ஸ்ரீ நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில் – துண்டம்

இறைவன் : நிலாத்திங்கள் துண்டத்தான் ,சந்திர சூடப் பெருமாள்
தாயார் : நேர் உருவில்லா வல்லி
கோலம் : நின்ற கோலம்
விமானம் : புருஷஸுத்த விமானம்
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
ஊர் : திருநிலாத்திங்கள் துண்டம் , காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் மற்றும் சைவ நாயன்மார்
திருநாவுக்கரசர்

- 108 திவ்யதேசங்களில் 50 வது திவ்யதேசம் ஆகும் , தொண்டை நாட்டு திவ்யதேசமாகும் .
- ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலின் உள்ளே அமைந்திருக்கும் திவ்யதேசமாகும் . திருநாவுக்கரசர் இவ் பெருமாளை’ நீரும் நெஞ்சுடையாய் நெற்றி கண்ணா நிலாத்திங்கள் துண்டத்தாய்‘ என்று பாடியுள்ளார் . இதுவே சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும் .
- மகா விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பாற்கடலை கடைய உதவும்போது வாசுகியால் வலி தாங்காமல் கக்கிய விஷ துளிகள் விஷ்ணுவின் மேல் பட அவர் தேகம் நீல நிறமாக மாறியது .இதெற்கு பரிகாரம் தேட பிரம்மாவிடம் கேட்க அவர் சிவ பெருமானிடம் வேண்டினாள் உஷ்ணம் குறைந்து பழைய நிறத்திற்கு திரும்பலாம் என்று ஆலோசனை வழங்கினார் ,அதன்படி விஷ்ணு சிவனிடம் வேண்ட அவர் தன் தலையில் இருந்த சந்திரனை மஹாவிஷ்ணுவின் மீது ஒளி பரவும்படி பணித்தார் ,சந்திரனின் குளிர்ந்த ஒளி அவர் மீது பட்டவுடன் அவர் பழைய நிலையை அடைந்தார் . இக்கோயிலின் ஈசானி மூலையில் இவர் அருள் தருகிறார் . தன்னால் தான் பெருமாளுக்கு இவ் பிரச்சனை ஏற்பட்டது என்ற மனம் வருத்தப்பட வாசுகி அவருக்கு குடையாக நின்று பரிகாரம் தேடி கொண்டது . சந்திரனின் ஒளியால் இயல்பு நிலை பெற்றதால் நிலாத்திங்கள் துண்ட பெருமாள் என்ற பெயர் பெற்றார் .
- சிவனின் கண்களை மூடிய பாவத்திற்கு சிவபெருமான் கங்கையை கொண்டு பார்வதியையும் ,சந்திரனை கொண்டு மகா விஷுனுவையும் சிவன் அருள் செய்த இடம் .
- தாயாருக்கு தனி சன்னதி இல்லை . பெருமாளின் நாபிக்கமலத்தில் இருந்து மஹாலக்ஷ்மி அருள்வதாக சொல்லப்படுகிறது . நாபிக்கமலம் பிரம்மாவின் இடம் என்பதால் லக்ஷ்மியை பிரம்மாவின் அம்சமாக கருதலாம் . இவரையே ‘நேர் உருவில்லா வல்லி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
- இவ் அறிய காட்சியை அதாவது நாபிக்கமலத்தில் லட்சுமி அருள் செய்வதால் விதியின் தன்மையை மாற்றும் சக்தி உண்டு என்பார்கள் . குடும்ப ஒற்றுமை ,சகோதர சகோதரி பாசம் மற்றும் குழந்தை வேண்டி பிராத்தனை செய்கிறார்கள் .
செல்லும் வழி:
ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் உள்ளே அமைந்திருக்கும் திவ்யதேசம்