Sri Airavateswarar Temple- Dharasuram

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில் – தாராசுரம்

 Sri Airavateswarar Temple- Darasuram
karuvarai Gopuram

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய் கொள்வனே
– திருமூலர்

இறைவன் : ஐராவதேஸ்வரர்

இறைவி : வேதநாயகி

தலவிருச்சகம் : வில்வமரம்

ஊர் : தாராசுரம்

மாவட்டம் : தஞ்சாவூர்

  • இக்கோயிலை பற்றி என்னுடைய india temple tour தலத்தில் எழுதுவதை நான் பெருமையாக கருதுகிறேன். ஏனென்றால் நம் தமிழர்களின் கட்டட கலைகள்,அவர்களின் உழைப்பு ஆகியவற்றை இந்த உலகத்துக்கு தெரிவித்ததை கண்டு நாம் பெருமையடைகிறோம் . யூனிஸ்கோ ( UNESCO ) அங்கீகாரம் பெற்ற கோயில் ஆகும் .
  • இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம் தன் தலைக்கனம் ஏறி யாரையும் மதிக்காமல் திரிந்தது ,துர்வாச முனிவரின் முன் மதியாமல் தலைக்கனத்தோடு நடந்துகொண்டது . துர்வாச முனிவர் கோபம் அதிகமாகி ஐராவத்துக்கு சாபத்தை அளித்தார் . ஐராவதம் தன் பொலிவை இழந்து கருமையாக மாறியது . தன் சாபத்தை போக்க இக்கோயிலுக்கு வந்து சிவனை மனம் உருகி வேண்டிக்கொண்டது சிவபெருமானும் அருள் தந்து பழைய பொலிவுக்கு திரும்பசெய்தார். ஐராவதம் தன் அகங்காரங்களை விட்டுவிட்டது . இதனால் இவ் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்ற பெயர் கிட்டியது .
  • எமன் இங்குள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றதாக புராணம் கூறுகிறது .
  • இரண்டாம் ராஜா ராஜசோழனால் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
  • சோழர்களின் கட்டட கலைக்கு இக்கோயிலும் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகவும் . தஞ்சை பெரிய கோயில் , ஆவுடையார் கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் இவைகளுக்கு அடுத்தபடியாக கட்டட கலைக்கு மிக எடுத்துக்காட்டான கோயிலாகும் .
  • இக்கோயிலின் நந்திமண்டபம், கல்யாண மண்டபம் ஆகியவைகள் மிக நுணுக்கமான நிறைய சிற்பங்களோடு காட்சியளிக்கின்றன . ஒவோரு தூணும் மிக நுண்ணிய சிற்பங்கள் சிவனின் திருவிளையாடல்கள் ,ராமாயண காட்சிகள் , யானை மற்றும் ரிஷபம் ஒன்றாக உள்ள சிற்பம் ,சிவன் பார்வதி கல்யாண காட்சி,கண்ணகி சிற்பம் ,அர்தநாதேஸ்வரர் சிற்பம் ஆகியவைகள் நம் கண்களுக்கு வியப்பையும் ,ஆச்சரியத்தையும் தருகின்றன .
  • இக்கோயிலின் வடபுறத்தில் சிறிது தொலைவில் அம்பாள் சன்னதி உள்ளது .
  • இக்கோயில் குதிரைகள் பூட்டிய ஒரு தேர் அமைப்பில் உள்ளது .
Video

திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி
காலை 7 . 00 – 12 .00
மாலை 5 .00 – 8 .00

கும்பக்கோணத்திலிருந்து 6 km தொலைவில் உள்ளது . கும்பகோணத்தில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன .

அருகில் உள்ள கோயில்கள் :
கும்பகோணத்தில் நிறைய கோயில்கள் உள்ளன மற்றும் இக்கோயிலின் அருகில் பட்டிஸ்வரம் மற்றும் திருவலன்சுழி பாடல் பெற்ற தலங்கள் உள்ளன .

Location Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *