Ratha Saptami

ரத_சப்தமி(சூரிய ஜெயந்தி)வழிபாடு

Rata Sapthami

ரத_சப்தமி(சூரிய ஜெயந்தி)வழிபாட

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி .

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .

தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.

சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்கிறது சாஸ்திரம் .

ரத சப்தமி வழிபாடு

சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும்.

வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.

சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது உகந்த நாள்.

இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

ஜோதிட ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.

ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.

கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள்.

ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலம் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், #திருமலை-திருப்ப
தியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

#இந்த ஒருநாளில் மட்டும், #காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு #வாகனங்களில் பவனி வருகிறார் #திருவேங்கடமுடையான் .12 மணிக்கு இங்குள்ள #புஷ்கரணியில் (குளம்) #தீர்த்தவாரி நடக்கும்.

திருமலையில் இந்த காட்சிகளை காண #கண்கோடி வேண்டும் .

#ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது.
#இந்த_தலத்திலும் #ரதசப்தமி உற்சவம் உண்டு.

ரதசப்தமி தினத்தில் சூரியனை வழிபடும்போது , #சூரியனை நோக்கி,

“ஓம் நமோ ஆதித்யாய… ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!’

என்று சொல்லி வணங்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *