Sri Kalva perumal/ Adhi varaha perumal Temple- Thirukalvanoor

ஸ்ரீ கள்வப்பெருமாள் கோயில் – திருக்கள்வனூர் (காஞ்சிபுரம் )

Sri Kalva perumal/ Adhi varaha perumal Temple- Thirukalvanoor

மூலவர் : கள்வப்பெருமான் (ஆதிவராகர் )

தாயார் : சௌந்தர்யலக்ஷ்மி

தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி

விமானம் : வாமன விமானம்

புராண பெயர் : திருக்கள்வனூர்

ஊர் : காஞ்சிபுரம்

மங்களாசனம் : திருமங்கையாழ்வார்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 55 வது திவ்ய தேசம் ஆகும் .

கள்வப்பெருமாள் காமாட்சி அம்மன் கோயிலில் கருவறைக்கு வெளியே பின்புறத்தில் காயத்ரி மண்டபத்தில் வலதுபுறத்தில் உள்ள ஒரு சுவரில் தென்கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு இடது புறத்தில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் மஹாலக்ஷ்மி தாயார் சேவை தருகிறார் . தாயார் இரண்டு கைகளால் சுவாமியை வணங்கியபடி இருக்கிறாள் .தன் கர்வம்  அழியப்பெற்றதால் தாயார் பணிவுடன் வணங்கியதாக இக்கோலத்தை  கூறுகிறார்கள். இவற்றிலிருந்து நேரே பின்பகுதியில் உள்ள அடுத்த சுவரில் இவளே அரூப கோலத்தில் இருக்கிறாள். கள்வப்பெருமாளை தரிசிக்க செல்பவர்கள் முதலில் அரூப லக்ஷ்மியை வணங்கிவிட்டுத்தான்  சுவாமி மற்றும் தாயார் வணங்கவேண்டும் .

வரலாறு : லட்சுமி தேவிக்கு ஒருமுறை தான் தான் மிகவும் அழகு என்ற கர்வம் ஏற்பட்டது .அதுமட்டும் அல்லாமல் பெருமாளை கருமை நிற கண்ணன் என்று சுட்டி காட்டினாள் .அதர்க்கு பகவான் அகத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு ,புறத்தில் இருப்பது மாயை ஆகும் என்று கூறினார் . ஆனால் தாயார் கேட்பதாக இல்லை, பெருமாள் தாயாருக்கு பாடம் புகட்ட எண்ணினார் . பெண்ணிற்கு அழகு இருக்கலாம் ஆனால் அந்த அழகின் மீது கர்வம் இருக்கக்கூடாது என்று எண்ணி எந்த அழகு மீது அளவு கடந்த பற்று  வைத்தாயோ அந்த அழகு இருக்கும் உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக என்று சாபம் கொடுத்து விட்டார் .கலங்கிய மஹாலக்ஷ்மி இந்த விமோசனம் கேட்டார் அதர்க்கு மஹாவிஷ்ணு பூமியில் எங்கு ஒரு முறை செய்யும் தவத்திற்கு ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிட்டுமோ அங்கு சென்று தவம் செய்தால் உன் உருவத்தை மறுபடியும் பெறலாம் என்றார் .

சிவனின் கண்களை விளையாட்டாக மூடி சாபம் பெற்ற பார்வதி தேவி கடும் தவம் புரிந்து தன் சாபத்திலிருந்து விடுபட்ட காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரை நினைத்து கடும் தவம் செய்து சாபத்தில் இருந்து விடுபட்டு முன்னை விட மிக அழகாக மாறினாள். அவளின் அழகைக்கான பகவான் அவளை கள்ளத்தனமாக எட்டி பார்த்தார் ,இதனால் இவருக்கு ‘கள்ளப்பெருமாள்’ என்ற பெயர் ஏற்பட்டது .

Sri Kalva perumal/ Adhi varaha perumal Temple- Thirukalvanoor

அண்ணன் தங்கை ஒற்றுமை :

கருவறைக்கு முன்புள்ள காயத்ரி மண்டபத்தின் அமைப்பு போலவே அதற்கு கிழே ஒரு மண்டபமும் ,அதன் மத்தியில்   காமாட்சி அன்னையும் இருக்கிறாள் ,அதாவது தங்கைக்கான கோயிலே என்றாலும் அண்ணனுக்கு பணிந்து அவருக்கு கிழே அம்பாள் இருப்பதாக சொல்கிறார்கள் .இதனால் இவ் மண்டபத்திற்குள் செல்பவர்கள் நிற்காமல் அமர்ந்த நிலையிலேயே தரிசிக்க வேண்டும் .அண்ணன் ,தங்கைகள் இங்கு ஒரே நேரத்தில் காமாட்சியையும் ,கள்வப்பெருமாளையும் வேண்டி கொண்டால் அவர்கள் ஒற்றுமை கூடும் என்பது  நம்பிக்கை .

இழந்த அழகை திரும்ப பெற ,கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க, செல்வம் பெறுக ,அண்ணன் தங்கை ஒற்றுமை நீடிக்க தரிசிக்க வேண்டிய தலம்.

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00  ,மாலை 4 .00 -8 .00 வரை

செல்லும் வழி:

காஞ்சிபுரத்திலேயே மிகவும் பிரசித்த பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்குள் இந்த சன்னதி அமைந்துள்ளது . காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது . 

Location :

English : The temple is among the 108 divyadesams of Sri Vaishnavas and comes under Tondai naatu divyadesams in Kanchipuram. The main sanctum is of Sri Kamakshi amman and the presiding deity for the divyadesam is Sri Aadhi Varaha perumal. Every one in this world thinks that  beauty will be a permanent thing and there is no death for it.Sudden happenings in life turn the world teaching so many lessons to people and important one is nothing is permanent.People who are in need of wealth pray to perumal and sri mahalakshmi by offering curd rice for fulfilling their wishes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *