Sri Veeraraghava Perumal Temple- Thiruvallure

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் – திருவள்ளூர்

Sri Veeraraghava Perumal Temple- Thiruvallure

இறைவன் : வீரராகவ பெருமாள் ( எவ்வுன்கிடந்தான் )

தாயார் : கனகவல்லி

தீர்த்தம் : ஹிருதாபதணி

புராண பெயர் : எவ்வுளர்,திரு எவ்வுள்

விமானம் : விஜயகோடி

ஊர் : திருவள்ளூர்

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

மங்களாசனம்: திருமங்கையாழ்வார் ,திருமிசை ஆழ்வார் ,ஸ்ரீ வேதாந்த தேசிகர்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 60 வது திவ்ய தேசமாகும் .

மூலவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது . இவர் 15 அடி நீளம் 5 அடி உயரத்தில் சயன கோலத்தில் சேவை தருகிறார் .இவ் கோயில் பல்லவர் காலத்தை சார்ந்தது. இத்தலத்தில் உள்ள  ஹிருதாபதணி குளத்தில் குளித்தால் மனத்தால் நினைக்கும்  பாவங்கள் கூட விலகுமாம் .

தல வரலாறு : சாலி ஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் புனித குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார் .தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்துவிட்டு சாப்பிடுவதிற்காக மாவை ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார் .வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.

கிழவரும் அதை சாப்பிட்டுவிட்டு தனக்கு பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியுள்ள உணவையும் தந்தார் .முனிவரும் அன்று முழுவதும் விரதம் இருந்து அடுத்த நாள் முதல் ஒரு வருடம் களைத்து திரும்பவும் தவம் செய்தார் . ஒரு வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நைவேத்தியம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர் பார்க்க ,அதே போல் அதே  கிழவர் வந்து மாவு கேட்க ,முனிவரும் தந்தார் .பிறகு படுத்துறங்க அந்த கிழவர் முனிவரிடம் ‘எவ்வுள் ‘ என்று கேட்க முனிவரும் தன் இடத்தையே  காட்டி ‘இவ்விடத்தில்  படுத்துக்கொள்ளவும் ‘ என்றார் .மறுகணமே அந்த கிழவராக வந்த பெருமாள்  முனிவருக்கு தன்னுடைய சுயரூபத்தை காட்டி அருளினார் . பின்பு முனிவரின் வேண்டுகோளின் படி இவ் இடத்திலேயே சயன கோலத்தில் சேவை தந்தார் . இறைவன் முனிவரிடம் வரம் கேள் என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவர்களது பிரச்சனையை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவான் அவ்வாறே அருள் செய்து எழுந்தருளியதாக இவ் தல வரலாறு கூறுகிறது .

Sri Veeraraghava Perumal Temple- Thiruvallure

வைத்திய வீரராகவர் : இத்தலத்தில் சேவை தரும் வீரராகவருக்கு வைத்திய வீரராகவர் என்ற பெயரும் உண்டு .இவரே உற்சவமூர்த்தியாக உள்ளார் . மற்றும் பிணிகளை நீக்குவராகவும் இருக்கிறார் . தொடர்ந்து 3 அமாவாசைக்கு இவ் தலத்திற்கு வந்து பெருமாளை வேண்டி கொண்டால் தீராத வியாதிகளும் தீரும் என்று நம்பப்படுகிறது . குறிப்பாக வயிற்றுவலி ,கைகால் வலி ,காய்ச்சல் ஆகியவை குணமாகிவிடுகிறது .மற்றும் கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெறுக இத்தல பெருமாளை வேண்டிக்கொள்கிறார்கள் .

இவ் கோயிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது .இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை திருக்கல்யாணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது .இங்குள்ள கல்வெட்டுகள் 9 ஆம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியை பற்றி குறிப்பிடுகின்றன .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-veeraraghava-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் :

விஸ்வரூப தரிசனம் காலை 6 .00

பக்தர்கள் தரிசனம் காலை 6 .00 மணி முதல் 7 .30 வரை

காலை 8 .45  முதல் 11 .00  வரை , 11 .45 முதல் 12 .00  வரை

மாலை 4 .00 – 5 .45 , 6 .30 – 8 .00  வரை

செல்லும் வழி:

திருவள்ளூர் பேருந்து நிலையத்தின் மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 45 km தொலைவில் உள்ளது . நிறைய பேருந்து வசதிகள் மற்றும் சென்னை சென்ட்ரல் இருந்து ரயில் வசதிகளும் உள்ளன . அருகில் சிவன் கோயிலும் இங்கிருந்து சுமார் 5 km தொலைவில் திருப்பதி செல்லும் சாலையில் தேவார பாடல் பெற்ற தலமான திருப்பாசூர் வாலீஸ்வரர் கோயிலும் உள்ளது .

Location And Photo:

English : This temple one of 108 divya desam. God here shined in Sayana position. Abishek to lard is performed with performed oil only.Hruthapadhani spring is considered more sacred than the holy ganga andit believed that it cleanses devotees even from the very thenking of a sin. any sick person praying here continously on three new moon days is cured of diseases also pray for child born and hapy wedding reliefs from any untold hardship and suffering.

Leave a Reply