Sri Saranarayana perumal – Thiruvathigai

ஸ்ரீ சரநாராயண பெருமாள் -திருவதிகை

மூலவர் : ஸ்ரீ சரநாராயணர் பெருமாள்

அம்பாள் : ஹேமாம்புஜவல்லித்தாயார் ,செங்கமலத்தாயார்

தீர்த்தம் : கருடதீர்த்தம்

ஊர்: திருவதிகை , பண்ரூட்டி

மாவட்டம் : கடலூர்

Sri Saranarayana perumal-tiruvathigai
Entrance
 • 2000 வருட பழமையான கோயில்
 • மற்ற கோயில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்தக்கோயிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சிதருகிறார்
 • உப்பிலியப்பன் ஸ்ரீனிவாசனை போல் இங்குள்ள சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் காட்சிதருகிறார்
 • மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்ராமத்தால் ஆனவர்
 • திரிபுர சம்ஹாரத்தில் சிவபெருமானுக்கு சரம் கொடுத்து உதவியதால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறரர்
 • சித்திரை சிறப்பு திருமஞ்சனம் ,வைகாசி வசந்த உற்சவம் ,ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை ,ஆவணி ஜெயந்தி உற்சவம் ,புரட்டாசி பெருமாள் புறப்பாடு என மாதம்தோறும் ஒரு விழா நடைபெறுகிறது .
 • இது ஒரு பிராத்தனை தலமாகும்
 • அம்மாவாசைதோறும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றப்படுகிறது.
 • நிகமாந்த மகாதேசிகரால் மங்களாசனம் செய்யப்பட்டது
 • வில்லிபுத்தூரார் எழுதிய மகாபாரத்தில் அர்ஜுனன் குருஷேத்ர போர் முடிந்து இந்த தலத்தில் வந்துதான் ப்ராயச்சித்தம் தேடிக்கொண்டதாக கூறியுள்ளார் .
 • பிரமாண்ட புராணத்தில் 4 அத்தியாயத்தில் இக்கோயிலின் பெருமை கூறப்பட்டுள்ளது
 • பல்லவர்களால் கட்டப்பட்ட கோயில்

தல வரலாறு :

ஸ்ரீமந் நாராயணர் அவரிடம் சிவபெருமான் திரிபுரா அசுரர்களை அழிக்க உதவி செய்யுமாறு கேட்கிறார் அதற்க்கு நாராயணர் சிவபெருமானிடம் தேவர்களின் உதவியுடன் தேரை அமைத்து ப்ரம்மாவை தேரோட்டியாகவும் பூமியை ரதமாகவும் சூரியன் சந்திரரை சக்கரங்களாகவும் நான்கு வேதங்களை குதிரையாகவும் வைத்துக்கொண்டு மேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் செய்து யுத்தத்தை தொடங்குமாறு கூறினார் வில்லிற்கு நான் அம்பாக விளங்கி திரிபுரர்களை சம்ஹாரம் செய்வதாக கூறினார் ஆதலால் இத்திருத்தலத்தில் அவர் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறது . இன்றும் வீரட்டேஸ்வரர் கோயில் வைகாசி மாத திரிபுரர் எரிக்கும் விழாவில் நாராயணர் கருட வாகனத்தில் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சை நடைபெறுகிறது .

Sri Sayanakola narasimar-Tiruvathigai
Sri Sayanakola Narasimar 

சயனகோலத்தில் நரசிம்மர்

 • இக்கோயிலில் சயன கோலத்தில் (படுத்திருக்கும் ) நரசிம்மர் தாயாருடன் காட்சிதருகிறார்
 • திருமாலின் திருக்கோயில்களில் இந்தக்கோயிலில் தான் நரசிம்மர் சயன கோலத்தில் தெற்கு நோக்கி சயனத்திருக்கிறார்
 • 700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் இவரை வழிபட்டதாக கூறுகிறார்கள்
 • இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனத்துளார்.
 • தாயாருடன் எழுந்தருளியதால் இது போக சயனம் ஆகும் .
 • சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது
 • சிங்கர்குடி ,பூவரசன்குப்பம் ,பரிக்கல் ஆகிய நேர்கோட்டில் உள்ள நரசிம்மரை வணங்கும் போது இத்தலத்திற்கு வந்து இவரையும் வணங்குவது சிறப்பாகும் .
திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி

காலை 8 -10 மாலை 5 -8

பண்ரூட்டியின் அருகில் சுமார் 3 km தொலைவில் உள்ளது . பண்ரூட்டியில் இருந்து பாலூர் வழியாக திருவந்திபுரம் பேருந்தில் ஏறினால் திருவதிகை அடையலாம் .

அருகில் உள்ள கோயில்கள்

1 . ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயில் , திருவதிகை
2 . ஸ்ரீ தேவநாதஸ்வாமி கோயில் , திருவந்திபுரம்
3 . ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் ,கடலூர்

Location Map :

4 Comments

 1. M.saranarayanan

  மார்க்கண்டேயன் ஏன் இந்த கோவிலில் இருக்கிறார்

  Reply
  • Ganesh

   நான் கவனிக்கவில்லை ஐயா மறுமுறை செல்லும் போது நான் கண்டு அறிந்து சொல்கிறேன் .நன்றிகள்

   Reply
 2. Saikrishnan

  Like Uppilliappan Kovil, here also Perumal married Sri Devi, daughter of Markandeya Rishi. Hence the Rishi is present in this temple. You may observe that the Lord appears in the wedding posture in the Nindra Thirukolam (standing posture).

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *