Sri Vilakkoli Perumal Temple- Kanchipuram (Thoppul)

ஸ்ரீ விளக்கொளி பெருமாள் கோயில் -தூப்புல்

Sri Vilakkoli Perumal Temple- Thiruthanka

இறைவன் : ஸ்ரீ விளக்கொளி பெருமாள் ,ஸ்ரீ தீபப்ரகாசர்

தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்

தீர்த்தம் : லட்சுமி சரஸ்

புஸ்கரணி : ஸ்ரீ சரஸ்வதி புஷ்கரணி

விமானம் : ஸ்ரீ கர விமானம்

ஊர் : தூப்புல் , திருத்தண்கா-காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம்

மங்களாசனம் : நம்மாழ்வார் ,திருமங்கையாழ்வார் ,வேதாந்த தேசிகர்

  • வேதாந்த தேசிகர் அவதார ஸ்தலம்
  • 108 திவ்ய தேசங்களில் தொண்டை மண்டலத்தில் 46 வது தலமாகும்
  • ப்ரம்மா எம்பெருமானை விக்ரஹ வடிவில் காண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய தொடங்கினார். ப்ரம்மா தன் முதல் மனைவியான சரஸ்வதியை அழைக்காமல் இரண்டாவது மனைவியான காயத்திரி தேவியை அழைத்திருந்தார். அதனால் கோபம் உற்ற சரஸ்வதி யாகத்திற்கு இடையூறு செய்யும் விதமாக யாகம் நடக்கும் இடத்தை இருள் சூழும் படி செய்தாள். ஒன்றும் செய்வதறியாது ப்ரம்மா பெருமாளிடம் சரணடைந்தார் . பெருமாள் விளக்கொளியாய் அவதரித்து அந்த இருளை நீக்கினார் .யாகமும் எந்த தடையும் இன்றி நடந்தேறியது . சரஸ்வதி தாயாரும் சமாதானம் அடைந்தார் .
  • பெருமாள் மேற்கு பக்கம் நோக்கி ஸ்ரீ தேவி ,பூதேவியுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் .
  • கோயிலுக்கு வெளியே வேதாந்த தேசிகர் அவதார தலம் உள்ளது .

Photos :

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-vilakkoli-perumal-temple.html

அமைவிடம்

காஞ்சிபுரம் இருந்து சின்ன காஞ்சிபுரம் போகும் வழியில் அஷ்டபுஜ பெருமாள் கோயில் அருகில் உள்ளது. அருகில் அழகிய சிங்கர் பெருமாள் கோயில் உள்ளது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *