Sri Shivaloka Thyagarajar Temple- Achalpuram

 ஸ்ரீ சிவலோகத் தியாகர் கோயில் – ஆச்சாள்புரம்

Sri Shivaloka Thyagarajar Temple- Achalpuram

இறைவன் : சிவலோகத் தியாகர்

உற்சவர் : திருஞானசம்பந்தர்

இறைவி : திருவெண்ணீற்று உமையம்மை , சுவேத விபூதி நாயகி

தல விருச்சகம் : மாமரம்

தீர்த்தம் : பஞ்சாக்கர ,பிருகு ,வசிஷ்ட ,வியாச மிருகண்ட தீர்த்தம்

புராண பெயர் : சிவலோகபுரம் ,திருமண நல்லூர்

ஊர் : ஆச்சாள்புரம்

மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு

பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தலங்களில் இது 5 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 274 இல் 5 வது தலமாகும் .

Sri Shivaloka Thyagarajar Temple- Achalpuram

தலவரலாறு :

சிவபாத இருதயரின் மகனாக திருஞானசம்பந்தர் சீர்காழியில் அவதரித்தார் .மூன்று வயதில் அம்பிகை ஞானப்பால் ஊட்டப்பட்டு சிவஞானம் பெற்றார் .ஈசனின் அருளால் பல சிவத்தலங்களை சென்று பதிகம் பாடி பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் .

இவருக்கு 16 வது வயதில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது . முதலில் மறுத்த சம்பந்தர்  பின் இதுவும் “ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்று “ என்று அறிந்து திருமணத்திற்கு சம்மதித்தார் .சீர்காழிக்கு அருகில் உள்ள திருநல்லூர் என்ற ஊரில் வசித்துவந்த நம்பியாண்டார் நம்பியின் மகள் தோத்திரம் பூர்ணாம்பிகையை மணம் பேசி முடித்தார்கள் .பெருமணம் சிவாலயத்தில் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது .

திருமணநாள் வந்தது ,திருநீலகண்ட யாழ்ப்பாணர் ,முருக நாயனார் ,திருநீலநக்க நாயனார் மற்றும் சம்பந்தர் உறவினர்கள் ,அடியவர்கள் யாவரும் திருநல்லூர் என்னும் இந்த ஊரில் உள்ள பெருமணம் சிவாலயத்தில் திரண்டனர் .அப்போது அம்மையார் அவர்கள் முன் தோன்றி சம்பந்தரின் திருமணத்தை காணவந்த அனைவருக்கும் திருநீறு அளித்து வரவேற்றார் .இதனால் தான் இத்தல அம்மையாருக்கு “திருவெண்ணீற்று உமையம்மை “ என்ற திருநாமம் வந்தது .இதனாலேயே  இத்தல அம்பிகை சன்னதியில் குங்குமத்திற்கு பதில் திருநீறையே பிரசாதமாக தருகிறார்கள் .இவ்வாரு திருநீறு வழங்கி அருளியதால் இத்தலம் அதுமுதல் ‘ஆச்சாள்புரம் ‘ என வழங்க பெற்றது .

திருமண வேள்வி சடங்குகள் நடந்தன ,திருநீலநக்க நாயனார் ,மணவிழா  சடங்குகளை செய்தார் .சம்பந்தர் அக்னியை வலம் வரும்போது ‘இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே ,இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்’ என்று ‘கல்லூர்ப் பெருமணம் ‘எனத் தொடங்கும் பதிகம் பாடினார் .

அப்போது அங்கு அசரீரி எல்லோருக்கும் கேட்குமாறு ஒலித்தது .’சம்பந்தா! இப்போது கருவறையில் எனது லிங்கமேனியில் இருந்து பெருஞ்சோதி தோன்றும் ,அந்த ஜோதியில் நான் ஒரு வாசலையும் அமைத்திருப்போம் . அந்த வாசலின் வழியாக நீயும் ,உன்னுடைய திருமணத்தை காண வந்த அனைவரும் இந்த சிவஜோதியில் புகுந்து எம்முன் கலந்திடுக ! என்று சொன்னது . சம்பந்தர் நமச்சிவாய மந்திரத்தில் மேன்மையை கூறி ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ‘ என்றும் நமச்சிவாய பதிகம் பாடி நம்முடன் வந்தவர்கள் எல்லோரையும் கருவறையில் தோன்றிய சிவலிங்க ஜோதியில் புகுமாறு கூறி ,தாமும் தன் மனைவியுடன் அந்த ஜோதியில் புகுந்தார் .

கருவறையில் ஜோதி மறைந்து பிளந்திருந்த சிவலிங்கம் முன்பு போல் மீண்டும் ஒன்றாகியது . இவ்வாறு எல்லாருக்கும் முக்தி அளித்ததால் இத் தல ஈசனை சிவலோகதியாகேசர் என்ற திருநாமம் வந்தது .இவ்வாறு சம்பந்தர் ,அவரது மனைவி ,திருநீலகண்ட யாழ்ப்பாணர் ,முருக நாயனார் ,திருநீலநக்க நாயனார் மற்றும் அடியவர்களையும் உள் வாங்கிய இந்த லிங்க நமக்கும் சிவலோக பதவி தர காத்திருக்கிறது .

ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நன்னாளில் இத்தலத்தில் சம்பந்தருக்கு திருமணமும் ,சம்பந்தர் சிவஜோதியில் அவருக்கும் வைபவமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது .

Sri Shivaloka Thyagarajar Temple- Achalpuram

இக்கோயில் சம்பந்தர் திருமணம் செய்து கொண்ட ‘தோத்திர பூர்ணாம்பிகை ‘அம்மையுடன் மணக்கோலத்தில் உள்ள மூலத்திருமேனி உள்ளன . சம்பந்தர் ஜோதியில் ஐக்கியமான காட்சி வண்ண சுதை ஓவியமாக உள்ளது . சோழ ,பாண்டிய ,மகாராட்டிய மன்னர்கள் காலத்தில் கல்வெட்டுகள் உள்ளன .

இவ்வளவு சிறப்புகளும் ,நமக்கெல்லாம் முக்தி தந்து சிவலோக பதவி அளிக்க தயாராக இருக்கும் .இந்த தலத்தில் இன்று வரை நாம் கண்டு தரிசிக்காமல் இருந்தால் உடனே சென்று தரிசனம் செய்யுங்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-shivaloka-thyagarajar-temple.html

கோயில் திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 ,மாலை 5 .00 -8 .00 வரை .

தொலைபேசி எண்: 04364 -278272

செல்லும் வழி:

சிதம்பரம் இருந்து சீர்காழி செல்லும் வழியில் கொள்ளிடம் ஊருக்கு சென்று அங்கிருந்து ஆச்சாள்புரம் சுமார்  5 km தொலைவில் உள்ளது .இதே சாலையில் மேலும் 6 km தொலைவில் சென்றால் மற்றொரு பாடல் பெற்ற தலமான மகேந்திரப்பள்ளி உள்ளது .சிதம்பரத்தில் இருந்து 15 ம் எண் பேருந்து செல்கிறது ,பகல் நேரத்தில் சென்றால் இரண்டு கோயில்கள்களையும் எளிதில் தரிசிக்கலாம் .   

Location

one of the 274 devara hymns place.and 5th shiva sthalam on the north bank of the river cauvery in chozha nadu. saint thiruganasambanthar attained Mukthi here during his wedding along with entire gathergs. hence this is the only temple where sambanthar can be seen with his wife. sambanthar sang his last pathigam here. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *