கர்ப்பரட்சாம்பிகை கோவில்- திருக்கருகாவூர்

இறைவன் : முல்லைவனநாதர்
இறைவி : கருகாத்தநாயகி , கர்ப்பரட்சாம்பிகை
தலவிருட்சம் : முல்லை
தல தீர்த்தம் – பால்குளம் , பிரம்மதீர்த்தம்
ஊர் : திருக்கருகாவூர்
மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர் , திருஞானசம்பந்தர்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
–திருஞானசம்பந்தர்
குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும் , குழந்தையை நல்லமுறையில் சுக பிரசவமாக பெற்று எடுக்க இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக ,பஞ்ச ஆரண்யத் தலங்களில் முல்லை வனமான இத்தலம் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வரும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது .
தேவாரம் பாடல் பெற்ற தென் காவேரிகரை சிவத்தலங்களில் இது 18 வது தலமாகும் , பாடல் பெற்ற 274 தலங்களில் 81 வது தேவார தலமாகும் . கி.பி 7 நூற்றாண்டு கோயில் இது
கோயில் அமைப்பு :
கிழக்கு பார்த்தபடி ஐந்து நிலை ராஜகோபுரம் அதன் எதிரே அமைந்துள்ள திருக்குளம், ‘ஷீரகுண்டம்’ (பால்குளம் ) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள். தென் பக்கத்தில் ஒரு நுழைவு வாயில் உள்ளது .
உள்ளே நுழைந்தவுடன் நாம் வசந்தமண்டபத்தை காணலாம் . வசந்த மண்டபத்தை ஒட்டி விசாலமான இடத்தையும் நாம் காணலாம் . பின் நாம் உள்ளே நுழைந்தால் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்தியை தரிசிக்கலாம் .
முல்லைவனநாதர் :
உள்ளே நுழைந்தால் கருவறையில் இறைவன் முல்லைவனநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் இருக்கிறார் .
இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வந்தால் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் ,தக்ஷணாமூர்த்தி ,பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளார்கள் .
உள் பிரகாரத்தில் இரண்டு நந்தி ,இரண்டு பலிபீடம் , 63 நாயன்மார்கள் , சந்தனாச்சாரியார் ,நால்வர்கள், நிருதி விநாயகர் மற்றும் சாஸ்தா சன்னதி , முருகன் ,கஜலக்ஷ்மி ,ரத அமைப்புடன் சபா மண்டபம் , நித்துருவர் பூஜித்த சிவலிங்கம், தல விருச்சம் ஆகியவைகளை நாம் தரிசனம் செய்வோம் .
சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளதால், இந்த முல்லைவன நாதர் கோயில் திருக்கருகாவூர் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது.
கோயிலை சுற்றி அழகிய நந்தவனம் காணப்படுகிறது .வடக்கு பக்கம் இறைவி கர்ப்பரட்சாம்பிகை தனி சன்னதியில் காட்சிதருகிறார் . இவ் தலத்தில் அம்மனே பிரதானமாக உள்ளார். கர்ப்பரட்சாம்பிகை, திருமணம் ஆகாத பெண்களுக்கு, குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாய் விளங்குகிறாள் .
கர்ப்பரட்சாம்பிகை
கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். கர்ப்பரட்சாம்பிகை இடது கையை இடுப்பில் வைத்த நிலையில் காட்சி தருகின்றாள். சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வருகிறாள்.தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போது கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்த காணிக்கையை செலுத்துகிறார்கள்.
கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். மற்றும் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவதில்லை , கரு கலைவது,கர்ப்ப வேதனை இவைகள் இத்தலத்தில் வந்து வணங்கினால் ஏற்படுவது இல்லை .
இக்கோயிலில் அம்பாளின் திருவடியில் வைத்து மந்திரித்து விளக்கெண்ணெய் தருகிறார்கள் அதை பிரசவ நேரத்தில் வயிற்றில் தடவி வந்தால் இவ்வித பேறுகால ஆபத்துகளோ ,துன்பங்களோ ஏற்படுவதில்லை என்று நம்பப்படுகிறது .
இக்கோயிலே ஒரு சோமேஸ்கந்தர் அமைப்பு உடையது இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையே முருகன் சன்னதி உள்ளது அதுவே குழந்தை பாக்கியம் பெற காரணமாகிறது .
குழந்தை இல்லாதவர்கள் அம்மன் பாதத்தில் மந்திரித்து வைத்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு வாய்க்கப்பெறும். இக்கோயிலில் நெய் மற்றும் எண்ணையை விற்பனை செய்கிறார்கள் .
திருமணம் ஆன தம்பதிகளுக்கு எவ்வளவு செல்வம் வந்து போனாலும் குழந்தை இல்லையென்றால் வெறும் வாழ்க்கையாய் போய்விடும். இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.
வரலாறு :
முல்லைவனமாக இந்த கோவில் தலத்தில் நித்துருவர், வேதிகை என்ற இரு தம்பதியர்கள் வாழ்ந்தனர். குழந்தை பேரு இல்லாத இவர்கள் முல்லைவனத்து நாதரையும், அம்மனையும் வணங்கி வந்தனர்.இதனை அடுத்து வேதிகை கருவுற்றாள், ஒரு நாள் நித்துருவர் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் வேதிகை மிகவும் கர்ப்பத்தில் அவதிப்பட்டாள். அந்த நிலையில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்டு வந்தார். வேதிகை மயக்க நிலையில் இருந்ததால் பிச்சை கேட்டு வந்தவருக்கு உணவு கொடுக்க இயலவில்லை.
அவள் அவதி நிலையில் இருப்பதை அறியாத இந்த முனிவர் கோபம் கொண்டு சாபமிட்டார். சாபத்தால் கருவில் உள்ள குழந்தை கலைந்தது.இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.
அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு ‘நைதுருவன்’ எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை.
இவ்வாறு பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.
கல்வெட்டுகள் :
இது சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் , சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன,
முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் “ என்று தலம் குறிக்கப்படுகின்றது.இத்திருக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் பல்லவ காலச் சிற்பக் கலை நுணுக்கத்தோடு கூடியவை.
மதுரை கொண்ட கோபுர கேசரிவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழன் போன்றோர் காலத்திய கல்வெட்டுக்கள் இத்திருக்கோவிலின் சுற்று மதிற்சுவர்களிலும், எம்பெருமானின் கர்ப்பக்கிரகச் சுவர்களிலும், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபங்களிலும் காணப்படுவதாக, இத்திருக்கோவில் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தல சிறப்புக்கள் :
பஞ்ச ஆரண்யத் தலங்களில் முல்லை வனமான இத்தலம் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வரும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது .
இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு ‘பவரோக நிவாரணன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது. இவ் கோயில் உள்ள இடம் முன்னர் முல்லை வனமாக இருந்தது.
பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.
இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் சிறப்புடையது.
முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்.. தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல், முதுகுன்றம் – நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும்.
இத்திருத்தல புராணத்தை அம்பலவாணப் பண்டாரம் பாடியுள்ளார். நான்மணி மாலை, இரட்டை மணி மாலை வீரபத்திர சுவாமிகள் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தந்தாதி ஆலந்தூர் கோவிந்தசாமிப்பிள்ளையும், வடமொழி ஸ்லோகங்கள் சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷதரும் பாடியுள்ளார். அம்பிகை ஸ்தோத்திரங்களை டி.எஸ். வைத்திநாதன் பாடியுள்ளார்.
இத்திருக்கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் சற்று மாறுபட்ட நிலையில் இருக்கம் சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் சூரியன் பார்த்தவாறு நின்றிருக்கும். நவக்கிரகங்கள் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தருகின்றனர்.
சுகப்பிரசவம் ஆக இதை ஜெபிக்கவேண்டும்
ஓம் கர்பரக்ஷாம்பிகாயை ச வித்மஹே
மங்கள தேவதாயை ச தீமஹீ தன்னோ
தேவி பிரச்சோதயாத்
திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம்
காலை 6 .00 மணி முதல் பகல் 12.30 மணி வரையில், மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை .
தொலைபேசி எண் : 4374 273502, 4374 273473,
Temple Photos:
https://alayamtrails.blogspot.com/2025/05/sri-garbarakshambigai-temple.html
செல்லும்வழி :
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம்.
Location:
Sri Garbarakshambigai Temple – Thirukarukavur
This is the only place where the Pancha Aranyatam is the first to visit for the absence of childbirth and the disorders of pregnancy and the disruption of the baby.
It is also a place where the 64 Shakti Peethas are the first heroic Shaktiyamman.
It is the 18th head of the South Kaverikarai in the Shivathalam, which received the Devaram song, and the 81st of the 274 heads of the song. It is the 7th century temple of AD
Temple System:
As seen in the East, the five -level Rajagopuram is located in the opposite direction of it. This means a pond mixed with the goddess Kamadhenu. There is an entrance to the south side.
Once we enter, we can see the spring. We can also find a spacious place in the spring hall. Then we can see the altar, flag and Nandi if we enter.
Mullaivanathar:
In the sanctum sanctorum, Lord Mullaivananathar is blessed with self -esteem. Cancer is a Shivalinga Thurmani. The scars on the Sivalingam are still seen. Since he is made of cancer, the originator is not anointed. Only the Bunuku law is passed. His sanctuary is a self -indulgent self -indulgence.
If you come out after seeing the Lord, they are Ganesha, Dakshanamoorthy, Brahma and Durga.
In the interior, we will see the two Nandi, two altar, 63 Nayanas, Sandanacharya, fourvar, Niruti Vinayagar and Shasta Shrine, Murugan, Kajalakshmi, Ratha Siva Lingam, Nituru Pooja and Thala Vibhacha.
It is said that the Mullaivana Nathar Temple is the philosophy of Thirukkarukavur Somaskandar.
There is a beautiful Nandavanam around the temple. Amman is the mainstay of this head. She is an eye -catching goddess for women who are not married and children who have no child.
Pregnancy
Pregnancy is a spectacular goddess for pregnant women. The pregnancy is placed on the left hand in the waist. Chatarpuja is a standing kolam. She is the first hero of the 64 Shakti Peethas in this place.
Child health doctors from different parts of Tamil Nadu are in the process of taking off the offerings alone when they look at the pregnancy. They come to Tirukkurukavur once every 3 months and pay the offer to the womb.
People who are not miscarriage come to this place and worship. And the worshipers who come here do not cause childbirth, the embryo, and the pregnancy of pregnancy do not occur in this place.
It is believed that this is not a time of dangers or suffering if it is applied to the stomach during childbirth.
The temple has a Somaskandar organization and the Murugan shrine between the Lord and the Amba is the cause of the child’s privilege.
People who are not miscarriage come to this place and worship. And the worshipers who come here do not cause childbirth, the embryo, and the pregnancy of pregnancy do not occur in this place.
It is believed that this is not a time of dangers or suffering if it is applied to the stomach during childbirth.
The temple has a Somaskandar organization and the Murugan shrine between the Lord and the Amba is the cause of the child’s privilege.
If the childless people eat the ghee in the feet of Amman for 48 days, the child will be blown away. They sell ghee and oil in the temple.
No matter how wealth the married couples get, the child will be a mere life. Women living in the town located in this Tirukoil are confirmed that there has been no miscarriage.
History:
Two couples named Nituruwar and Vedika lived in the temple. They worshiped Mullaivanatu Nathara and Amman. At that point, the sage named Uttupapadar was begging. The man who begged was unable to give food because the Vedic was unconscious.
The sage, who did not know that she was in a state of affliction, cursed with anger. The baby in the womb was dissolved by the curse. It was then that she appealed to Ambika who worshiped Nitham for her condition.
As a god of protecting the mother, the wide embryo in the body of the Vedic, in a pitcher, waited until the day when it was the whole child. When she was born as a whole child, the child named the child as a Naiduruwan model and joined her parents.
Thus, the first time in the earth, the heroine of the pregnancy, the heroine of the pregnancy of the pregnancy of the modern technology of today’s modern technology.
Inscriptions:
It is a temple built by the Cholas, the Cholas, the Koparakasarivarman period inscriptions of Madurai,
In the first Rasarasan inscription, the sculpture of the temple is referred to as “Thirukarukavur”.
The inscriptions of the temple, such as Kesarivarman, Rajarajan I, Rajendran I, Kulothungan I and Vikrama Chola I, are found in the walls of the temple, in the walls of the Emperor’s womb and the Maha Halls.
Head Specials:
This site is the first to be seen in the Pancha Aranyatam and is the first to be seen as the first hero of the 64 Shakti Peethas.
This place is also known as the Pavaroka Relief Model because he solved the ailments of the Mullaivana Nathar reaction. Source Swayambu Murthy; Surface The cancer became the earthenware. There is a scar around the Mullaikodi in Swami Thurmani. The place in the temple was formerly the Mullaitivu forest.
It is a belief that the Lord is the hungry Sundarar to give the Lord and the water.
This site is a special prayer, Murthy, Talam and Theertham.
Gnanam Sambandar sung as a specialtime .. Thillai Vanam Kasi Thiruvarur Mayuram Mullaivanam Koodal, Mudukundram – Paddy Kalarkanji
Gnanam Sambandar sung as a specialtime .. Thillai Vanam Kasi Thiruvarur Mayuram Mullaivanam Koodal, Mudukundram – Paddy Kalarkanji
Ambalavanabha Bandaram sang this legend. Nammani evening, twin o’clock in the evening is sung by Veerapatra Swamis. Pathanthadi Alandur Govindasamy Pillai and Vedasi Slokas have sung by Salgalipuram Brahma Sri Anantarama Deekshadar. Ambika Gospels Vaidinathan has sung.
The other eight planets around the sun are standing as the sun stands in the sun. The Navagrahas are displayed with Abhaya-Varada seals.
Opening time and location
From 6:00 am to 12.30 pm, 4.30 pm to 8.15 pm.
Telephone number: 4374 273502, 4374 273473
way:
The Thirukkurukavur Thirumalam is located on the banks of the Virtha Cauvery, 6 km south of Babanasam and 10 km north of Saliyamangalam on the Thanjavur -Nagapattinam highway on the road from Thanjavur to Kumbakonam.