ஸ்ரீ வேங்கடேஸ்வரர் கோயில் – துவாரகா திருமலை
இறைவன் : வேங்கடேஸ்வரர்
தாயார் : பத்மாவதி தாயார்
ஊர் : துவாரகா திருமலை
மாவட்டம் : மேற்கு கோதாவரி
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
- சின்ன திருப்பதி என்று எல்லோராலும் இக்கோயிலை அழைப்பார்கள் ,திருப்பதியில் வருவதை போல் இக்கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகிறார்கள் .
- கிபி 1877 -1902 காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் ,மயிலாவரம் ஜமீன்தார் இக்கோயிலை கட்டினார்.கி பி 1762 -1827 காலகட்டத்தில் தர்ம அப்பா ராவ் என்பவரால் கோயில் விமானம் ,மண்டபம் ,கோபுர பிரகாரம் ஆகியவை கட்டப்பட்டது .கி பி 1877 -1902 காலகட்டத்தில் ராணி சின்னமா அவர்கள் தங்க ஆரம் மற்றும் வெள்ளி வாகனங்களை அன்பளிப்பாக தந்தார்
- வரலாறு : சந்நியாசி துவாரகா என்பவர் இந்த வால்மீகம் மலையில் பெருமாளை எண்ணி கடும் தவம் புரிந்தார் ,அவரின் கடும் தவத்தால் இங்கு பெருமாள் சுயம்பாக தோன்றினார் ,அதனாலேயே இவ்வூர் மற்றும் இவ் மலை எல்லாவற்றையும் துவாரகா திருமலை என்று அழைக்கப்படுகிறது .இக்கோயிலை ‘கலியுக வைகுண்ட வாசன்’ என்று அழைக்கிறார்கள்
- சுயம்புவாக வெளிவந்ததால் பெருமாள் மார்பு அளவே இங்கு தெரிகிறார்.மீதி உடல் நிலத்தில் உள்ளேயே இருக்கிறது . ஸ்ரீராமானுஜர் இங்கு விஜயம் செய்யும் போது கருவரையில் சுவாமி சின்னதாக பார்ப்பவர்களுக்கு சரியாக தெரியாத காரணத்தால் அவர் சுயம்பு பெருமாளுக்கு பின்புறம் பெரிய பெருமாள் சிலையை நிறுவினார் . ஆதலால் கருவறையில் இரண்டு பெருமாள் நமக்கு அருளை வாரி தருகிறார்கள் .
- சிறிய பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதில்லை .இக்கோயிலில் கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது .சிறிய பெருமாளுக்கு vaisakha மாதத்திலும் ,பெரிய பெருமாளுக்கு Aswayaja மாதத்திலும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-venkateswarar-temple-dwaraka.html
Sri Venkateswara Swami Vari Devasthanam is a religious shrine that is located in a small village, by the name Dwaraka Tirumala in Andhra Pradesh .
The main shrine encompasses the sanctum sanctorum where the self-manifested deity of Lord Venkateshwara is placed. This idol is visible till the bust and the lower part is regarded as to be immersed in the Earth. The sacred feet of the Lord, are known to be worshipped in ‘Patala’. The full-scale idol of Lord Venkateshwara stands at the back of the main image. It is believed to have been placed by Srimad Ramanuja, a great social reformer of the 11th century.
opening Time:
Morning 4.00 Am to 01.00 PM Evening 3.00 Am to 9.00 PM
How to Reach:
From Rajahmundry 73 km,From Eluru 45Km,from Vijayawada 100 km
Location: