Sri Sattainathar Temple- Sirkazhi

ஸ்ரீ சட்டநாதர் கோயில் – சீர்காழி

Sri Sattainathar Temple- Sirkazhi

இறைவன் : சட்டைநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,தோணியப்பர்

இறைவி : பெரியநாயகி , திருநிலைநாயகி

தல விருச்சம் : பாரிஜாதம் ,பவளமல்லி

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள்

புராண பெயர் : பிரம்மபுரம் ,சீர்காழி

ஊர் : சீர்காழி

மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,மாணிக்கவாசகர் ,அருணகிரிநாதர் ,அப்பர்

தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தளங்களில் இது 14 வது தலம். சிவனின் தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் 14 வது தலம் ஆகும் . அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகரை பற்றி பாடியுள்ளார் .சக்திபீடங்கள் 51 தலங்களில் இத்தலம் 11 வது தலமாகும் .

Sri Sattainathar Temple- Sirkazhi
Tks Google

பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வந்ததால் இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும் ,அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருளுகின்றார் .இவர்கள் இருவரும் ஆலயத்தின் நடுவில் ஒரு குன்றுபோல் அமைப்பில் உள்ள இடத்தில வீற்றியிருக்கிறார்கள் .இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டார்கள் .

இக்கோயிலில் ஈசன் மூன்று மூர்த்தங்களாக அருள்புரிகிறார் .பிரம்ம தேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் ,கிழக்கு பார்த்த வண்ணம் அருள் செய்கிறார் .இவர் லிங்க வடிவில் காட்சி கொடுக்கிறார் .இவரின் வலது புறம் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார் . பிரம்மபுரீஸ்வரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும் ,பெரியநாயகி அம்மனும் குரு மூர்த்தி வடிவில் அருள்புரிகிறார் .தோணியப்பர் , பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்ம தேவர் ,மஹாவிஷ்ணு ,சரஸ்வதி ,லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கைலாய காட்சி பெறுகிறார்கள் .இதற்கு அடுத்து சில  படிகள் ஏறி சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர் ,சங்கம வடிவினராக உள்ளார் .

இரண்யனை வதம் செய்த நரசிம்ம மூர்த்தியால் உக்கிரம் குறையவில்லை இதையடுத்து சிவபெருமான் நரசிம்மரோடு போரிட்டு ,அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக்கொண்டார். இதனால் இவருக்கு ‘சட்டைநாதர் ‘என்ற பெயர் பெற்றார் .இவர் பைரவரின் தலையை ஏற்றவர் .நின்ற கோலத்தில் வலது கரம் சின் முத்திரை காட்டுகிறது .இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது .தெற்கு கோபுர வழியை ஒட்டி வலம்புரி மண்டபத்தில் அஷ்டபைரவராக உள்ளனர் .

Sri Sattainathar Temple- Sirkazhi
Tks ganeshnlr.blogspot for photo

திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த இடம் .தோணியப்பர் அம்பிகையிடம் கூற ,அம்பாள் ஞானப்பால் பொற்கிண்ணத்தில் கொடுக்க சம்பந்தர் அருந்தி ஞானத்தை பெற்ற இடம் .இங்குள்ள பிரம்ம தீர்த்த கரையில் தான் சம்பந்தர் பெருமாள் ஞானப்பாலையுண்டார்.இவரது வீடு ஞானசம்பந்தர் தெருவில் உள்ளது .தற்போது பாடசாலையாக இயங்குகிறது .

அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .அம்பாள் கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீசாமளாதேவி ,ஸ்ரீஇச்சாசக்தி ,ஸ்ரீஞானசக்தி,ஸ்ரீகிரியாசக்தி ஆகியோர் உள்ளனர் .இவ்பதி 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும் .

Sri Sattainathar Temple- Sirkazhi
Tks ganeshnlr.blogspot for photo

18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவசமாதி ஆகியுள்ளார் .இவரது ஜீவசமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது .இங்கிருந்து சட்டைநாதரை காணலாம் .வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் செய்து இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி வடை மாலை அணிவித்து பாசி பருப்பு ,பாயாசம்  நைவேத்தியம் செய்யப்படுகிறது .

சுமார் 1400 வருடங்களுக்கு முன்னாள் பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக ,சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது .சித்திரை பிரமோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரம் அன்று இவ்விழா நடைபெறுகிறது .

கணநாதா நாயனார் அவதரித்த தலம்.இவருடைய திருவுருவச் சிலை இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -9 .00 வரை

செல்லும் வழி:

சிதம்பரத்தில் இருந்து சுமார் 25 கி மீ தொலைவில் சீர்காழி உள்ளது .சிதம்பரம் மயிலாடுதுறை வழியில் இவ்பதி அமைந்துள்ளது .நகரின் மத்தியில் இவ் கோயில் அமைந்துள்ளது .  

This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 14th Shiva Sthalam on the northern bank of the river Cauvery in Chozha Nadu (Vadakarai).God Shiva in this temple is a Swayambumurthi.This is the 11th Shakti Peetas – Goddess Parvathy graces this temple as Mahalakshmi.

This is the birth place of the renowned saint Thirugnanasambanthar – the first of the four Samaya Kuravars (Nalvar).

Location:

Om Namashivaya!

Leave a Reply