Sri Vriddhagirishwarar Temple- Vriddhachalam

ஸ்ரீ  பழமலைநாதர்(விருத்தகரீஸ்வர்) கோயில் – விருத்தாச்சலம்

Sri Vriddhagirishwarar Temple- Vriddhachalam

இறைவன்  : விருத்தகிரீஸ்வரர்

இறைவி  : விருத்தாம்பிகை , பாலாம்பிகை

தல விருச்சம் : வன்னி மரம்

தல தீர்த்தம் : மணிமுத்தாநதி

புராண பெயர் : திருமுதுகுன்றம்

மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு

  • தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலங்களில் இது 9 வது தலம் .தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இத்தலம் 220 வது தலமாகும் .
Sri Vriddhagirishwarar Temple- Vriddhachalam
  • விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
Sri Vriddhagirishwarar Temple- Vriddhachalam
  • இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது.
Sri Vriddhagirishwarar Temple- Vriddhachalam
  • கல்வெட்டுக்களில் இருக்கும் அரசர்களின் பெயர்கள் : பராந்தக சோழன், கண்டராதித்த  சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர  சோழன், இராஜாஜி ராஜ சோழன், விக்கிரம சோழன், 2-ம் இராஜராஜ சோழன், 3-ம் குலோத்துங்க  சோழன், ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், வீரசேகர காடவராயன், அரச  நாராயணன் கச்சிராயன், கோப்பெருஞ்சிங்கன், கச்சிராயன் எனும் அரச நாராயணன் ஏழிசை  மோகன், விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், மாவர்ம பாண்டியன்,  கோனேரின்மை கொண்டான், அரியண்ணா உடையார், பொக்கண உடையார், கம்பண உடையார்,  வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி முதலியவையாம்.
  • சக்கரங்களுடன் அமைந்த முருகர் : இறைவனுக்கும் விருத்தாம்பிகைக்கும் நடுவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்றகோலத்தில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 28 சிவலிங்கங்கள் ஆகம விதிகள் படி அமைந்துள்ளது .முருகர் இங்கு பின் சக்கரங்களுடன் காணப்படுகிறார் ,இவரை வணங்கினால் எல்லா வளமும் கிட்டும் .இவ்வாறு சக்கரத்துடன் சில கோயில்களில் மட்டுமே காணப்படுகிறது .
Sri Vriddhagirishwarar Temple- Vriddhachalam
Alathupillayar

ஆழத்து பிள்ளையார்
18 அடி ஆழத்தில் உள்ள ஆழத்துவிநாயகர் சன்னதி.விநாயகரின் 6 படை வீடுகளில் இவ் பிள்ளையார் இரண்டாம் படை வீடாகும் .ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது
ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.

  • இக்கோயின் மாசி மகம் 10 நாட்கள் உற்சவம் மிகவும் பிரசித்து பெற்றது
Sri Vriddhagirishwarar Temple- Vriddhachalam

கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .30 வரை ,மாலை 3 .30 -9 .00 வரை

அமைவிடம் :
சென்னையில் இருந்து சுமார் 220 km தொலைவிலும் ,பாண்டி இல் இருந்து சுமார் 60 km தொலைவிலும் ,உளுந்தர்பேட்டையில் இருந்து 14 km தொலைவிலும் ,சிதம்பரத்தில் இருந்து சுமார் 35 km தொலைவிலும் உள்ளது.சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து  ரயில்களும் இங்கு நின்று செல்லும் 

Location:
https://www.google.co.in/maps/place/Sri+Virudhagireeswarar+Temple/@11.5168339,79.3172565,17z/data=!3m1!4b1!4m12!1m6!3m5!1s0x3bab4a71123a11fb:0x320568e1eb24483a!2sSri+Virudhagireeswarar+Temple!8m2!3d11.5168287!4d79.3194452!3m4!1s0x3bab4a71123a11fb:0x320568e1eb24483a!8m2!3d11.5168287!4d79.3194452?hl=en

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *