Sri Yoga Narasimhar Temple-Narasingampettai

ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில் – நரசிங்கம்பேட்டை

Sri Yoga Narasimhar Temple-Narasingampettai
  • காவேரி கரையில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . நரசிம்மர் என்றாலே உக்கிரமானவர் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்கும் அவர் இவ் புண்ணிய தலத்தில் யோக நரசிம்மராக அருள்தருகிறார் .
  • இரணியகசிபு வதத்திற்கு பிறகு தன் கோபம் தணிய இறைவன் அமர்ந்த தலங்களில் இவ் தலமும் ஒன்றாகும் . நரசிம்மர் இரணியகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷத்தில் இருந்து விடுபட இக்கோயிலுக்கு அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்புநாதர் சிவனை பூஜித்து தோஷத்தில் இருந்து விடுபட்டார். இவ்வூருக்கு நரசிங்கம்பேட்டை என்ற சிறப்பு பெயர் இதனாலேயே ஏற்பட்டது என்று கூறலாம் .
Sri Yoga Narasimhar Temple-Narasingampettai

சுமார் 1000 வருடங்கள் முற்பட்ட கோயிலாகும் . விஜயநகர அரசர்களால் இக்கோயில் புனரமைக்கப்பட்டது.

  • விஸ்தாரமான கருவறையில் நரசிம்மர் பெருமாள் நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார் . சங்கு, சக்கரம் இரு கைகளில் ஏந்திக்கொண்டு மற்ற இருக்கரங்களை யோக முத்திரையில் வைத்து அமர்ந்த கோலத்தில் மிகவும் சாந்த முகத்துடன் நமக்கு சேவை சாதிக்கிறார்
  • இக்கோயில் இந்துசமய அறநிலைத்துறை நிர்வகித்து வருகிறது , ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது .
Sri Yoga Narasimhar Temple-Narasingampettai

திறந்திருக்கும் நேரம் :

காலை : 11 .00 -12 .00 மணி வரை
அர்ச்சகர் பெயர் : பாலகிருஷ்ணா பட்டாச்சாரியார்
தொடர்பு எண்: 9790859270 ,0435 -2430564

செல்லும் வழி:

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுமார் 18 தொலைவில் நரசிங்கப்பேட்டை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடது புறம் நடந்து சென்றால் இக்கோயிலை அடையலாம்

Location:

1 Comment

  1. senthil

    nice

    ‘டெலிகிராம் ஆப்’-ல் தினமலர் செய்திகள்

    https://www.dinamalar.com/news_detail.asp?id=2418245

    சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் ‘டெலிகிராம் ஆப்’ மூலமும் படிக்கலாம்.
    தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் ‘டெலிகிராம் ஆப்’ மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். ‘டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள்.

    #Dinamalardaily #Dinamalartelegram

    t.me/dinamalardaily

    Reply

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *