ஸ்ரீ இம்மையிலும் நன்மை தருவார் கோயில் – மதுரை
இறைவன் : இம்மையிலும் நன்மை தருவார்
தாயார் : மத்தியபுரி நாயகி
உற்சவர் : சோமஸ்கந்தர்
தல விருச்சகம் : தசதள வில்வம்
தீர்த்தம் : ஸ்ரீ புஸ்கரணி
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு
- பாண்டியமன்னன் மலையத்துவஜனுக்கு பார்வதி தேவி யாகத்தில் இருந்து மகளாக அவதரித்தாள் . அவளுக்கு மீனாட்சி என்ற பெயரிட்டு வளர்த்தார் . மீனாட்சி தாயார் கயிலை நாதன் சிவனை கண்டு சொக்கினர் அதனாலேயே சிவனுக்கு சொக்கநாதர் என்ற பெயர் ஏற்பட்டது .இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது ,அதன் பிறகு சொக்கநாதருக்கு பட்டம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது . அரியணை ஏறும் முன் அவர்கள் சிவா பூஜை செய்வது வழக்கம் அதன் படி சொக்கநாதர் மற்றும் மீனாட்சி வழிபட சிவலிங்கம் பிரிதிஷ்டை செய்து வழிபட்ட கோயிலே இந்த இம்மையிலும் நன்மை தருவார் கோயில் .
- சிவனே தனக்கு தானே பூஜை செய்துகொண்ட கோயில் . இங்கு வணங்கினால் இப்பிறப்பிலேயே நமக்கு நன்மை தருவார் என்ற சிறப்பு உண்டு .
- மதுரை ஆவணி திருவிழா அன்று மீனாட்சி அம்மனுடன் சொக்கநாதர் இக்கோயிலுக்கு வந்து பூஜை செய்வார் .
- எந்த கோயிலுக்கு போனாலும் நாம் சிவலிங்கத்தின் முன் பகுதியை காண்போம் ஆனால் இங்கு நாம் சிவலிங்கத்தின் பின் பகுதியையே தரிசிக்க முடியும் . ஏனனில் மேற்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வது மரபு அதென்படி சொக்கநாதர் மற்றும் மீனாட்சி மேற்கு நோக்கி அமர்ந்து சிவலிங்கத்தை பூஜிப்பதால் நாம் சொக்கலிங்கரையும் மீனாட்சி அம்மையும் மட்டுமே நேராக காண முடியும் ,சிவலிங்கத்தின் பின் பகுதியே நமக்கு தெரியும் மற்றும் அர்ச்சகர் இருவருக்கும் நடுவில் இருந்தே பூஜைகள் செய்வார் .
- மதுரையின் மத்தியில் வீற்றியிருப்பதால் அம்பாளுக்கு மத்தியபுரி நாயகி என்ற பெயர். பெரும்பாலும் செம்பில் ஸ்ரீசக்கரம் வரைந்து ப்ரதிஷ்டை செய்வார்கள்,ஆனால் இங்கு கல் ஸ்ரீசக்கரம் மேல் அம்பாள் வீற்றியிருக்கிறாள் . திருமண தடை உள்ளவர்கள் ,குழந்தை பேரு இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.
- மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன் வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்ன வைத்தார் . அவ் விநாயகர் பத்மாசனத்தில் இக்கோயிலில் உள்ளார் .
- இங்குள்ள சண்டீகேசரருக்கு பக்தர்கள் பூஜை செய்து வணங்குகின்றனர் .
- இங்குள்ள முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-immayilum-nanmai-tharuvar-temple.html
செல்லும் வழி
பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது
திறந்திருக்கும் நேரம்
காலை 6 .00 -11 .00 மணி
மாலை 4 .30 – 9 .30 மணி
அருகில் உள்ள கோயில்
1 . மீனாட்சி அம்மன் கோயில்
2 . கூடலழகர் கோயில்
Location :