Sri Viswaroopa Lakshmi Narasimar Temple- Kattavakkam

ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோயில் – கட்டவாக்கம் (தென்னேரி )

  • 16 அடி உயரம் கொண்ட விஸ்வரூப நரசிம்மர்
  • 2007 ஆண்டு உருவாக்கப்பட்டது
  • ஆதார பீடம் ,கூர்ம பீடம் ,பத்ம பீடம் ,அனந்த பீடம் ,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களில் மேல் கம்பிரமாக வீற்றியிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும் ,வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வராத ஹஸ்தத்துடன் குளிர கடாக்ஷிக்கும் பாணியானது வந்தாரை வாழவைக்கும் பெருமாள் என்பதை காட்டுகிறது .
  • மடியில் வீற்றியிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் அழகான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதை காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
  • இங்கு உள்ள நரசிம்மருக்கு 12 பற்கள் அமைந்திருக்கின்றன ,இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளை குறிக்கின்றன . திருமுக மண்டலத்தில் அவரது இடது கண் சந்திரன் ,வலது கண் சூரியன் ,நெற்றி கண் செவ்வாய் ,நாசி சுக்ரன் ,மேல் உதடு குரு ,கீழ் உதடு புதன் ,வலது காதில் கேது ,இடது காதில் ராகு,நாக்கில் சனி பகவான் ஆக நவகிரஹங்கள் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாக இருப்பதால் இது நவகிரக பரிகார தலமாகும் .
  • பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும் , தாங்கியிருக்கும் ஆயுதம் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும் .கூர்ம பீடம் கூர்ம அவதாரத்தையும் ,வஜ்ரதம் வராஹ அவதாரத்தையும் ,வில் அம்பு ராம அவதாரத்தையும் , சக்ரமானது க்ரிஷ்ணாவதாரத்தையும் குறிக்கிறது .
    மேலும் தாங்கியுள்ள ஆயுதங்கள் ஜய விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வாதம் பண்ண பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள்(வஜ்ர நகம் ,வஜ்ரதம்ஸ்டகம்,சக்கரம் ,வில்,அம்பு ) யாவற்றையும் இந்த நரசிம்மரே தாங்கியிருப்பது விசேஷ அம்சமாகும் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-viswaroopa-lakshmi-narasimar-temple.html

முகவரி மற்றும் செல்லும் வழி
விஸ்வரூப நரசிம்மர் சன்னதி
கட்டவாக்கம் ,தென்னேரி போஸ்ட் -631 604
காஞ்சிபுரம் மாவட்டம் ,தமிழ்நாடு

செல்லும் வழி
பேருந்து வழி
ஆலந்தூர் பேருந்து நிலையம் – பேருந்து எண் 79
தாம்பரம் -பேருந்து எண் -579 ,579 A
ph – 9445908870 ,9444356767

காரில் செல்ல

1 . தாம்பரம் – கட்டவாக்கம் -(வாலாஜாபாத் -சுங்குவார் சத்திரம் சாலை)
2 . ஸ்ரீபெரும்புதூர் -ஒரகடம் ஜங்ஷன் – வாலாஜாபாத் -கடவாக்கம்

இவ்விடம் செல்லுபவர்கள் உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை எடுத்து செல்லவும். அருகில் கடைகள் இல்லை .

Location:

1 Comment

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *