வடபழனி முருகன் கோயில் – வடபழனி ,சென்னை
மூலவர் : வடபழனி பழனி ஆண்டவர்
தாயார் : வள்ளி , தெய்வானை
தல விருட்சம் : அத்திமரம்
தீர்த்தம் : குகபுஷ்கரணி
ஊர் : வடபழனி , சென்னை
சென்னையில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் வடபழனி முருகன் கோயில் ஒரு தனி இடத்தை இருக்கிறது என்பதில் எந்த வித அய்யமில்லை. முகூர்த்த நாட்களில் இந்த கோயில்களில் நடக்கும் திருமணங்களால் கோயில் பக்தர்களால் நிரம்பி வழியும்.
1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது.இந்த கோயில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோயில் அமைத்தர் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து மூன்று வெள்ளை வழிபட்டார் .
அவர் ஒரு சமயம் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டார். அவரின் நோய் தீர வேண்டி அடிக்கடி திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வந்தார். ஒரு முறை தென் பழநி யாத்திரை சென்ற போது அங்கு ஒரு சாது சொல்லியபடி, அண்ணாசாமி தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகன் உருவ படம் வைத்து வழிபடலானார்.
தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார். இதற்கு “பாவாடம்” என்று பெயர். இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது.பழநி ஆண்டவர் படத்திற்கு பூஜை செய்து வழிபட்டு பக்தர்களுக்கெல்லாம் குறி சொல்லி அவர்களது குறைகளுக்கு தீர்வு சொல்லி வந்தார்.பக்தர்களின் காணிக்கைகள் மற்றும் இரத்தினசாமி சாமி செட்டியாரின் முயற்சியாலும் இக்கோயில் கட்டப்பட்டது .1920ல் இந்த கோயில் ராஜ கோபுரம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.மூன்று சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வளரப்பட்டது இந்தத் திருக்கோயில்.
கோயில் அமைப்பு :
கோயின் ராஜகோபுரத்தை கடந்து நாம் உள்ளே சென்றால் வரசித்தி விநாயகரை தரிசிக்கலாம் , விநாயகரின் சன்னதிக்கு அருகில் சொக்கநாதர் சன்னதி உள்ளது . பின்பு நாம் வடபழனி முருகன் உள்ள சன்னதிக்கு செல்லலாம் .
மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார்.
கேக்கும் வரங்களை எல்லாம் அள்ளித்தரும் முருகன் மிக அழகாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார் .
அவரின் கருவறை மண்டபத்தை சுற்றி தட்சணாமூர்த்தி ,மஹாலக்ஷ்மி,பைரவர் ,துர்கா தேவி ஆகியோர்கள் உள்ளார்கள் . கோயிலை வலம் வந்தால் சுப்பிரமணியர் வள்ளி , தெய்வானையோடு தனி சன்னதியில் காட்சி தருகிறார் . இச்சன்னதிக்கு அருகில்தான் திருமணங்கள் நடக்கும் மண்டபம் உள்ளது . அப்படியே நாம் வந்தால் அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது ,அருகில் மீனாக்ஷி சன்னதி , முருகன் கண்ணாடி அறையில் உள்ள சன்னதி உள்ளது. பின்பு கொடிமரம் ,பாலி பீடத்தை நாம் காணலாம் . கொடிக்கம்பத்தில் முன்னாள் உள்ள நுழைவாயில் இருபுறமும் அருணகிரிநாதர் சன்னதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது .
தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவதும் உண்டு. அருகில் மிக பெரிய குளம் உள்ளது .
விழாக்கள் :
வைகாசி விசாகத் திருவிழா 11நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் ‘தெப்போற்சவம்’ நடைபெறுகிறது.
ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூசை மேற்கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் சிறப்பாக நடக்கிறது.
திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .30 முதல் நண்பகல் 12 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 9 .00 மணி வரை .
செல்லும் வழி :
கிண்டியில் இருந்து கோயம்பேடு வரும் வழியில் வடபழனி வரும் , சிக்னல் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது . மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது.
Location:
திருச்சிற்றம்பலம்