ஸ்ரீ பாலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் – சிங்கப்பெருமாள் கோயில்
மூலவர் : ஸ்ரீ பாலாத்ரி நரசிம்மர் பெருமாள்
உற்சவர் : ஸ்ரீ ப்ரஹ்லாத வரதர்
தாயார் : ஸ்ரீ அஹோபிலவல்லி தாயார்
விமானம் : பிரணவ கோடி விமானம்
தீர்த்தம் : சுத்த புஷ்கரணி
தல விருச்சம் : பாரிஜாதம்
புராணப்பெயர் : படலாத்ரிபுரம்
ஊர் : சிங்கப்பெருமாள் கோயில்
மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு
மலையை குடைந்து பல்லவர்கள் கட்டிய கோயில் . இக்கோயில் சிறந்ததொரு புராண கோயிலாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோயிலை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது . நாம் அனைவரும் முக்கண்ணனுடைய ஈசனை தரிசித்திருபோம் ஆனால் இத்தலத்தில் ஸ்ரீ நரசிம்மர் முக்கண்ணுடையராக காட்சி தருகிறார் .
நரசிம்மர் அவதார காலத்தில் இவ்விடத்தை சுற்றி பெரிய காடு இருந்ததாகவும் , அக்காட்டில் ஜாபாலி என்னும் மகரிஷி தலம் தவம் வந்ததாகவும் , வேண்டுகோளுக்கு இணங்க , ஸ்ரீ நரசிம்மர் இரண்யனை வதம் பண்ணியவுடன் உக்ர நரசிம்மராக காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது . 1500 வருடங்கள் முற்பட்ட பல்லவர்கள் காலத்து குடைவரை கோயிலாகும் .
நரசிம்மர் இங்கு 8 அடி உயரத்தில் உக்கிர நரசிம்மராக சேவை தருகிறார் . இவர் சிறிய 200 இருந்து 300 மீட்டர் உயரம் கொண்ட சிறிய பாறை அமைப்புடைய மலையின் உள் அமைந்துள்ளது . நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன . இந்தக்கோயிலில் கிரிவலம் மிகவும் பிரசித்துப்பெற்றது. நரசிம்மர் சாளிக்ராமம் மற்றும் சஹஸ்ர நாம மாலை அணிந்துள்ளார் . ஆர்த்தி காண்பிக்கும் போது மூன்றாவது கண்ணை நாம் தரிசிக்கலாம் . இதை நாம் பார்த்தால் நாம் வாழ்வில் ஏற்பட்டுள்ள எல்லா துன்பங்களும் பறந்துபோகும் .
அது மட்டும் இல்லாமல் எல்லா நரசிம்மர் கோயில்களிலும் நரசிம்மர் இடது காலை மடித்து வைத்து வலது காலை தொங்கவிட்டபடி தரிசனம் செய்வார் , ஆனால் இத்தலத்தில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டபடி மிகப்பெரிய மூர்த்தியாக அருள்புரிகிறார் . இத்தகைய கோலத்தை காண்பது அரிது .
பரிகாரம் :
கடன் தொல்லை ,வழக்குகளில் வெற்றி கிடைக்க ,செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்க இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது . திருவாதிரை மற்றும் ஸ்வாதி நட்சத்திரக்காரர்கள் , ராகு திசை நடப்பவர்கள் ,சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் நன்மை கிட்டும் . கோயிலின் பின்புறம் உள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும் . திருமணவரம், குழந்தைபாக்கியம் , கல்வியில் சிறந்து விளங்க இம்மரத்தில் சந்தானம் , குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள் .
திறந்திருக்கும் நேரம்
காலை 7 .00 – 12 .00 மாலை 4 .30 – 8 .30 வரை
செல்லும் வழி:
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் தாம்பரத்தில் இருந்து சுமார் 22 km தொலைவில் சிங்கப்பெருமாள் கோயில் உள்ளது . பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது .
More Photos
https://alayamtrails.blogspot.com/2021/03/sri-padaladri-narasimhar-temple.html
Location Map :