Sri Vilvanatheswarar temple- Thiruvalam

Sri Vilvanatheswarar Temple – Thiruvalam

ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் கோயில் - திருவலம் இறைவன் -வில்வநாதீஸ்வரர், வில்வநாதர் இறைவி - தனுமந்யாம்பாள், வல்லாம்பிகை தலவிருச்சம் - வில்வம் தலதீர்த்தம் - கௌரி தீர்த்தம் பாடியவர்கள் - சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,அருணகிரிநாதர் சிவனின் தேவார பாடல் பெற்ற 276 சிவா தளங்களில் 242 வது தலமாகும் ,தொண்டை நாட்டு தேவார தலங்களில் 10 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன திருப்புகழில் இத்தல முருகரை பாடியுள்ளார் . இந்த ஊர் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் மற்றும் சாளுக்கிய ஆட்சி காலத்திற்குட்பட்ட வந்தப்புறம் அல்லது தீக்காலி வல்லம் என அழைக்கப்பட்டது . முன்மண்டபத்துடன் கூடிய 4 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அதை கடந்து உள்ளே சென்றால் இடது புறத்தில் மௌன சாமிகள் திருப்பணி செய்து கட்டுவித்த அம்பிகேஸ்வரர் சன்னதி மற்றும் பெரிய நாகலிங்க மரம் உள்ளது . வலதுபுறத்தில் கௌரி தீர்த்தம் உள்ளது . பின்பு 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தை உள்ளே சென்றால் உற்சவர் மண்டபம் . பக்கத்தில் காசி விஸ்வநாதர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார் . கொடிமரத்திற்கு முன் விஷ்ணு பாதம் அமைந்துள்ளது அவர் இத்தலத்து  இறைவனை பூஜித்துள்ளார். கொடிமரத்தின் பின்னால் மிகப்பெரிய வடிவிலான சுதையால் ஆன நந்தி சாமிக்கு எதிர்புற திசையை நோக்கி பார்க்கிறது .அதுபோல் மூலவர் சந்நிதியின் முன் உள்ள நந்தியும் சாமிக்கு எதிர்புற திசையை நோக்குகிறார் . சாமியை நோக்கியவாறு அதிகார நந்தி நின்றபடி உள்ளார். நந்தி இவ்வாறு பார்ப்பதற்கு ஒரு புராண காரணம் உள்ளது .இவ் நந்தியானது கஞ்சனகிரி என்ற மலையை நோக்கியவாறு இருக்கிறது .அது இபோது காஞ்சனகிரி என்று அழைக்கப்படுகிறது . இம்மலையில் கஞ்சன் என்ற அரக்கன் இருந்து வந்தான் , இவ் மலையில் இருந்துதான் அப்போது திருவளத்தில் உள்ள ஈசனுக்கு தினமும் தீர்த்தம் வரும் ,ஒருநாள் இவ்வாறு வருகையில் அதை தடுப்பதிற்காக கஞ்சன் அங்கு வந்தான் .  உரியோர் செய்வதறியாது இறைவனை வேண்டினார் .இறைவன் நந்தி பெருமானை அனுப்பி வைத்தார் .அவரும் காஞ்சனோடு போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின் ,லலாடம் விழுந்த இடம் 'லாலாபேட்டை ' என்றும் , சிரசு விழுந்த இடம் 'சிகராஜபுரம் ',வலக்கால் அறுபட்டு விழுந்த இடம் 'வடகால் ', இடது கால் அறுபட்டு விழுந்த இடம் 'தென்கால் ', மணிக்கட்டு விழுந்த இடம் 'மணியம்பட்டு ' என்றும் ,'குளகயநல்லூர்' என்ற ஊர்  மார்பு பகுதி விழுந்த  இடம் என்று வழங்கப்பெற்றது . இவையெல்லாம் திருவலத்தை சுற்றி 3 km தொலைவில் உள்ளது . வாயிலை கடந்தவுடன் நேரே சிவலிங்க திருமேனியில் வில்வநாதீஸ்வரர் தரிசனம் தருகிறார் . வாயிலை கடந்தால் ,தட்சணாமூர்த்தி சீடரான சனக முனிவரின் 'திருவோடு ' சாமிக்கு நேராக வெளியே பிரதிஷ்டை  செய்துள்ளார்கள் . கருவறை அகழி போன்ற அமைப்பில் உள்ளது .கருவறை மூலத்திருமேனியும் ,உற்சவ திருமேனியும் மேலும் கீழுமாக இருவரிசையில் வைக்கப்பட்டுள்ளது . மூலவர் கோபுரத்தில் எல்லா நட்சத்திரங்களின் சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது . சங்கரநாராயணர் வலதுபுற மாடத்தில் உள்ளார் .இடது புறத்தில் 'பாதாளஸ்வரர் ' சன்னதி உள்ளது . மூலவர் சுயம்புவாக சதுர பீடத்தில் வீற்றியுளார் .இங்குள்ள விநாயகர் கையில் மாங்கனி உள்ளது . ஊருக்குள் 'நிவா ' நதி ஓடுகிறது . இந்த நதிக்கரையில்தான் இக்கோயில் அமைந்துள்ளது .இறைவன் தீர்த்தத்தை பொருட்டு 'நீ வா ' என்றழைக்க இவ் நதி அருகில் ஓடி வந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது . தற்போது 'பொன்னை ஆறு ' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது . https://www.youtube.com/watch?v=_wn_YamocGE திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 - 12 .00 , மாலை 4 .00 -8 .00 வரை Photos: https://alayamtrails.blogspot.com/2021/06/sri-vilvanatheswarar-temple-thiruvalam.html செல்லும் வழி:…
Sri Vedapureeswarar temple- Thiruverkadu

Sri Vedapureeswarar Temple – Thiruverkadu

ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு இறைவன்  :  வேதபுரீஸ்வரர் இறைவி  : பாலாம்பிகை தல தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம் தல விருச்சகம் : வெள்வேல மரம் இடம்     : திருவேற்காடு மாவட்டம் : திருவள்ளூர்…
Sri Kapaleeswarar Temple- Mylapore (Chennai)

Sri Kapaleeswarar Temple- Mylapore, Chennai

அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர் இறைவன்: கபாலீஸ்வரர். அம்பாள் : கற்பகாம்பாள். தல விருட்சம்: புன்னை மரம். தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்.…
Sri Masilamaneeswarar Temple- Vada Tirumullaivayal

Sri Masilamaneeswarar Temple- Vada Tirumullaivayal

ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் இறைவன் : மாசிலாமணீஸ்வரர் இறைவி : கொடியிடைநாயகி ஆகமம் : சிவாகமம் தல விருச்சகம் : முல்லை தீர்த்தம் : அக்னி தீர்த்தம் ஊர் : வட திருமுல்லைவாயில் மாவட்டம் : திருவள்ளூர் மாநிலம்…
Sri Thyagaraja & Vadiyudaiyambigai Temple-Tiruvottriyur

Sri Thyagaraja & Vadiyudaiyambigai Temple-Tiruvottriyur

ஸ்ரீ வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி கோயில் - திருவொற்றியூர் இறைவன் : படம்பக்கநாதர் ,ஒற்றீஸ்வரர் ,ஆதிபுரீஸ்வரர் ,தியாகராஜர் தாயார் : வடிவுடையாம்பிகை ,வட்டப்பாறையம்மன் விருச்சம் : மகிழம் ,அத்தி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ,நந்தி தீர்த்தம் ஊர் :…
Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

ஸ்ரீ அரசலீஸ்வரர் கோயில் -ஒழிந்தியாம்பட்டு இறைவன் : ஸ்ரீ அரசலீஸ்வரர் அம்பாள் : பெரியநாயகி தல விருச்சம் : அரச மரம் தல தீர்த்தம் : அரச தீர்த்தம் ,வாமன தீர்த்தம் ஊர் : ஒழிந்தியாம்பட்டு , திருஅரசிலி மாவட்டம் :…