அருள்மிகு ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் – கொளப்பாக்கம்
இறைவன் : அகஸ்தீஸ்வரர்
இறைவி : ஆனந்தவல்லி
தல மரம் : அரசமரம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
- தெற்கு நோக்கிய கோயில் ,கருவறை கிழக்கு பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளது .
- சூரியன் , அகத்தியர் ,வாகீச முனிவர் இத்தலத்தை வழிபட்டனர்
- கி .பி 878 ல் ஆதித்ய சோழ மன்னர், கி . பி 1152 ல் இரண்டாம் இராஜ இராஜ சோழ மன்னர் அவர்களால் திருப்பணி செய்யப்பட்டது .
தல வரலாறு
சூரியனின் உஷ்ணம் தாங்காமல் அவரது மனைவி சந்தியா தேவி தனது நிழல் ஆன சாயா தேவியை அங்கே விட்டுவிட்டு பிரிந்தார் . சில காலம் கழித்து அதை உணர்ந்த சூரியன் சந்தியா தேவியின் தந்தையான விஸ்வகர்மாவிடம் முறையிட சூரியனிடம் கொளப்பாக்கம் சென்று சிவனை நோக்கி தவம் புரிய சொன்னார் . அவரும் அவ்வாறே சென்று அகதீஸ்வரரை நோக்கி தவம் புரிந்து சூரியனின் உஷ்ணத்தையும் தாங்கும் சக்தியை மனைவி தாங்கும் வரம் பெற்று சந்தியாவை மீண்டும் கரம் பெற்றார் . சூரியன் வழிப்பெற்ற தலம் ஆகையால் தொண்டை மண்டலத்தில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலம் சூரிய தலம் ஆகும் . இங்கு இவர் மேற்கு நோக்கி தனி சன்னதியாக உள்ளார் . ஞாயிறு கிழமையில் சிகப்பு மலர் சூட்டி கோதுமை ரவை படைத்தது இவ்வாலயத்தில் நடைபெறும் அபிஷேகம் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்குபெற்றால் வேண்டிய வரம் பெறலாம் .
ஸ்ரீ காலபைரவர்
இக்கோயிலில் ஸ்ரீ காலபைரவருக்கு பல வருடங்களாக ஞாயிறு கிழமைகளில் மாலை ராகு காலத்தில் 6 .00 மணிக்கு மேல் அபிஷேகம் , சஹஸ்ரநாம அர்ச்சனை , உற்சவர் உலா நடைபெறுகிறது . நாம் எதாவது வேண்டுதல் நினைத்து 2 எலுமிச்சை பழங்கள் எடுத்து வந்து அதை ஸ்ரீ காலபைரவர் சன்னதியில் வேண்டுதலுடன் சமர்ப்பித்து பின் சஹஸ்ரநாம அர்ச்சனை பிறகு 1 பழம் கொடுக்கப்படும் அதை நம் பூஜை அறையில் வைத்து அடுத்த வாரம் 1 புது பழத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் . தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வந்தால் வேண்டுதல் நிறைவேறும் .
ஸ்ரீ காலபைரவருக்கு பிரதி வெள்ளி அர்த்தஜாமத்தில் (இரவு 7 .30 – 8 .00 ) அபிஷகம் ஆராதனை நடைபெறுகிறது . பிரதி அஷ்டமி , அம்மாவாசை நாட்களில் மாலை 6 .30 மணிக்கு அபிஷகம் ஆராதனைகள் நடைபெறுகிறது.
- கடன் தீர்க்கும் ருண விமோசன சிவலிங்கத்திற்கு சிவராத்திரி அன்று மாலை 6 .30 மணி அளவில் அபிஷேகம் , வெந்நீர் அபிஷேகம் நடைபெறுகிறது .
- இங்கு மன்னர்களது காலத்தின் கல்வெட்டுகள் பல காணப்படுகிறது . அவைகளை இக் கோயிலின் சுவர்களில் காணலாம் .
திறந்திருக்கும் நேரம் மற்றும் செல்லும் வழி
காலை 7 .30 மணி முதல் 11 .00 வரை , மாலை 4 . 30 மணி முதல் 8 .00 மணி வரை .
போரூரிலிருந்து பாய்கடை ,மௌலிவாக்கம் மற்றும் மணப்பாக்கம் , ராமபுரத்திலிருந்து தெற்கில் கொளப்பாக்கம் அமைந்துள்ளது .
Location Map