 -8 வரை
Contact Number : 8577264417
செல்லும் வழி :
இக்கோயில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் உள்ளது . சென்னையில் இருந்து சுமார் 110 km தொலைவில் உள்ளது .புத்தூரில் இருந்து சுமார் 5 km தொலைவில் உள்ளது .
அருகில் உள்ள கோயில்கள்
1 . பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் – சுருட்டப்பள்ளி
2 . வேத நாராயண பெருமாள் கோயில் – நாகலாபுரம்
3 .வாலீஸ்வரர் கோயில் – ராமகிரி
4 . பரசுராமேஸ்வரர் கோயில் – குடிமல்லம்
Location: