Sri Rudra Koteeswarar Temple – Keezha Kadambur

ஸ்ரீ ருத்ர கோட்டீஸ்வரர் கோயில் – கீழக் கடம்பூர்

இறைவன் : ருத்ர கோட்டீஸ்வரர்

இறைவி : சவுந்தரநாயகி

புராண பெயர் : கடம்பை இளம்கோயில்

ஊர் : கீழக்கடம்பூர்

மாவட்டம் : கடலூர் , தமிழ்நாடு

தேவரா வைப்பு தலங்களில் ஒன்று . அப்பர் தன் பதிகத்தில் இக்கோயிலை வைப்பு தலமாக கூறியுள்ளார் .

தல வரலாறு :

இந்திரன் தன் தவறுகளால் ஏற்பட்ட வினைகளை தீர்க்க ஒரு கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வதாக கூறி அதன்படி செய்ய முற்பட்டபோது அவனால் லிங்கங்களை பிரதிஷ்டை செய்ய முடியவில்லை அவன் செய்யும் போது அவைகள் கலந்துவிடுகின்றன . உடனே அவர் ஈசனிடம் வேண்ட அவர் ஒரு கோடி முறை “நமசிவாய ” என்ற பஞ்சராட்ச மந்திரத்தை சொல்லிக்கொண்டே  ஒரு லிங்கத்தை நிறுவி வழிபாடு என்றார் . அவர் கூறியபடி இந்திரன் இவ் தலத்தில் உள்ள இறைவனை நிறுவினார் .

இங்கு நாயன்மார்கள் வரலாற்றை சிறிய சிற்பங்களாக வடித்துள்ளார் . தாராசுரத்தில் உள்ள இரண்டாம் ராஜராஜன் எழுப்பிய கோயிலில் உள்ள  நாயன்மார்கள் சிற்பங்களை காட்டிலும் இது பழமையானது .

இங்குள்ள சிற்பங்களில் காரைக்கால் அம்மையார் தலைகீழாக கைலாத்துக்கு செல்லும் சிற்பம் ,கண்ணப்ப நாயனார் சிற்பம் , சண்டிகேஸ்வரர் சிற்பம் ,தாடகை என்ற பெண் சிவனடியார் ஈசனை வணக்கம் சிற்பம் ஆகியவை மிக சிறப்பானதாகும் .

இக்கோயிலுக்கு கோபுரம் இல்லை கருவறைக்கு தனி விமானம் இல்லை . கர்பகிரகம் ஒரு அறையை போன்ற அமைப்பில் உள்ளது . அதன் வெளிப்புற அமைப்பில் உள்ள தூண்கள் , கோஷ்டத்தின் அமைப்பு  ஆகியவைகள் சோழர்களின் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

இக்கோயிலானது தமிழ்நாடு அரசு  தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது .

இக்கோயிலானது பெரும்பாலும் பூட்டியே இருக்கும் , நாம் பார்க்க வேண்டும் எனில் PH – 9943133058 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தரிசனம் செய்யுங்கள் .

செல்லும் வழி :

இக்கோயிலானது சிதம்பரத்தில் இருந்து சுமார் 32 km  சென்றால் காட்டுமன்னார்கோயிலை அடையலாம் அங்கிருந்து சுமார் 6 km தொலைவில் எய்யலூர் சாலையில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு அருகிலேயே மேல்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு செல்லலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *