Sri Bhaktavatsala Perumal Temple- Tirunindravur

ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் – திருநின்றவூர்

Sri Bhaktavatsala Perumal - Tirunindravour

மூலவர் : பக்தவத்சல பெருமாள்

தாயார் : என்னைப் பெற்ற தாயார் , சுதாவல்லி

கோலம் : நின்ற கோலம்

விமானம் : உத்பலா விமானம்

தீர்த்தம் : வருண புட்கரணி ,விருத்த சீர நதி

மங்களாசனம் – திருமங்கை ஆழ்வார்

ஊர் – திருநின்றவூர்

மாவட்டம் – திருவள்ளூர் ,தமிழ்நாடு

  • 108 திவ்ய தேசங்களில் இவ் தலம் 58 வது திவ்ய தேசம் ,தொண்டை மண்டல திவ்யதேசங்களில் ஒன்று .
  • லட்சுமி பிராட்டி ஒரு முறை வைகுண்டத்திலிருந்து இங்கு வந்து நின்றதால் ‘திருநின்றவூர்’ என்று பெயர் இவ் ஊருக்கு ஏற்பட்டது
  • தாயார் இவூரின் அழகை கண்டு மீண்டும் வைகுண்டம் செல்ல விரும்பாமல் இங்கேயே இருந்தார் அப்போது அவருடைய தகப்பனார் சமுத்திரராஜன் அவரை ‘என்னை பெற்ற தாயே’ என்று அழைத்த காரணத்தால் என்னைப் பெற்ற தாயார் என்று அழைக்கப்படும் ஒரே திவ்ய தலம் இதுவாகும் . இத்தலம் தாயாருக்கு சிறப்பு பெற்ற திவ்ய தேசம் .
  • குபேரர் தன் நிதியை இழந்து தவித்தபோது இங்கு வந்து என்னைப் பெற்ற தாயாரை வணங்கி தன் நிதிகளை பெற்றதால் இவர் இங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவலக்ஷ்மியாகவும் காட்சி தருகிறார் .
  • இங்கு ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உள்ளது . இவரை வேண்டி பக்தர்கள் ராகு தோஷ நிவர்த்தி மற்றும் கல்யாண தடைகளிலிருந்து விடுபடுகிறார்கள் .
  • சமுத்ரராஜன் மற்றும் வருணன் இருவரும் தாயாரை வைகுண்டத்திற்க்கு திரும்பவருமாறு அழைத்தும் அவர் மறுக்கிறார் உடனே இருவரும் திருமாலிடம் சென்று தாயாரை அழைத்துவர விண்ணப்பித்தனர் ,திருமாலும் மனமிறங்கி வைகுண்டம் விட்டு இத்தலம் வந்தார் .இவ்விருவரின் பக்திக்காக இங்கு வந்ததால் இவருக்கு பக்தவத்சல பெருமாள் என்ற திருநாமம் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-bhaktavatsala-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 – 11 .30 , மாலை 4 .30 – 8 .30

செல்லும் வழி :

சென்னை – திருவள்ளூர் ரயில் பாதையில் திருநின்றவூர் நிறுத்தம் உள்ளது .அங்கிருந்து ஆட்டோவில் செல்லவேண்டும் . கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன . சென்னை மீஞ்சூர் -வண்டலூர் வெளிவட்டை சாலை வழியாகவும் செல்லலாம் .

அருகில் உள்ள தலங்கள்
1 . ஹிருதயேஸ்வர் கோயில்

2 . ஏரி காத்த ராமர் கோயில்

Location:

3 Comments

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *