Mahalaya paksha details and Benefits

மஹாளய பட்சம் விளக்கம் & தர்பண பலன்களும் 

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம் . இது வருடத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். இந்த அமாவாசை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது .தை மற்றும் ஆடி அமாவாசையை விட உயர்ந்தது .

அமாவாசை மற்றும் தமிழ் மாதங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் திதிகளில் சிரார்த்தம் செய்வோம் . ஆனால் மஹாளய பட்சத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் .

மஹாளய பட்ச திதிகளும் – தர்பண பலன்களும் 

 • பிரதமை – பணம் சேரும் 
 • துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும் 
 • திரிதியை – நினைத்தது நிறைவேறும் 
 • சதுர்த்தி – பகைவர்களிடம் இருந்து தப்பித்தல் 
 •  பஞ்சமி – வீடு ,நிலம் முதலான சொத்து வாங்குதல் 
 • சஷ்டி – புகழ் கிடைத்தல் 
 • சப்தமி – சிறந்த பதவிகள் அடைதல் 
 • அஷ்டமி – சமயோசித புத்தி , அறிவாற்றல் கிடைத்தல்
 • நவமி -சிறந்த மனைவி மற்றும் அறிவாற்றல் உள்ள பெண் குழந்தை பிறத்தல் 
 • தசமி – நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல் 
 • ஏகாதசி – படிப்பு , விளையாட்டு , கலையில் வளர்ச்சி 
 • துவாதசி – தங்க நகை சேர்தல் 
 • திரியோதசி – பசுக்கள் , விவசாய அபிவிருத்தி 
 • சதுர்த்தி – பாவம் நீங்குதல் , தலைமுறை நன்மை 
 • மஹாளய அமாவாசை – எல்லா பலன்களும் நம்மை சேர முன்னோர்கள் ஆசி வழங்குதல் .

மஹாளய தர்பணம் – சில குறிப்புகள்

வருஷ ப்ரத்யாப்திக ஸ்ரார்த்த திதி தாயாருக்கோ, தந்தைக்கோ மஹாளயபக்ஷ நடுவில் வருமாயின், ஸ்ரார்த்தம் முதலின் செய்யப்படவேண்டும்.அதற்கு ஈடாக பின் வரும் க்ருஷ்ணபக்ஷ திதியில் மஹாளயபக்ஷம் அப்பா, அம்மா, மூதாதையர்களுக்கு செய்யவேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தினால் மஹாளயபக்ஷ தர்பணம் செய்யமுடியாமல் போனால், அதற்கு ஈடாக  வரும் கார்த்திகை க்ருஷ்ணபக்ஷத்திற்கு முன்னால் செய்து முடிக்கப்படவேண்டும்.

மஹாளயபக்ஷம் செய்யும்போது, ஸங்கல்பம் முடிந்த உடன் ஹிரண்யம் (பணம்) ப்ராஹ்மணர்களுக்கு தத்தம் கொடுக்கவேண்டும் (இதன் பின் தர்பணம்).

தகப்பனார், தாயார் ஸ்ரார்த்த திதிகளிலாவது அல்லது மஹாளயபக்ஷத்தில் பஞ்சமி திதிக்கு மேல் மத்யாஷ்டமி, வ்யதீபாதம், கஜச்சாயை மஹாபரணி முதலிய புண்ய தினங்களிலாவது மஹாளய தர்பணம் செய்யவேண்டும்.

ஆயுதம் முதலியவைகளால் பிதா மரணம் அடைந்திருந்தால் சஸ்த்ரஹத மஹாளயம் என்ற முறையையொட்டி சதுர்த்தஸி திதியில்தான் மஹாளய தர்ப்பணம் செய்யவேண்டும்.

மஹாளய தர்ப்பணம் செய்யும் முறை :

ஒரு கூர்ச்சம் பண்ணுபவர்கள் ஸகாருணீக வர்கத்வய பித்ரூண் ஆவாஹயாமி என்று ஆவாஹனம் பண்ணவும்.

தந்தை/தாய் வழி தர்ப்பணம் முடிந்தபின் – கீழ்க்கண்ட மந்திரத்தைக் கூறி கூடுதலாக தர்ப்பணம் கொடுக்கவும்.

