Sri Malaikottai Vinayagar Temple- Trichy

Sri Malaikottai Vinayagar Temple- Trichy

ஸ்ரீ மலைக்கோட்டை விநாயகர் கோயில் – திருச்சி

Sri Malaikottai Vinayagar Temple- Trichy
  • திருச்சி என்றவுடன் எல்லோரும் கூறுவது மலைக்கோட்டை விநாயர் கோயிலுக்கு போனீர்களா ! அவ்வாறு மிகவும் சிறப்பு பெற்ற கோயிலாகும் .
  • திருச்சியின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கோயிலை தரிசிக்கலாம் .
  • வரலாறு: அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். அவன் அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.

அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-malaikottai-vinayagar-temple-trichy.html

கோயில்திறந்திருக்கும் நேரம் :
காலை  5 .00 – 12 .00 வரை மாலை 4 .00 -8 .00 மணி வரை

அமைவிடம் :
திருச்சி மாநகரின் மையத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .படிக்கட்டுகள் வழியாக நடந்துதான் செல்லவேண்டும் .

Location:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply