Sri Kasthuri Ranganatha Perumal Temple- Erode

ஸ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் கோயில் – ஈரோடு

மூலவர் : கஸ்தூரி ரெங்கநாதர்

தாயார் : ஸ்ரீ தேவி , பூமா தேவி

தல விருச்சம் : வில்வம்

ஊர் : ஈரோடு ,

மாநிலம் , தமிழ்நாடு

கடவுளில் யார் சாந்தமானவர் என்பதை கண்டுபிடிக்க புறப்பட்ட துர்வாச முனிவர் தன் காலால் திருமாலின் மார்பில் உதைத்தார் . அவர் உதைத்ததை  கண்டு கோபப்படாமல் சிரித்துக்கொண்டே அவரை வரவேற்றார் .பக்தர்களின் பாதம் பட கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்றார் பெருமாள் .ஆனால் துர்வாச முனிவர் தன் கணவனின் மீது காலால் உதைத்ததை தாங்க முடியாத  தாயார் பெருமாளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் .ரிஷியே நீங்கள் செய்த காரியத்தால் என் தேவியார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் , ரிஷிகள் எப்போதும் சாந்தமாக இருக்க வேண்டும் என்று பெருமாள் ரிஷியிடம் கூறினார் .முனிவரும் அதை ஏற்றார் . சாந்த குணத்துடன் துர்வாச முனிவரை இந்த தலத்தில் காணலாம் .

இத்தலத்தில் பெருமாளின் காவலர்களாக ஜெயன் ,விஜயன் இருவரும் கருவறைக்கு உள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை காணலாம் . இது ஒரு சிறப்பான அம்சமாகும் .

இக்கோயில் உள்ள ஆஞ்சநேயரை வியாசராஜா பிரதிஷ்டை செய்துள்ளார் .வலது கையை தூக்கியபடி காட்சி தரும் இவர் லிங்க வடிவ பாறையில் புடைப்பு சிற்பமாக காட்சிதருகிறார் .

இக்கோயிலில் 16 கைகளுடன் தலையில் அக்னி ஜுவாலை கிரீடத்துடன் சக்கரத்தாழ்வார் உக்கிரமாக இருக்கிறார் . மற்றும் சன்னதிக்கு வலதுபுறம் ஆண்டாள் சன்னதி உள்ளது ,இடது புறம் பாமா ,ருக்மணி ,கண்ணன் சன்னதிகள் உள்ளன.

கோபம் குணம் கொண்டவர்கள் கோபம் குறையவும் ,புத்திரபாக்கியம் கிடைக்கவும் இங்கு பிராத்தனை செய்கிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-kasthuri-ranganatha-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 -12 ,மாலை 4 .30 -9 மணி வரை

செல்லும் வழி :

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்காவில் இறங்கி 200 மீட்டர் நடந்தால் இக்கோயிலை அடையலாம் ,இந்த பகுதியை கோட்டை என்று கூறுவார்கள் . இக்கோயிலின் அருகிலேயே ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் உள்ளது . 

Location:

Leave a Reply