prasanna venkatesa perumal temple- Thirupparkadal

Sri Prasanna Venkateswara Perumal Temple and Athi Ranganathar Perumal Temple – Thirupparkadal

பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் மற்றும் அத்தி ரங்கநாதர்  பெருமாள் கோயில் – திருப்பாற்கடல்

Prasanna Perumal Temple - Thirupparkadal

திருப்பாற்கடல் என்று அழைக்கப்படும் அழகிய கிராமத்தில் சிவனின் ஆவுடையார் மீது நின்று காட்சி தரும் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் மற்றும் சயனகோலத்தில் அத்தி ரங்கநாதர்  பெருமாள் கோயில் என இரண்டு பெருமாள் கோயில்கள் உள்ளன .

 சிவனின் ஆவுடையார் மேல் நின்று காட்சி தரும் பெருமாள் நமக்கு ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தாத்பரியத்தை நமக்கு உணர்த்துகிறது . இங்குள்ள அத்தி இரங்கநாதர் 107 வது திவ்யதேசமாக கருதப்படுகிறது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 107 மற்றும் 108 வது திவ்யதேசங்களான திருப்பாற்கடல் மற்றும் வைகுண்டத்தை நம் பூத உடலோடு சென்று காண இயலாது . ஆதலால் இந்த திருப்பாற்கடல் திவ்ய தலத்தில் அருள்பாலிக்கும் அத்தி ரங்கநாதரை 107 வது திவ்ய தலமாக பக்தர்கள் நம்புகிறார்கள் .

அத்தி ரங்கநாதர் கோயில் :

மூன்று நிலை ராஜகோபுரம் மிக அழகாக தற்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு காட்சிகொடுக்கிறது , ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் ராஜகோபுரத்தை ஓட்டியவாறு விநாயகர் உள்ளார் .அவரை நாம் வணங்கிவிட்டு சென்றால் கொடிக்கம்பம் மற்றும் பலிபீடத்தை நாம் தரிசிக்கலாம் .  24 தூண்களை கொண்ட மகா மண்டபம் உள்ளது , இவ் மண்டபத்தின் மேற்கூரையில் பெருமாளின் தச அவதார சிலைகள் வைக்கப்பட்டுள்ளன . இவ் மண்டத்தின் உள்ள கருடர் சன்னதி உள்ளது .

நாம் அடுத்ததாக அர்த்த மண்டபம் செல்லலாம் , அர்த்தமண்டபத்தில் இருந்து நாம் கருவரையில் வீற்றியிருக்கும் ஆனந்த சயன ரங்கரை தரிசிக்கலாம் .   சுமார் 9 அடி நீளமும், 3 அடி உயரமும் உள்ள ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் இந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். அவரது திருமுடி அருகே ஸ்ரீதேவியும், திருவடி அருகே பூதேவியும் இருக்க பெருமாளின் நாபியில் எழும் தாமரைத் தண்டின் மீது பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். இவை அனைத்துமே அத்தி மரத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தைலக்காப்பு நடைபெறும். இந்த நாட்களில் பெருமாளின் முக தரிசனம் கண்டால் நினைத்த காரியம் கைகூடும் . இந்த பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

அவரை வணங்கிவிட்டு நாம் வலம் வந்தால் தாயார் இரங்கநாயகி சன்னதியை அடையலாம் . பன்னிரு கரங்கள் கொண்டு விளங்கும் இந்த அன்னையின் முன் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரையும், மற்ற கரங்கள் தாமரை மலர்களைத் தாங்கியும் உள்ளன.

திருமணமாகாத பெண்கள், இந்த ரங்கநாயகி தாயாரை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், அன்னை மனம் குளிர்ந்து திருமணம் செய்து வைப்பாள் என்பது ஐதீகம். இதேபோல குழந்தை இல்லாதவர்கள், தாயாருக்கு பாலால் திருமஞ்சனம் செய்து சன்னிதி படியை நெய்யால் மொழுகி, சர்க்கரையால் கோலமிட்டால் குழந்தை பேறு என்னும் சந்தான பாக்கியம் தருகிறாள் .

தாயாரை வணங்கிவிட்டு நாம் வலம் வந்தால் நரசிம்மர் , சக்கரத்தாழ்வார் மற்றும் ஆண்டாள் சன்னதிகளை நாம்  கண்டு தரிசிக்கலாம் .

வரலாறு :

ஒருமுறை விஷ்ணு அனந்த சயனத்தில்- சேஷ நாகம் மீது பாற்கடலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். அபோது அவர் நாபியில் இருந்து எழுந்த நாபித் தண்டில் பிரும்மா பிறப்பு எடுத்து உலகை சிருஷ்டி செய்யத் துவங்கினார். அவர் பூமிக்குச் சென்று காஞ்சீபுரம் பகுதியில் இருந்த இந்த தலத்தில் ஒரு யாகம் செய்யக் கிளம்பி தனது மனைவியான சரஸ்வதியை அதற்கு உடன் அழைத்தார். ஆனால் சரஸ்வதியோ அவருடன் செல்ல மறுக்கவே, வேறு வழியின்றி பிரும்மா தன்னுடன் காயத்ரி மற்றும் சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்று யாகத்தைத் துவக்கினார். ஆகவே கோபமுற்ற சரஸ்வதி வேகவதி என்ற ஒரு நதியாய் உருவெடுத்து, அந்தப் பகுதியில் பாய்ந்து யாகசாலையே மூழ்கடிக்க வந்தவுடன் பிரும்மா விஷ்ணுவை வேண்டிக் கொண்டார். உடனே சற்றும் தயங்காமல் விஷ்ணுவானவர் அங்கு வந்து நதிக்கு நடுவில் சேஷ நாகத்தின் மீது படுத்து நதியின் ஓட்டத்தை ஒரு அணைப் போலத் தடுத்து நிறுத்தி யாகம் நடந்து முடிய அருள் புரிந்தார். அவரை அந்த கோலத்தில் கண்ட சரஸ்வதி கோபம் தணிந்து திரும்பிச் சென்றாள். ஆகவே திருப்பாற்கடலில் தான் சயனித்து இருந்த அதே கோலத்தில் பூமியில் வந்து திருப்பாற்கடல் காட்சியை இங்கு அருளியதினால்தான் இந்த சேஷ்திரத்தின் பெயரும் திருப்பாற்கடல் என ஆயிற்று. அவருக்கு ஸ்ரீ ரங்கநாதர் என்ற பெயரில் ஆலயமும் அமைந்தது. இந்த ஆலயத்தில் விஷ்ணுவை பாற்கடலில் சயனிக்கும் கோலத்தில் சிலை அமைத்து பூஜிக்கிறார்கள். ஸ்ரீ ரங்கநாதர் தன்னுடன் தாயார் பூதேவி மற்றும் தாயார் ஸ்ரீ தேவியுடன் காட்சி தருகிறார்.

பாவத்தை குறைக்கும் சித்திரகுப்தன் :

ஒருமுறை சரீர ரோகத்தினால் அவதிப்பட்ட சித்ரகுப்தர் விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரை இந்த ஷேத்திரத்தில் வந்து தன்னை பூஜித்தால் ரோகம் தீரும் என்று கூறினார். ஆகவே சித்ரகுப்தர் இங்கு வந்து விஷ்ணுவை துதித்து ரோக நிவாரணம் அடைந்தார். அதற்கு நன்றிக் கடனாக இங்கு வந்து யார் ஸ்ரீ ரங்கநாதரை பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு அன்றுவரை இருந்த பாவங்கள் அனைத்தையும் தான் நீக்குவேன் என்றும்  உறுதி தந்தார்.

அப்படியே நாம் இக்கோயிலுக்கு முன் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் பெருமாளை தரிசிக்க செல்வோம் வாருங்கள் …

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்

Athi Ranganathar temple

கோயிலுக்கு முன் இக்கோயிலின் தீர்த்தமான புண்டரீக தீர்த்தம் உள்ளது . அதை கடந்து போனால் துவஜஸ்தம்பம் உள்ளது . மண்டபத்துடன் கூடிய சிறிய இரண்டு அடுக்கு ராஜகோபுரம் உள்ளது . நாம்  உள்ளே போனால் கருடர் சன்னதியை காணலாம் , அவரை தரிசித்து விட்டு முக மண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் நாம் அர்த்த மண்டபத்தை அடையலாம் , அங்கிருந்து நாம் கருவரையில் எழுந்தருளும் பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யலாம் .

பெருமாள் சிவனின் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார் .

சிவனின் ஆவுடையார் மீது பெருமாள் நிற்பது வேறு எங்கும் காணமுடியாத ஒரு தனித்துவமான கோயில் . திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் . பொதுவாக வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே உற்சவமூர்த்தியாக  பெருமாள் வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுப்பார் . ஆனால் இங்கே மூலவருக்கு சொர்க்கவாசலுடன் கூடிய மூன்று வாசல் இருக்கும் , வைகுண்ட ஏகாதசி அன்று இந்த சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நாம் மூலவரேயே தரிசிக்கும் பாக்கியம் கிட்டும் .

அப்படியே நாம் வெளியே வந்தால் வெளி பிரகாரத்தில் தாயார் அலமேலு மங்கை தாயார் , ஆண்டாள் , பாமா ருக்மணியுடன் நவநீத கிருஷ்ணன் ,பக்த ஆஞ்சநேயர் , ஒன்பது நாக தேவதைகள் சன்னதிகளை தரிசிக்கலாம் .

இந்த கோயிலை விஜயநகரத்து கிருஷ்னதேவராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது  ஆகும் .

வரலாறு :

வைஷ்ணவ திருத்தலங்களுக்குச்  பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் என்று புண்டரீக மகரிஷி யாத்திரையாகக் கிளம்பினார். வழியெங்கும் உள்ள பெருமாள் கோயில்களைத் தரிசித்துக்கொண்டே வந்தார். இவ்வாறு பல வருடங்களாக தினமும் பெருமாளை தரிசனம் செய்துகொண்டிருந்தார் . அப்படி வந்து கொண்டிருந்த போது, இந்த  கிராமத்துக்குச் சென்றார். இந்த ஆலயம் வந்து  உள்ளே சென்று பார்த்தவர் அதிர்ந்து போனார். ஆம் இக்கோயில்  சிவாலயம்.

சிவலிங்கத்தைக் கண்டுதான் ஆச்சரிய அதிர்ச்சி. அடடா… பெருமாள் கோயிலென்று நினைத்து, சிவன் கோயிலுக்கு வந்துவிட்டோமே’ என்று கிளம்பினார்.

அப்போது, அவருக்கு எதிரே முதியவர் ஒருவர் வந்தார். அந்த முதியவரிடம் ‘இங்கே பெருமாள் கோயில் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘நீங்கள் இப்போது வந்தீர்களே… இதுதான் பெருமாள் கோயில்’ என்றார் முதியவர். ‘என்ன பெரியவரே குழப்புகிறீர்கள்? இது சிவன் கோயிலாயிற்றே’ என்றார்.

‘வாருங்கள், கோயிலுக்குச் சென்று காட்டுகிறேன், இது பெருமாள் கோயில்தான்’’ என்ற முதியவர் விறுவிறுவென கோயிலை நோக்கி நடந்தார். மகரிஷியும் பின் தொடர்ந்தார்.

கருவறைக்குள் நுழைந்த முதியவர், ஆவுடையாரின் மீது நின்றார். பெருமாளாகவே திருக்காட்சி தந்தார். ’வந்தது சிவபெருமானா? ஆஹா’ என்று மெய்சிலிர்த்தவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். ‘சிவம் வேறு விஷ்ணு வேறு இல்லை’ என உணர்த்தினார். ‘ஹரியும் சிவனும் ஒன்று’ எனும் தத்துவத்தை விளக்கிய அந்தத் திருத்தலத்தில், மகாவிஷ்ணு, திருப்பாற்கடலில் உள்ளது போலவே, மூன்று திருக்கோலங்களிலும் திருக்காட்சி தந்தருளினார்.

புண்டரீக மகரிஷிக்காக, பெருமாள் பிரசன்னமானார். அதனால் பிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமம் கொண்டார். அந்தத் தலம் ‘திருப்பாற்கடல்’ என்றே இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.

அருகருகே இரண்டு கோயில்களை தரிசிக்கும் பாக்கியம் இந்த தலத்தில் நமக்கு கிட்டும் . அதுமட்டும் இல்லாமல் சிறப்பான ஆவுடையார் மேல் உள்ள பெருமாள் மற்றும் அத்தி மரத்திலான பெருமாள் என இரண்டு பெருமாளை நாம் தரிசிக்கலாம் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .30 முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 4 .30 முதல் இரவு 7 .30 வரை

Phone number : 9486877896, 9486139289, 8015114344.

Temple Photos:

https://alayamtrails.blogspot.com/2025/05/sri-prasanna-venkateswara-perumal.html

செல்லும் வழி :

சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அதாவது NH 4 சாலையில் வருவது காவேரிப்பாக்கம் எனும்  ஊர். இது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர், வேலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் அல்லது காஞ்சிபுரம் வழியே வந்தால் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காவேரிப்பாக்கம் வந்து அங்கு திருப்பாற்கடல் ஊர் என்று  யாரை கேட்டாலும் சொல்வார்கள். காவேரிப்பாக்கத்தில் இருந்து சுமார் 3 km தொலைவில் திருப்பாற்கடல் உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :

1 . வரஹாரீஸ்வரர் கோயில் – தாமல்

2 . விஜயராகவ பெருமாள் – திருப்புட்குழி ( 108 திவ்யதேசம் )

3 . யோக நரசிம்மர் கோயில் – சோளிங்கர்

Location Map:

Prasanna Venkateswara Perumal Temple and Athi Ranganathar Perumal Temple – Thirupparkadal

There are two Perumal temples, the Prasanna Venkatesa Perumal Temple and the Athi Ranganathar Perumal Temple at Sayanagolam, standing on the beautiful village of Thirupparkadal.

 Perumal, who is standing on the top of Lord Shiva, makes us feel that Hari and Haran are the same. The figure here is considered the 107th Divine. Of the 108 Divya Nations of Perumal, the 107th and 108th Divyas, the Thirupparkadal and Vaikundam are not visible to our bodies. Therefore, the devotees believe that the 107th Divya desam is the 107th Divya site of Arulpali and Arulpali at this Thirupparkadal Divya desam.

Temple of the Athi Ranganathar:

Three -level Rajagopuram is now beautifully consecrated and is a consecration.  There is a great hall with 24 pillars, and the roof of the hall is placed on the roof of Perumal. There is a Garudar shrine in this mandarin.

We can go next to the Artha Mandapam, and we can see the Ananda Sayana Rangar, which is located in the temple.   Perumal is blessed with a school on Adiration, about 9 feet long and 3 feet high. Brahmadevan sits on the lotus trunk that arises in Perumal’s Nabi to be Sridevi near his Thirumudi and Bhudevi near Thiruvadi. It is noteworthy that all of these are made of fig tree.

Since the original is made of fig tree, he has no chanting. Tailakapu takes place only once a year. If you see Perumal’s face these days, the thought of the thought of going. It is interesting to say that our sins of Chitragupta will be eliminated by the darshan of this Perumal.

If we worship him and come to the streets, the mother can reach the shrine of Ranganayaki. The two arms in front of the mother, which has twelve hands, have a varada hasta seal, and the other hands with lotus flowers.

It is believed that the unmarried women, if this Ranganayaki mother is anointed with honey, she will cool down and get married. Similarly, the mother of the mother, the mother of the mother, the mother of the Sunni step, and the sugar, the child is blessed with the blessings of the child.

If we come to worship the mother, we can see the shrines of Narasimha, Chakrattavar and Andal.

History:

Once in Vishnu Anantha Sayanam- Sesha Nagam was sleeping in the sea. Then he got the birth of Brumma in the Nabid trunk and began to create the world. He went to the earth and left his wife Saraswati to perform a sacrifice at this head in Kancheepuram. But when Saraswati refused to go with him, Brumma had no choice but to take Gayatri and Savitri with him and started the Yagya. So when the angry Saraswati was formed as a river called Vegavathi, Brumma begged Vishnu when he came to sink into the area and sink. Immediately without hesitation, Vishnu came there and lay on the Sesha Naga in the middle of the river and stopped the flow of the river like a dam. Saraswati, who saw him in the sphere, went back to anger and returned. Therefore, the name of the Seshathra became the name of the Seshathra, because the scene of the Thiruppakkadal Sea came to the earth in the same kolam in the Thiruppakkadal Sea. He also built a temple named Sri Ranganathar. In this temple, the statue of Vishnu is worshiped in the sea of ​​the sea. Shri Ranganathar is accompanied by her mother, Bhudevi and mother Sri Devi.

Chitrakupta who reduces sin:

Once, Chitragupta, who was suffering from a physical convention, said that he would come to this sheat and worship himself, “he said. So Chitragupta came here and praised Vishnu and got relief. Thank you for that, whoever worships Sri Ranganatha, he assured that he would remove all the sins of the day.

Open time:

From 7:30 am to 12.00 pm, 4.30 pm to 7.30 pm

Phone Number: 9486877896, 9486139289, 8015114344.

The way to go:

Kaveripakkam is coming on the Chennai-Bangalore National Highway, ie NH 4. It is about 100 km from Chennai, 40 km from Vellore or 28 km from Kanchipuram. Come to Kaveripakkam and say that there is a Tirupparkadal town. The Thirupparkadal is about 3 km from Kaveripakkam.

Prasanna Venkatesa Perumal Temple -Thiruparkadal

In front of the temple there is the pundarika tirtha of the temple. If it passes, there is the duajasthambam. There is a small two -tier Rajagopuram with the hall. If we go inside, you can see the Garudar shrine, and if we go and cross the facial hall, we can reach the Artha Mandapam, from there we can see the Prasanna Venkatesa Perumal, which we wake up.

Perumal shows us in the stomach standing on Lord Shiva.

Perumal stands on Lord Shiva’s Oudaar is a unique temple that is nowhere to be found. A temple where the stars should be worshiped. Generally, Vaikunda Ekadasi opens the heaven and will come to the way of Perumal to the devotees. But here the originator has three gates with heaven, and this paradise is opened on the Vaikunda Ekadasi and we have the privilege of seeing the source.

If we come out, the mother Alamelu Manga mother, Andal, Bama Rukmani, Navaneetha Krishnan, Bhakta Anjaneyar, nine Naga angels can see the shrines.

The temple was renovated during the Krishnadevarayar during the Vijayanagar.

History:

Pundarika Maharishi pilgrimage to the Vaishnava revisions to visit Perumal. Perumal came to see the temples along the way. Thus, for many years, he had been watching Perumal daily. While coming, he went to the village. The man who came in the temple came in and was shocked. Yes, this temple is Shivalayam.

Surprisingly shocking to see Shivalinga. Damn … Perumal thought of the temple, he came to the Shiva temple.

Then, an old man came in front of him. The old man asked, “Is the Perumal temple here?” You have come now … This is the old man who said that the Perumal temple. What big are you confused? This is the Shiva temple.

Come on, I go to the temple, and this is the Perumal temple. Maharishi also followed.

The old man who entered the sanctum stood on the Oudaar. He was great. The telephone came to Lord Shiva? Wow, the man who worshiped the Shasthanga. Vishnu is no different. In the epic of the philosophy of Hari and Shiva, he was in the Thiruppakkal, as Mahavishnu was in the Thiruppakkadam.

For the Pundarika Maharishi, Perumal presented. So Prasanna Venkatesa Perumal was nicknamed. The site is still known as the Thiruppakkal.

We have the privilege of seeing two temples nearby. In addition, we can see two Perumal on the top of the top and the Perumal of the fig tree.

Open time:

From 7:30 am to 12.00 pm, 4.30 pm to 7.30 pm

Phone Number: 9486877896, 9486139289, 8015114344.

The way to go:

Kaveripakkam is coming on the Chennai-Bangalore National Highway, ie NH 4. It is about 100 km from Chennai, 40 km from Vellore or 28 km from Kanchipuram. Come to Kaveripakkam and say that there is a Tiruparkadal town. The Thiruparkadal is about 3 km from Kaveripakkam.

திருச்சிற்றம்பலம் 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply