Sri Rajaganapathy Temple – Salem

ஸ்ரீ இராஜகணபதி கோயில் – சேலம்

Rajaganapathi Temple, Salem

 சேலத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு கோயில் இந்த இராஜகணபதி கோயிலும் ஒன்றாகும் . சுமார் 400 வருடங்கள் பழமையான கோயிலாகும் . கோயில் சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது .

சேலம் வருவார்கள் இந்த தலத்து விநாயகரை தரிசிக்காமல் திரும்புவதில்லை , அவ்வளவு பெருமைக்குரிய கோயில் .

இறைவன் விநாயகர் தினமும் இராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் இவருக்கு “இராஜகணபதி ” என்ற பெயர் ஏற்பட்டது .

காலை 6  மணி முதல் இரவு 10  மணி வரை இவருக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும் . தேய்பிறை ,வளர்பிறை மற்றும் சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு கணபதி யாகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது . அவனியில் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுகிறது .

சுகவனேஸ்வரர் சிவன் கோயிலுக்கு அருகிலேயே இராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது . சுகவனேஸ்வரர் கோயிலுக்கு உடைய சிறப்புக்கள் அனைத்தும் இக்கோயிலுக்கு உள்ளதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கிறது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

செல்லும் வழி :

சேலம் நகரத்தின் மையத்தில் முதல் அக்ராஹாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .

நம் துன்பங்களையும் , வினைகளையும் தீர்க்கும் இந்த முதல்வனை வணங்கி வாழ்வில் எல்லா வசதிகளும் பெற்று இன்புற்று வாழோவோமாக .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *