Sri Yoga Narasimhar Temple – Velachery

ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில்  – வேளச்சேரி

Sri Yoga Narsimhar Temple - Velachery

மூலவர் : ஸ்ரீ  யோக நரசிம்மர்

தாயார் :ஸ்ரீ அமிர்தபாலவல்லி

இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது . இத்தலம் சோழர் காலத்தை சேர்ந்ததாகும்  . இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . அண்மையில் தான் இந்த ஆலயம் மிக அழகாக பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷகம் நடத்தப்பட்டது .

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் மேற்கிலும் ஒரு நுழைவாயில் உள்ளது .அமிர்தபாலவல்லி தாயார் வலது புறத்தில் தனி சன்னதி உள்ளது அவர் கிழக்கை நோக்கி உள்ளார் . நுழைவாயிலின் இடது புறத்தில் சக்கரத்து ஆழ்வார் ,கோதண்டராமர் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியவர்கள் தனித்தனி சன்னதியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர் .

மூலவர் யோக நரசிம்மர் மிக அழகாக கம்பிரமான தோற்றத்துடன் நான்கு கரத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார் . அவரை நாம் பார்க்கும்போதே நம் மனதில் ஒரு விதமான பரவச நிலையை அடைவதை உணரலாம் .இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்ரம் வைத்துள்ளார் , மற்ற இரு கைகளையும் தன் கால்களின் முட்டியின் மீது வைத்துள்ளார் .

இங்குள்ள வேதநாராய பெருமாள் தன கையில் உள்ள சுதர்சன சக்கரத்தை அசுரர்களின் மீது வீசுவதிற்கு தயார் நிலையில் உள்ளது போல் வைத்துள்ளார் . இவருடைய பித்தளை கவசம் ஆனது சோழர் காலத்தை சேர்ந்த பழமையான ஒன்றாகும் .

இங்கு சிறுவன் பிரகலா தனுடன் உரையாடுவதற்கு ஏற்றவாறு சந்நிதிக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதாழ்வார் நிற்கிறார்.

இந்த கோவில் அமைப்பு மற்றும் சுற்று புறத்தில் உள்ள கலை நயமிக்க பாலகர்கள் மற்றும் நரசிம்மருடைய சிலைகளை காண்பதற்கு நாம் கோடி கண்கள் வேண்டும் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7.00-10.30 மற்றும் மாலை 5.00 – 10.௩௦

கோவில் செல்லும் வழி :

விஜய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து குருநானக்  கல்லூரி மற்றும் தண்டீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ளது .

Location:

Photos :

https://alayamtrails.blogspot.com/2021/04/sri-yoga-narsimhar-temple-velachery.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *