Sri Pavala Vanna And Pachai Vanna Perumal Temple- Kanchipuram

ஸ்ரீ பவளவண்ணன் மற்றும் பச்சை வண்ண பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்

Sri Pavala Vanna Perumal - Kanchipuram

இறைவன் : பச்சைவண்ணன் ,பவளவண்ணன்

தாயார் : மரகதவல்லி ,பவளவல்லி

கோலம் : வீற்றிருந்த கோலம் விமானம் : ப்ரவாள விமானம்

தீர்த்தம் : சக்ர தீர்த்தம்

புராண பெயர்:திருபவளவண்ணம்

ஊர் : காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

மங்களாசனம்: திருமங்கையாழ்வார்

  • இரண்டு திவ்ய தேசங்கள் சேர்ந்தது ஒரே திவ்யதேசமாகும் . இவ்விரு கோயில்களும் எதிர் எதிரே அமைந்துள்ளது ,108 திவ்யதேசங்களில் . இத்தலம் 56 தலம் ஆகும் .
  • பச்சைவண்ண பெருமாள் மரகத மேனியாக பச்சை வண்ணத்தில் காட்சி தருகிறார் . புதனின் அதிதேவதை விஷ்ணு புதன் நிறம் பச்சை ஆதலால் இவருக்கு பச்சை வஸ்திரம் சாற்றி துளசியால் அர்ச்சனை செய்தால் புதன் தோஷம் போகும் என்பது நம்பிக்கை .
  • சப்த ரிஷிகளில் ஒருவரான மரிஷி மகரிஷிக்கு தனது ராமர் அவதாரத்தை தனியாக காட்டியதால் தாயார் இல்லாமல் தனியாக இருக்கிறார் .
  • மரகதவல்லி தாயார் இங்கு சீதா தேவியாக காட்சி தருகிறார் . பெரும்பாலும் மஹாலக்ஷ்மி அருகிலேயோ அல்லது முன்னாடியோ தான் ஸ்ரீ சக்கரம் அமைந்திருக்கும் ஆனால் இங்கு தாயாரின் பீடத்திலேயே ஸ்ரீ சக்கரத்தை ப்ரிதிஷ்டை செய்துள்ளார்கள்

பவளவண்ண பெருமாள் கோயில் :பிரம்மா தன்னை படைத்த விஷ்ணுவை நோக்கி யாகம் நடத்தினார் அவ் யாகத்திற்கு தனது தர்ம பத்தினியான கலைவாணியை அழைக்காமல் யாகத்தை நடத்தியதால் கோபம் முற்ற கலைவாணி யாகத்தை தடுத்து நிறுத்த அசுரர்களை அனுப்பினாள் இதனை கண்டு பிரம்மா விஷ்ணுவிடம் முறையிட அவர் சினம் கொண்டு பவளம் போல் சிவந்த முகம் கொண்டு காட்சி அளித்து அசுரர்களை அழித்ததால் பவளவண்ண பெருமாள் என்று அழைக்கப்பட்டார் .

  • இங்குள்ள சந்தான கிருஷ்ணருக்கு குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டி பரிகாரம் செய்கிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/pavala-vanna-perumal-and-pachai-vanna.html

செல்லும் வழி:
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து காமாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த இரண்டு கோயில்களும் உள்ளன .

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .30 -11 .30 மாலை 5 .00 -8 .00

Location :

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *