Tag: indiatempletour

Sri Vilvanatheswarar Temple – Thiruvalam

Sri Vilvanatheswarar Temple – Thiruvalam

ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் கோயில் – திருவலம் இறைவன் -வில்வநாதீஸ்வரர், வில்வநாதர் இறைவி – தனுமந்யாம்பாள், வல்லாம்பிகை தலவிருச்சம் – வில்வம் தலதீர்த்தம் – கௌரி தீர்த்தம் பாடியவர்கள் – சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,அருணகிரிநாதர் சிவனின் தேவார பாடல் பெற்ற 276 சிவா தளங்களில் 242 வது தலமாகும் ,தொண்டை நாட்டு தேவார தலங்களில் 10 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன திருப்புகழில் இத்தல முருகரை பாடியுள்ளார் . இந்த ஊர் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் மற்றும் சாளுக்கிய ஆட்சி காலத்திற்குட்பட்ட வந்தப்புறம் அல்லது தீக்காலி வல்லம் என அழைக்கப்பட்டது . முன்மண்டபத்துடன் கூடிய 4 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அதை கடந்து உள்ளே சென்றால் இடது புறத்தில் மௌன சாமிகள் திருப்பணி செய்து கட்டுவித்த அம்பிகேஸ்வரர் சன்னதி மற்றும் பெரிய நாகலிங்க மரம் உள்ளது . வலதுபுறத்தில் கௌரி தீர்த்தம் உள்ளது . பின்பு 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தை உள்ளே சென்றால் உற்சவர் மண்டபம் . பக்கத்தில் காசி விஸ்வநாதர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார் . கொடிமரத்திற்கு முன் விஷ்ணு பாதம் அமைந்துள்ளது அவர் இத்தலத்து  இறைவனை பூஜித்துள்ளார். கொடிமரத்தின் பின்னால் மிகப்பெரிய வடிவிலான சுதையால் ஆன நந்தி சாமிக்கு எதிர்புற திசையை நோக்கி பார்க்கிறது .அதுபோல் மூலவர் சந்நிதியின் முன் உள்ள நந்தியும் சாமிக்கு எதிர்புற திசையை நோக்குகிறார் . சாமியை நோக்கியவாறு அதிகார நந்தி நின்றபடி உள்ளார். நந்தி இவ்வாறு பார்ப்பதற்கு ஒரு புராண காரணம் உள்ளது .இவ் நந்தியானது கஞ்சனகிரி என்ற மலையை நோக்கியவாறு இருக்கிறது .அது இபோது காஞ்சனகிரி என்று அழைக்கப்படுகிறது . இம்மலையில் கஞ்சன் என்ற அரக்கன் இருந்து வந்தான் , இவ் மலையில் இருந்துதான் அப்போது திருவளத்தில் உள்ள ஈசனுக்கு தினமும் தீர்த்தம் வரும் ,ஒருநாள் இவ்வாறு வருகையில் அதை தடுப்பதிற்காக கஞ்சன் அங்கு வந்தான் .  உரியோர் செய்வதறியாது இறைவனை வேண்டினார் .இறைவன் நந்தி பெருமானை அனுப்பி வைத்தார் .அவரும் காஞ்சனோடு போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின் ,லலாடம் விழுந்த இடம் ‘லாலாபேட்டை ‘ என்றும் , சிரசு விழுந்த இடம் ‘சிகராஜபுரம் ‘,வலக்கால் அறுபட்டு விழுந்த இடம் ‘வடகால் ‘, இடது கால் அறுபட்டு விழுந்த இடம் ‘தென்கால் ‘, மணிக்கட்டு விழுந்த இடம் ‘மணியம்பட்டு ‘ என்றும் ,’குளகயநல்லூர்’ என்ற ஊர்  மார்பு பகுதி விழுந்த  இடம் என்று வழங்கப்பெற்றது . இவையெல்லாம் திருவலத்தை சுற்றி 3 km தொலைவில் உள்ளது . வாயிலை கடந்தவுடன் நேரே சிவலிங்க திருமேனியில் வில்வநாதீஸ்வரர் தரிசனம் தருகிறார் . வாயிலை கடந்தால் ,தட்சணாமூர்த்தி சீடரான சனக முனிவரின் ‘திருவோடு ‘ சாமிக்கு நேராக வெளியே பிரதிஷ்டை  செய்துள்ளார்கள் . கருவறை அகழி போன்ற அமைப்பில் உள்ளது .கருவறை மூலத்திருமேனியும் ,உற்சவ திருமேனியும் மேலும் கீழுமாக இருவரிசையில் வைக்கப்பட்டுள்ளது . மூலவர் கோபுரத்தில் எல்லா நட்சத்திரங்களின் சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது . சங்கரநாராயணர் வலதுபுற மாடத்தில் உள்ளார் .இடது புறத்தில் ‘பாதாளஸ்வரர் ‘ சன்னதி உள்ளது . மூலவர் சுயம்புவாக சதுர பீடத்தில் வீற்றியுளார் .இங்குள்ள விநாயகர் கையில் மாங்கனி உள்ளது . ஊருக்குள் ‘நிவா ‘ நதி ஓடுகிறது . இந்த நதிக்கரையில்தான் இக்கோயில் அமைந்துள்ளது .இறைவன் தீர்த்தத்தை பொருட்டு ‘நீ வா ‘ என்றழைக்க இவ் நதி அருகில் ஓடி வந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது . தற்போது ‘பொன்னை ஆறு ‘ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது . திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 – 12 .00 , மாலை 4 .00 -8 .00 வரை செல்லும் வழி: சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 130km  தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 15 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் அமைந்துள்ளது . அருகில் உள்ள கோயில்கள் : 1. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோயில் – மேல்பாடி -10 km 2 . அரிஞ்சய  சோழன் பள்ளிப்படை – மேல்பாடி 3. வள்ளி தாயார் பிறந்த இடமும் ,முருக பெருமான் வள்ளியை காதலித்த இடமும் ஆன வள்ளிமலை – 16 km Location Map

Read More Sri Vilvanatheswarar Temple – Thiruvalam

Sri Veeranarayana perumal Temple – kattumannarkoil

Sri Veeranarayana perumal  Temple – kattumannarkoil

ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில் இறைவன் : வீரநாராயண பெருமாள் தாயார் : மரகதவல்லி தாயார் தல விருச்சம் : அடுக்கு நந்தியாவட்டை தல தீர்த்தம் : தேவ புஷ்கர்ணி ஊர் :  காட்டுமன்னார்கோயில் மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம். மற்றும் நாத முனிகள் மற்றும் ஆளவந்தான் அவதார தலம் . கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் , கோயிலுக்கு முன்பாக கோயிலின் குளம் உள்ளது . …

Read More Sri Veeranarayana perumal Temple – kattumannarkoil

Sri Panangatteswarar Temple – Panayapuram

Sri Panangatteswarar Temple – Panayapuram

ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர்  கோயில் – பனையபுரம் இறைவன் –   பனங்காட்டீஸ்வரர் இறைவி – மெய்யம்மை தலவிருச்சம் – பனைமரம் தல தீர்த்தம் – பத்மதீர்த்தம் ஊர் – பனையபுரம் மாவட்டம் – விழுப்புரம் பாடியவர்கள் – திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 231 வது தலம். நடுநாட்டு தேவார தலங்களில் 20 வது தலம் . இக்கோயிலின் கருவறை சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழனின் காலத்தை சேர்ந்தது .சிங்கமுக தூண்கள் விஜயநகர காலத்தை சேர்ந்தது …

Read More Sri Panangatteswarar Temple – Panayapuram

Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

ஸ்ரீ  கோதண்டராமர் கோயில் – மேற்கு மாம்பலம் , சென்னை மூலவர் : ஸ்ரீ   கோதண்டராமர் தாயார்  :  அரங்கநாயகி தாயார் ஊர் : மேற்கு மாம்பழம் , சென்னை இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .200 வருட பழமை வாய்ந்தது .  மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் …

Read More Sri Kothandaramar Temple – West Mambalam,Chennai

Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

ஸ்ரீ  இருதயாலீஸ்வரர் கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் – திருநின்றவூர் மூலவர் :  இருதயாலீஸ்வரர் தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை  விருச்சம் : வில்வம் ஊர்  : திருநின்றவூர்  மாவட்டம் : திருவள்ளூர்  சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி …

Read More Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

Akshaya Tritiya Significance & pooja Methods

Akshaya Tritiya Significance & pooja Methods

அட்சயதிரிதியை சிறப்புகளும் பூஜை முறைகளும் திருமாலின் மார்பில் திருமகள் இடம் பிடித்த ,முதல் யுகமான கிருதாயுகத்தில் பிரம்மா உலகை படைத்த ,லட்சுமி குபேரர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற நாள் இந்த சிறப்புமிக்க அட்சய திருதியை . இந்த நாளில் தான் பகவான் கிருஷ்ணர் தன நண்பர் குசேலனுக்கு ஒரு பிடி அவல் கொடுத்து அவருடைய வறுமையை போக்கி செல்வதில் திளைக்க செய்தார் . ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வறுமையில் வாடிய அயாசகன் …

Read More Akshaya Tritiya Significance & pooja Methods

Lord Sarabeshwara

Lord Sarabeshwara

ஸ்ரீ சரபேஸ்வரர் சரபேஸ்வரர் சந்தோசம் நிலைத்திருக்க வரம் அருளும் தெய்வ மூர்த்தம் .இயற்கை சீற்றங்களாலும் ,பரிகாரங்கள் செய்ய முடியாத கஷ்டங்கள் ,வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்கள் ஆகியவைகள் அகலவும் ,தீவினைகள் ,விஷபயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் வழிபட வேண்டும் என்று வியாசர் மகரிஷி அறிவுறுத்துகிறார் . நம்முடைய பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி ,சூனியம் ,ஏவல் போன்றவைகளில் இருந்து விடுபட இவரை வணங்கவேண்டும் . இவருக்கு கும்பகோணம் அருகில் திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் கோயில் ,சென்னை …

Read More Lord Sarabeshwara

Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri kachapeswarar Temple- Kanchipuram

ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் இறைவன் : கச்சபேஸ்வரர் இறைவி : சௌந்தராம்பிகை தல தீர்த்தம் : இஷ்ட சித்தி தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு இக்கோயில், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி ,பழம்பெருமை, கலைசிறப்பு ,பட்டு நெசவு ,கோயில்கள் என பல புகழ் கொண்ட கஞ்சி மாநகரத்தில் பிரதான சாலையான ராஜவீதியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆலய  சிறப்பு : திருமால் முதலிய தேவர்களும் ,முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் …

Read More Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri Subramaniya Swamy Temple – Kumarakottam

Sri Subramaniya Swamy Temple – Kumarakottam

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – குமரக்கோட்டம் (காஞ்சிபுரம் ) இறைவன் : சுப்ரமணியர் இறைவி : தெய்வானை ,வள்ளி தல விருச்சம் : மாமரம் தல தீர்த்தம் : சரவணப்பொய்கை புராண பெயர் : குமரக்கோட்டம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு விழா காலங்கள் : ஐப்பசி மாத சஷ்டி ,வைகாசி மாத விசாகம் நட்சத்திரம் மகாகவி காளிதாசனால் ‘நகரேஷு காஞ்சி’ என்று புகழப்பட்ட காஞ்சிபுரம் புனிதமான பஞ்சபூத தலங்களுள் பிருத்திவி …

Read More Sri Subramaniya Swamy Temple – Kumarakottam

Sri Valeeswarar / Bharadvajeshwarar Temple- Kodambakkam (Chennai)

Sri Valeeswarar / Bharadvajeshwarar Temple- Kodambakkam (Chennai)

ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் கோயில் – சென்னை இறைவன் : பாராதவாஜேஸ்வரர், வாலீஸ்வரர் இறைவி : சொர்ணாம்பிகை தல விருச்சம் : நாகலிங்க மரம் ஊர் : கோடம்பாக்கம் , சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு இவ்தல இறைவன் வாலி அரசன் பூஜை செய்த தலங்களில் ஒன்று ஆதலால்தான் திருவாலீஸ்வரர் என மற்றொரு பெயரால் அழைக்கப்படுகிறார் .பாரத்வாஜ முனிவரால் பூஜிக்கபட்ட இறைவன் என்பதால் ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார் .ஸ்ரீபாரத்வாஜா கோத்ரகாரர்கள் வணங்கும் கோயிலாகும் .வாலி …

Read More Sri Valeeswarar / Bharadvajeshwarar Temple- Kodambakkam (Chennai)