ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் -திருவேற்காடு

இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி : பாலாம்பிகை
தல தீர்த்தம் : வேத தீர்த்தம் ,பாலி தீர்த்தம்
தல விருச்சகம் : வெள்வேல மரம்
இடம் : திருவேற்காடு
மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23 வது தலம்.தேவார சிவ தலம் 274 ல் இது 256வது தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண். அருணகிரிநாதர் தன் ‘திருப்புகழ்’ இல் இத்தல முருகனை பற்றி பாடியுள்ளார் .
தல வரலாறு : சிவபெருமான் பார்வதி திருமணம் திருமணம் செய்த நேரத்தில் தேவர்கள் முதலியோர் வட திசை நோக்கி சென்றதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்த்து அதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் . இறைவனின் திருமணத்தை காணமுடியவில்லை என்ற அகத்தியரின் வருத்தத்தை போக்க சிவபெருமான் தன் பார்வதியுடன் இத்தலத்தில் தன் திரு மணகோலத்தில் காட்சி அளித்தார் .
பிருகு முனிவர் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக பரசுராமர் என்ற நாமத்தில் அவதரித்தார் .அவர் இத்தலத்தை வழிபட வந்தபோது உடன் ரேணுகையும் வந்தார் . அந்த ரேணுகையையே இப்போது ‘கருமாரி அம்மன் ‘என்று அழைக்கப்படுகிறது.
இறைவன் மீண்டும் உலகை படைக்க நினைத்து ரிக்,யஜுர் ,சாமம் மற்றும் அதர்வண ஆகிய 4 வேதங்களை இக்கோயிலில் வெள் எருக்கு மரங்களாக வளர செய்தார் . இவ் மரமே இக்கோயிலின் தலவிருச்சகமாகும் .இதனால் இத்தலம் திருவேற்காடு என்ற பெயர் பெற்றது .
இத்தலத்தில் உள்ள முருகன் முன்னே சிவலிங்கம் உள்ளது .இது வேறு எங்கும் காணமுடியாத அமைப்பாகும் .இத்தலத்தில் உள்ள நவகிரக சன்னதி எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளது .முருகப் பெருமான், சுப்பிரமணியராகக் காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க வேலால் கிணறு உருவாக்கி , இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். அந்த ‘ஸ்கந்த லிங்கம்’ முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்த்திரத்தில் புலமை பெற்ற பராசமுனிவர் இக்கோயில் இறைவனை வழிபட்டுள்ளார் ,ஆதலால் ஜோதிடம் தொழிலை செய்பவர்கள் ,ஜோதிடத்தை கற்பவர்கள் இக்கோயிலில் வந்து வணங்கினால் தன் தொழிலில் பெரும் முன்னற்றத்தை அடையலாம் .
இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் . லிங்கத்திற்கு பின்னாடி சிவபெருமான் பார்வதி தேவியுடன் திருமண கோலத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறார் .
திருமண தடை மற்றும் திருமணம் செய்ய விரும்புவர்கள் அகத்தியருக்கு திருமணம் காட்சி தந்த இத்தல இறைவனை வந்து முறைப்படி பரிகாரம் செய்தால் திருமணம் நடக்கும் .
திறந்திருக்கும் நேரம்
காலை 6 .00 -12 .௦௦ வரை,மாலை 4 .00 -8 .00 மணி வரை
அமைவிடம்
கோயம்பேட்டுலிருந்து திருவேற்காட்டுக்கு நிறைய பேருந்துகள் உள்ளன . மற்றும் வேலப்பன்சாவடி சிக்னல் இருந்து வலது புறம் திரும்பினால் திருவேற்காடு வரும்.
Location and more photos
https://goo.gl/maps/vshGvRcieHbCDUtQ8
Om Namasivaya