Tag: Kasi Viswanathar Temple

Sri Kasi Viswanathar koil-Kumbakonam

Sri Kasi Viswanathar koil-Kumbakonam

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – கும்பகோணம் இறைவன் : காசிவிஸ்வநாதர் இறைவி : விசாலாட்சி தல விருச்சகம் : வேப்பமரம் தல தீர்த்தம் : மகாமக குளம் புராணபெயர் : திருக்குடந்தை காரோணம் ஊர் : கும்பகோணம் மாவட்டம் : …

Read More Sri Kasi Viswanathar koil-Kumbakonam

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – சாத்தனுர் (திருமூலர் அவதார தலம் ) 63 நாயன்மார்களில் ஒருவரும் 18  சித்தர்களில் ஒருவரான  திருமூலர்  அவதார தலம் . திருமூலர் அவதாரம் : திருக்கைலத்தில் இருந்து யாத்திரையாக ஒரு சிவனடியார் அகத்தியரை காண தென் இந்தியாவை நோக்கி வந்தார் . அவர் காவேரி கரையோரம் உள்ள இந்த கிராமத்தின் வழியாக சென்றபோது இவ்விடத்தில் மேய்ச்சலுக்காக வந்த பசுக்கள் ஒரு இடத்தில கூடியிருந்ததை கண்டு அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார் .எல்லா பசுக்களும் கண்ணீர் சிந்தியவாறு நின்று இருந்ததை கண்டு அவற்றின் நடுவில் சென்று பார்த்தார் .அப்போது அங்கு நெற்றியில் விபூதியையும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்திருந்த ஒருவர் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்துபோனார் . அவனும் தன்னை போல் ஒரு சிவா பக்தன் என்பதை கண்டு வருத்தமுற்றார் .இதனை நாட்களாக பசுக்களை வளர்த்து பராமரித்த தன் மேய்ப்பவன் இறந்ததை கண்டு அந்த பசுக்கள் அழுவதை கண்டு கவலையுற்றார் .அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது ,அங்கு இருந்த ஒரு  மறைவான இடத்திற்கு சென்று தரையில் படுத்துக்கொண்டார் .கண்களை மூடிக்கொண்டு நமசிவாயத்தை சொல்லிக்கொண்டு உயிரின் மைய புள்ளியை உற்றுக் கவனித்தார் ,இன்னும் ஊர்ந்து கவனிக்க அது அசைந்து இருபுறமும் நகர்ந்தது பின்பு தன் உடலில் இருந்து நழுவி சென்று பேய்ப்பவனின் உடலில் சென்று அடைந்தது. ஆமாம் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார் !மேய்ப்பவன் தன் உடலில் உயிர் வந்தவுடன் அவன் மெதுவாக எழுந்தான் .இதை கண்டா பசுக்கள் பயத்தில் அந்த இடத்தில் இருந்து விட்டு வேகமாக சென்று அவைகள் தன் இருப்பிடத்தை அடைந்தன .எல்லா பசுக்களும் வந்துவிட்டன ஆனால் அவைகளை மேய்க்க சென்ற தன் கணவன் வரவிலேயே என்று எண்ணி அவள் தவித்தாள் .அப்போது மூலன் அங்கே வந்தான் ,அவள் மகிழ்ச்சியுற்று அவனது கைகளை பற்றினாள் .உடனே மூலன் அவள் கைகளை உதறி விட்டு உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி நடந்தவைகளை பற்றி கூறினார் .உடனே அவள் கதறி அழுதாள் இதை அறிந்து ஊர் மக்களும் அழுதார்கள் .  மூலன் தன் உடலை விட்டு வந்த இடத்திற்கு சென்றார் .ஆனால் அங்கு அவர் உடல் இல்லை ,இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார் இனிமேல் இந்த உடல்தான் நாம் இருக்கவேண்டுமா என்று வருத்தமுற்றார் .அப்போது இறைவன் இவருக்கு திருகாட்சிதந்தார் .அவர் இவரிடம் எல்லா உயிர்களும் ஒருவருடையதுதான் .மரம் ,செடி ,விலங்குகள் ,மனிதன் என்று எல்லா உயிர்களிலும் நீ இருக்கிறாய் உடல் மட்டுமே வேறு ஆகும் உயிர் ஒன்றுதான் என்று மூலன் ரகசியத்தை உயர்த்திவிட்டு சென்றார் . அந்த மூலன் வேற யாரும் இல்லை ,வருடத்திற்கு ஒரு திருமந்திரம் மூலம் 3000 வருடங்கள்  வாழ்ந்து 3000 திருமந்திரங்களை தந்த திருமூலர் தான் அவர் . செல்லும் வழி: . மாயவரம் – கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு அல்லது நரசிங்கப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும் . பேருந்து வசதிகள் இல்லை . அருகில் உள்ள கோயில்கள் : திருவாவடுதுறை பாடல் பெற்ற தலம், நரசிங்கப்பேட்டை நரசிம்மர் ,நரசிங்கப்பேட்டை சுயம்பு நாதர் கோயில் Location:

Read More Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

Sri Kasi Viswanathar Temple- Tenkasi

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி இறைவன் : காசி விஸ்வநாதர் அம்பாள் : உலகம்மன் தல விருச்சகம் : செண்பகமரம் தல தீர்த்தம் : காசி தீர்த்தம் ஊர் : தென்காசி மாவட்டம் : திருநெல்வேலி தமிழ்நாட்டில் உள்ள …

Read More Sri Kasi Viswanathar Temple- Tenkasi

Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் – நசரத்பேட்டை (சென்னை) அதிகம் அறியப்படதா சிவன் கோயில் ,சென்னைக்கு அருகில் பூந்தமல்லியிலிருந்து 2 km தொலைவில் நசரத்பேட்டை என்ற ஊரின் மையத்தில் உள்ளது . மூலவர் காசி விஸ்வநாதர் ,அம்பாள் காசி விசாலாக்ஷி அம்மையார் …

Read More Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)