பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்
நாம் தினமும் வீட்டில் மற்றும் கோயில்களில் இறைவனுக்கு பூஜைகள் முடிந்தவுடன் கற்பூர ஆர்த்தி எடுக்கிறோம் , அவ்வாறு எடுக்கும் கற்பூர ஆர்த்தியின் போது கீழ் உள்ள மந்திரத்தை சொல்லி எடுத்தால் அது மிகுந்த பலனை தரும் .
பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்
ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
ஸமேகமான் காம காமாய மஹ்யம் !
காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !
குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:
பொது பொருள்
அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியைத் தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதைக் கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களைப் போற்றுகிறேன்.
மேலே உள்ள பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் .
நாம் குபேர சம்பத்துகளுடன் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார்.
இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் ஜபிப்பது நல்லது.