ஞாதாக்யாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்பயாமி” என்று சொல்லக்கூடாது அதற்கு பதில்) தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு-வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஸிஷ்ட்டாணாம் ஸர்வேஶாம் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (மூன்று தடவை அர்க்யம் விடவும்).

(யதாஸ்தானம் – முதலில் கூர்ச்சத்தை எள்ளை எடுத்து ஆவாஹனம் செய்த மாதிரி எடுத்துப்போடவும்) – ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை:பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிம் ச தீர்காயுத்வம் ச ஶதஶாரதஞ் ச அஸ்மாத் கூர்ச்சாத் (ஒரு கூர்ச்சமா இருக்கரவா) ஸகாருணீக வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று எள்ளைப்போடவும்.

தனித்தனியாக மூன்று கூர்ச்சம் வைத்துக்கொண்டிருந்தால் – பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான் –(அம்மா இல்லாதிருப்பின் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச்ச) (அம்மா இருந்தால்…… பிதாமஹீ, பிது: பிதாமஹீ, பிது:ப்ரபிதாமஹீ ) யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று முதல் கூர்ச்சத்தில் போடவும்.

இரண்டாவது கூர்ச்சத்திற்கு ஸபத்னீக மாதாமஹ மாதுபிதாமஹ: மாது ப்ரபிதாமஹான் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று இரண்டாவது கூர்ச்சத்தில் எள்ளை போடவும்.

மூன்றாவது கூர்ச்சத்திற்கு : தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மாணாம் வஸு-வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஸிஷ்ட்டானாம் ஸர்வானாம் ஸகாருணீக பித்ரூன் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று கூர்ச்சத்தில் எள்ளை போடவும்.

செய்யக்கூடாதவை :


அன்றைய தினம் கண்டிப்பாக வெங்காயம் ,பூண்டு,கத்தரிக்காய் ,முருங்கைக்காய் ஆகிய காய்களை சேர்க்கக்கூடாது . மஹாளய பட்ச நாட்களில் கண்டிப்பாக முடி வெட்டிக்கொள்ளவோ ,சவரம் பண்ணவோ கூடாது . நகங்களை வெட்டக்கூடாது . வெளியிடங்களில் சாப்பிடக்கூடாது.

கண்டிப்பாக செய்ய வேண்டியது :


மஹாளய பட்சம் பிரதமை முதல் பிரதமை வரை 16 நாட்களும் தர்ப்பணம் செய்யவேண்டும் .ஒரு நாளாவது செய்தல் நல்லது . பஞ்சமி (மஹாபரணி ),அஷ்டமி (மத்யாஷ்டமி ),துவாதிசி (சந்யஸ்த), திரியோதிசி (கஜச்சாயை ) ஆகிய நாட்கள் நாட்களில் செய்தால் நல்ல பலனை தரும். தினமும் குளித்துவிட்டு அன்னம் சமைக்கவேண்டும். கண்டிப்பாக காக்காவுக்கு அன்னம் இடவேண்டும் . வயதானவர்கள் ,பிராமணர்கள் ஆகியவர்களுக்கு முடிந்த அளவு தானம் பண்ணவேண்டும் . வசதி இல்லாத குழந்தைகளுக்கு கல்வி பயல நம்மால் முடிந்த உதவிகள் செய்யவேண்டும் .

சங்கல்பம்

இங்கிருந்து தொடங்கவும்…..(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது. ஆசமனம்…….அச்சுதாய நம:, கோவிந்தய நமஹ, கேசவா, நாராயணா……..தாமோடரா……பிறகு………..சுக்லாம் பரதரம் விஷ்ணும்………………….ஓம் பூ: +பூர்புவஸ்வரோம், ம்மோபாத்த சமஸ்த ……+ ப்ரீத்யர்த்தம், அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷ, ஸபாஹ்ய, அப்யந்தர: சுசிஹி மானஸம் வாசிகம், பாபம், கர்மணா சமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நசம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஸ்ச்ச கரணம்சைவ சர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்யயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்சதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே ஸஹாப்தே அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்சராணாம், மத்யே….. பிறகு மஹாளய தின தர்பண சங்கல்பத்தை கூறவேண்டும்.

இந்த பதிவை பெரியோர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் துணையோடு தொகுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *