ஸ்ரீ குற்றாலநாதர் கோயில் - குற்றாலம் இறைவன் : குற்றாலநாதர் இறைவி : குழல்வாய்மொழி,பராசக்தி தலவிருச்சம் : குறும்பலா தலதீர்த்தம் : சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி. புராண பெயர் : திரிகூடமலை ஊர் : குற்றாலம் மாவட்டம் :…
ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் -திருவானைக்காவல் இறைவன் : ஜம்புலிங்கேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல விருச்சகம் : வெண் நாவல் தீர்த்தம் : நவதீர்த்தங்கள் ,காவேரி புராணப்பெயர் : திருஆனைக்காவல் ,திருவானைக்கா ஊர் : திருவானைக்காவல் மாவட்டம் : திருச்சி ,…
ஸ்ரீ ராமநாதர் கோயில் -ராமேஸ்வரம் இறைவன் : ராமநாதசுவாமி ,ராமலிங்கேஸ்வரர் இறைவி : பர்வதவர்த்தினி தீர்த்தம் : கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் ஊர் : ராமேஸ்வரம் மாவட்டம் : ராமநாதபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில்…
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் -திருவண்ணாமலை இறைவன் : அருணாசலேஸ்வரர் ,அண்ணாமலையார் இறைவி : அபிதகுசாம்பாள் ,உண்ணாமலையம்மை தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் தல விருச்சகம் : மகிழம் மரம் ஊர் : திருவண்ணாமலை மாவட்டம் : திருவண்ணாமலை ,தமிழ்நாடு தேவார…
ஸ்ரீ நாகேஸ்வரர் சுவாமி கோயில் - கீழ் கோட்டம் ( கும்பகோணம் ) இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : பெரியநாயகி தல விருச்சகம் : வில்வம் தல தீர்த்தம் : சிங்கமுத்து தீர்த்தம் புராண பெயர் : கீழ் கோட்டம்…
ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் இறைவன் : மாசிலாமணீஸ்வரர் இறைவி : கொடியிடைநாயகி ஆகமம் : சிவாகமம் தல விருச்சகம் : முல்லை தீர்த்தம் : அக்னி தீர்த்தம் ஊர் : வட திருமுல்லைவாயில் மாவட்டம் : திருவள்ளூர் மாநிலம்…
ஸ்ரீ உச்சிநாதேசுவரர் கோயில் - சிவபுரி (திருநெல்வாயல்) இறைவன் : உச்சிநாதேசுவரர் இறைவி : கனகாம்பிகை தல விருச்சம் : நெல்லி தல தீர்த்தம் : கிருபா சமுத்திரம் புராண பெயர் : திருநெல்வாயல் ஊர் : சிவபுரி மாவட்டம் :…
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்-ஆடுதுறை இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர் இறைவி : பவளக்கொடியம்மை தல விருச்சகம் : பவள மல்லிகை தல தீர்த்தம் : சகாயதீர்த்தம் , சூரிய தீர்த்தம் புராணப்பெயர் : திருதென்குரங்காடுதுறை மாவட்டம் : தஞ்சாவூர் மாநிலம் : தமிழ்நாடு https://www.youtube.com/watch?v=MhGwTQJEjNo&list=PLoxd0tglUSzdJtScu-zLknNLNWoMq12iy&index=2…
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் - சாத்தனுர் (திருமூலர் அவதார தலம் ) 63 நாயன்மார்களில் ஒருவரும் 18 சித்தர்களில் ஒருவரான திருமூலர் அவதார தலம் . திருமூலர் அவதாரம் : திருக்கைலத்தில் இருந்து யாத்திரையாக ஒரு சிவனடியார் அகத்தியரை காண தென் இந்தியாவை நோக்கி வந்தார் . அவர் காவேரி கரையோரம் உள்ள இந்த கிராமத்தின் வழியாக சென்றபோது இவ்விடத்தில் மேய்ச்சலுக்காக வந்த பசுக்கள் ஒரு இடத்தில கூடியிருந்ததை கண்டு அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார் .எல்லா பசுக்களும் கண்ணீர் சிந்தியவாறு நின்று இருந்ததை கண்டு அவற்றின் நடுவில் சென்று பார்த்தார் .அப்போது அங்கு நெற்றியில் விபூதியையும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்திருந்த ஒருவர் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்துபோனார் . அவனும் தன்னை போல் ஒரு சிவா பக்தன் என்பதை கண்டு வருத்தமுற்றார் .இதனை நாட்களாக பசுக்களை வளர்த்து பராமரித்த தன் மேய்ப்பவன் இறந்ததை கண்டு அந்த பசுக்கள் அழுவதை கண்டு கவலையுற்றார் .அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது ,அங்கு இருந்த ஒரு மறைவான இடத்திற்கு சென்று தரையில் படுத்துக்கொண்டார் .கண்களை மூடிக்கொண்டு நமசிவாயத்தை சொல்லிக்கொண்டு உயிரின் மைய புள்ளியை உற்றுக் கவனித்தார் ,இன்னும் ஊர்ந்து கவனிக்க அது அசைந்து இருபுறமும் நகர்ந்தது பின்பு தன் உடலில் இருந்து நழுவி சென்று பேய்ப்பவனின் உடலில் சென்று அடைந்தது. ஆமாம் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார் !மேய்ப்பவன் தன் உடலில் உயிர் வந்தவுடன் அவன் மெதுவாக எழுந்தான் .இதை கண்டா பசுக்கள் பயத்தில் அந்த இடத்தில் இருந்து விட்டு வேகமாக சென்று அவைகள் தன் இருப்பிடத்தை அடைந்தன .எல்லா பசுக்களும் வந்துவிட்டன ஆனால் அவைகளை மேய்க்க சென்ற தன் கணவன் வரவிலேயே என்று எண்ணி அவள் தவித்தாள் .அப்போது மூலன் அங்கே வந்தான் ,அவள் மகிழ்ச்சியுற்று அவனது கைகளை பற்றினாள் .உடனே மூலன் அவள் கைகளை உதறி விட்டு உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி நடந்தவைகளை பற்றி கூறினார் .உடனே அவள் கதறி அழுதாள் இதை அறிந்து ஊர் மக்களும் அழுதார்கள் . மூலன் தன் உடலை விட்டு வந்த இடத்திற்கு சென்றார் .ஆனால் அங்கு அவர் உடல் இல்லை ,இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார் இனிமேல் இந்த உடல்தான் நாம் இருக்கவேண்டுமா என்று வருத்தமுற்றார் .அப்போது இறைவன் இவருக்கு திருகாட்சிதந்தார் .அவர் இவரிடம் எல்லா உயிர்களும் ஒருவருடையதுதான் .மரம் ,செடி ,விலங்குகள் ,மனிதன் என்று எல்லா உயிர்களிலும் நீ இருக்கிறாய் உடல் மட்டுமே வேறு ஆகும் உயிர் ஒன்றுதான் என்று மூலன் ரகசியத்தை உயர்த்திவிட்டு சென்றார் . அந்த மூலன் வேற யாரும் இல்லை ,வருடத்திற்கு ஒரு திருமந்திரம் மூலம் 3000 வருடங்கள் வாழ்ந்து 3000 திருமந்திரங்களை தந்த திருமூலர் தான் அவர் . செல்லும் வழி: . மாயவரம் - கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு அல்லது நரசிங்கப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும் . பேருந்து வசதிகள் இல்லை . அருகில் உள்ள கோயில்கள் : திருவாவடுதுறை பாடல் பெற்ற தலம், நரசிங்கப்பேட்டை நரசிம்மர் ,நரசிங்கப்பேட்டை சுயம்பு நாதர் கோயில் Location: