ஸ்ரீ சூரியனார் கோயில் – சூரியனார் கோயில்
இறைவன் : சிவசூரியன்
அம்பாள் : உஷா , சாயா தேவிகள்
தல விருச்சகம் : வெள்ளெருக்கு
தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
ஊர் : சூரியனார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
- இக்கோயிலில் சூரியனே பிரதான தெய்வமாகும் ,இந்தியாவில் உள்ள இரண்டு சூரியன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று .
- சூரியன் தன் மனைவிகளான உஷா மற்றும் பிரத்யுஷா என்னும் சாய தேவிகளுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறரர் .
- சூரியன் கிழக்கே உதிப்பவர் என்பதால் அவர் முகம் மேற்கு நோக்கியே இருக்கும் ஆதலால் இக்கோயிலில் அவர் மேற்கு நோக்கி காட்சிதருகிறார் .
- அவரின் முன் அவரின் வாகனமான குதிரை இருக்கிறார் ஆனால் குதிரைக்கு முன் குருவை பிரதிஷ்டை செய்துள்ளார்கள் ,ஏன்னெனில் அவரின் உக்கிரத்தை சாந்தப்படுத்துவதற்காக குருவை பிரதிஷ்டை செய்துள்ளார்கள் .
- சனி பெயர்ச்சி தோஷம் உள்ளவர்கள் ,கிரஹ தோஷம் உள்ளவர்கள் ,சூரிய திசை ,சூரிய புத்தி ,சூரிய தோஷம் உள்ளவர்கள் 78 நாள் விரதத்தை கடைபிடிக்கின்றனர் .
- நவகிரஹ தலங்களில் இது சூரிய தலமாகும் ,மற்றும் எல்லா கிரகங்களுக்கும் தனி தனி சன்னதி உள்ளது. மூலவருக்கு மட்டுமே வாகனம் உள்ளது .
- காலவ முனிவருக்கு தொழுநோய் வந்தது அதை போக்குவதற்காக அவர் கிரகங்களை வணங்கினர் அவர்களும் அவருக்கு வரம் தந்து தொழுநோயை போக்கினர்.இதனை கேள்வியுற்ற ப்ரம்மா கோபமுற்று எல்லா உயிர்களுக்கும் அவர் அவர்களது பாவ புன்னியங்கள் அடிப்படையிலேயே பலன்கள் கொடுக்கப்படுகின்றன ,நீங்கள் அவருக்கு வரம் தந்து அவரின் பாவ புண்ணியங்களை தடுத்துவிட்டதால் அவருக்கு ஏற்பட்ட தொழுநோய் உங்களுக்கு ஏற்படட்டும் என்று சாபம் தந்தார் . இவ் சாபத்திலிருந்து விடுபட அவர்கள் பூமிக்கு வந்து சிவனை நோக்கி தவம் இருந்தனர் ,சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கட்டும் ,இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நீங்கள் அனுக்ரஹம் செய்யவேண்டும் என்று கூறி அருளினார் .
- இக்கோயிலை சோழர்கள் கட்டினார்.சூரியனார் கோவிலை கி.பி. 1110-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான்.
- ரத தசமி ,தை பொங்கல் ,தை அஷ்டமி ,மாசி சிவராத்திரி ஆகிய நாட்கள் விசேஷ நாட்களாகும் .
அமைவிடம் :
கும்பகோணம் அருகில் உள்ளது . கும்பகோணத்திலிருந்து 25 km தொலைவில் உள்ளது .நிறைய பேருந்து வசதிகள் உள்ளன .