Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் – திருவேற்காடு

மூலவர் : தேவி கருமாரி

தல விருச்சகம் : கருவேலம் மரம்

ஊர் : திருவேலங்காடு

மாவட்டம் : திருவள்ளூர்

  • கருமாரி அம்மன் மூலசானத்தில் சுயம்புவாக சாந்த சொரூபிணியாக காட்சிதருகிறார் .
  • அவரின் அருகில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் ஒரு விளக்கு உள்ளது அதற்கு ‘பதிவிளக்கு ‘ என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் . அம்மனையும் இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும் என்று நம்பப்படுகிறது .
  • இந்த கோயிலை கட்டும் போது இங்கிருந்த ஒரு பாம்பு அருகில் உள்ள மரத்தில் புகுந்தது அந்த இடத்தில பெரிய புற்று உள்ளது இதில் நாகா தோஷம் உள்ளவர்கள் சென்று வணங்கிறார்கள்.
  • கோவில் உள்ளேயே மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார்
  • மரத்திலான அம்மன் சிலை உள்ளது அவருக்கு பூட்டு பூட்டி வழிபடுகின்றார்கள் .
  • கோவிலின் உள் பிரகாரத்தில் ஸ்ரீனிவாசர் சன்னதி உள்ளது .
  • பிரதோஷ நேரத்தில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை நடக்கிறது
  • இங்கு பசு மாட்டின் சாணத்தில் இருந்து கிடைக்கும் சாம்பலை பிரசாதமாக தருகின்றனர் .
  • கோவிலின் இடது புறத்தில் புற்று கோயில் உள்ளது. அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த புற்று கோவிலுக்கும் வந்து தரிசனம் செய்தால் தான் முழு பலன் கிடைக்கும் .
  • சென்னையில் உள்ள மிக முக்கியமான அம்மன் கோயில்களில் இக்கோயில் மிக முக்கிய இடத்தில உள்ளது.
Sri Devi Karumari Amman Temple - Thiruverkadu

வழி மற்றும் திறந்திருக்கும் நேரம்:

கோயம்பேடுவிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன . பெங்களூரு சாலையில் வேலப்பன்சாவடி அருகில் சிக்னல் வலதுபுறத்தில் 1 km தொலைவில் உள்ளது .

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் .
இக்கோயிலின் அருகில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் சிவன் தளம் உள்ளது .

Location Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *