Sri Lakshmi Narasimhar Temple- Parikkal

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்- பரிக்கல்

Sri Lakshmi Narasimhar Temple- Parikkal

மூலவர்: லட்சுமி நரசிம்மர்

தாயார் : கனகவல்லி தாயார்

தீர்த்தம் : நாக கூபம்

புராண பெயர் : பரகலா

மாவட்டம் : விழுப்புரம்

இக்கோயில் சுமார் 1800 வருடங்கள் பழமையான கோயில் இக்கோவிலை விருத்தாசலத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட வசந்தராஜா என்பவரால் கட்டப்பட்டது அதன்பிறகு இக்கோயிலுக்கு பல்லவர் மகாராஜா முதலாம் ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டுவதற்கு உதவினார்கள்.

இந்தியாவில் இந்த கோயிலில் மட்டும்தான் நரசிம்ம ஸ்வாமி லட்சுமியும் லக்ஷ்மி நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி காட்சி அளிக்கின்றனர் தாயாருக்கு தனியாக சன்னதி உள்ளது இன்று நிலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உள்ளார்.

வீர ஆஞ்சநேயர் பக்த ஆஞ்சநேயர் இத்தலத்தில் உள்ளது ஒரு சிறப்பாகும். பக்தர்கள் இவருக்கு முன்னர் நெல்லைக் கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர்.

வரலாறு: விருத்தாசலத்தை தலைநகராகக்கொண்டு வசந்த ராஜன் என்ற மன்னன் நரசிம்மரின் தீவிர பக்தர் அவர் நரசிம்மருக்கு கோயில் கட்ட எண்ணி தன் குருவான வாமதேவ ரிஷியை கொண்டு மூன்று இரவுகள் தொடர்ந்து யாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தில் கலந்து கொள்ள தன் சிற்ற அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்ற சிற்றரசர்கள் வந்தனர். அந்த யாகம் தொடங்கும்போது பரி கலாசுரன் அசுரன் அந்த யாகத்தை அழிக்க எண்ணி தன் படைகளுடன் புறப்பட்டான், வருவதை அறிந்த ரிஷி வசந்தராஜன் கையில் கங்கணம் கட்டி ‘அராஷிரா அமிர்தாஷா ‘ என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசித்து , அருகில் உள்ள புதரில் மறைந்து கொள்ள செய்தார் ஆனால் அசுரன் மன்னனை கோடாரியால் தாக்கினான் இதனால் கோபமடைந்த நரசிம்மர் தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி மன்னனுக்குக் காட்சி கொடுத்தார் அசுரனை அழித்ததால் இத்தளம் பரிக்கல் என அழைக்கப்பட்டது.

இத்தளம் பரிகார தலமாகும் நவகிரக தோஷம் உள்ளவர்கள், திருமண தடை, காரிய தடை, வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் ,வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் இவரை வழிபட்டால் தடைகளில் இருந்து கண்டிப்பாக விடுபடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது இதனால் இத்தலத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி கொண்டே இருக்கிறது.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-lakshmi-narasimhar-temple-parikkal.html

திறந்திருக்கும் நேரம்

காலை 6 லிருந்து ஒரு மணி வரை மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை

செல்லும் வழி

இக்கோயில் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சுமார் விழுப்புரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் கெடிலம் கூட்டு ரோட்டுக்கு முன்பாக வலதுபுறம் திரும்பி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கோயிலை அடையலாம்.

Location :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *